CWC 5 யின் டைட்டில் வின்னர் இவர்தான்... இது ரசிகர்களின் கருத்து!

CWC season 5
CWC season 5
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது இறுதிப்போட்டி நெருங்கி வருகிறது. அந்தவகையில், ஏற்கனவே டைட்டில் வின்னரை விஜய் டிவி தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்று ரசிகர்கள் கணிக்கின்றனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த ஐந்தாவது சீசன் பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமானது. கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் நகரந்தது. இந்த சீசனில் ஏராளமான வித்தியாசமான சுற்றுகள் வைக்கப்பட்டன.

குடும்பச்சுற்று, வெளிநாட்டவர்கள் சுற்று, பாட்டிகள் மற்றும் குட்டீஸ்கள் ரவுண்ட் என மிகவும் கலகலப்பாகச் சென்றது. அதேபோல், சில படக்குழுக்களும் வந்து நிகழ்ச்சியை கோலாகலப்படுத்தினர். முதலில் நான்கு வாரங்களுக்கு ஒருமுறை எவிக்ஸன் இருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் மீண்டும் பழைய ஃபார்முக்கு கொண்டு வந்தனர்.

அதாவது இரண்டு வாரங்களுக்கு ஒரு எவிக்ஸன் என கொண்டுவந்தனர். திவ்யா மற்றும் விடிவி என இரண்டு பேர் எவிக்ட் செய்யப்பட்ட நிலையில், போன வாரம் நான்கு போட்டியாளர்களே மீதமிருந்தனர். சுஜிதா, பிரியங்கா, அக்ஷய் கமல் மற்றும் இர்ஃபான் ஆகியோர் செமி ஃபைனல் சுற்றுக்கு முன்னேறினர்.

இதனையடுத்து சென்ற வாரம் நடைபெற்ற போட்டியில் சுஜிதா முதலாவதாக இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது பிரியங்கா மற்றும் மூன்றாவது இர்ஃபான் தேர்வு செய்யப்பட்டனர். வரும் வாரம் வைல் கார்டு சுற்று நடக்கும். அதிலிருந்து ஒருவர் தேர்வு செய்யப்பட்டு இறுதி சுற்றுக்கு முன்னேறுவார்.

இதற்கிடையே மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதற்கு காரணம் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஒரு தொகுப்பாளினிதான் காரணம் என்று பகிரங்கமாக வெளியிட்டார். இந்த விஷயம் இப்போது பூதகரமாக வெடித்த நிலையில், ரசிகர்கள் அது பிரியங்கா என்பதை கணித்துவிட்டனர். ஆகையால், சமூகவலைதளங்களில் பிரியங்காவிற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதேபோல், மணிமேகலைக்கு ஆதரவு குரல்கள் எழுகின்றன.

இதையும் படியுங்கள்:
சின்னத்திரை தொகுப்பாளினிகளுக்குள் மோதலா?
CWC season 5

இது குறித்து ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரியங்காவிற்கு விஜய் டிவி ஆதரவாக உள்ளது. ஆகையால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக பிரியங்கா தான் தேர்வு செய்யப்படுவார் என்று ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஒருவேளை பிரியங்கா டைட்டில் வின்னராகிவிட்டார் என்றால், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து விடுவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

logo
Kalki Online
kalkionline.com