பள்ளி நினைவுகளைச் சிறகடிக்கச் செய்யும் கனா காணும் காலங்கள் 3: ஓடிடி ரிலீஸ்!

Kana Kannum Kalangal
Kana Kannum Kalangal
Published on

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தான் புதிய படங்களும், ஓடிடி தொடர்களும் வெளி வருகின்றன. அவ்வகையில் இன்று ஆகஸ்ட் 30 இல் பள்ளி மாணவர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை கதைக்களமாகக் கொண்ட கனா காணும் காலங்கள் சீசன் 3 ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க!

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஓடிடி தளங்களின் வருகையால், திரைக்கு வந்த படங்கள் ஓடிடியிலும் ரிலீஸாகி வரவேற்பைப் பெறுகின்றன. மேலும் சில படங்கள் நேரடி ஓடிடி படங்களாகவும் வெளிவருகின்றன. இது தவிர்த்து, ஓடிடியில் வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களும் வெளிவருகின்றன. அவ்வரிசையில் பள்ளிப் பருவத்தை நம் கண் முன்னே கொண்டு வரும் கனா காணும் காலங்கள் தொடரின் மூன்றாம் பாகம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸாடரில் இன்று வெளியாகி இருக்கிறது.

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் பள்ளி மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த முதல் தொடர் கனா காணும் காலங்கள் தான். இத்தொடரின் முதல் பருவம் கடந்த 2006 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதன்பின் இத்தொடரின் அடுத்தகட்டமாக கல்லூரி மாணவர்களை வைத்து புதிய தொடர் உருவானது. இதன் பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு கனா காணும் காலங்கள் தொடரின் இரண்டாம் பாகம், இரண்டு சீசன்களாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸாடரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து தற்போது மூன்றாம் பாகம் வெளியாகி இருக்கிறது. பள்ளி மாணவர்கள் இரண்டு குழுக்களாக எதிரும் புதிருமாக சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள், காமெடி கலந்த காதல் காட்சிகள் மற்றும் சென்டிமெண்ட் காட்சிகள் என எதற்கும் குறைவில்லாமல் கடந்த சீசன்களில் இத்தொடர் ரசிகர்களை கவர்ந்தது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இத்தொடரின் சிறு வீடியோ 'நியூ ஏஜ் நியூ பேஜ்' என்ற பாடலுடன் இணையத்தில் வெளியாகி டிரெண்ட் ஆனது. கனா காணும் காலங்கள் தொடருக்கு தமிழ்நாடு முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏனெனில், இத்தொடரைப் பார்க்கும் போது பலருக்கும் அவர்களின் பள்ளிப் பருவ நினைவுகள் ஞாபகத்திற்கு வந்த செல்லும். ஹாட் ஸ்டாரை சப்ஸ்கிரைப் செய்தவர்கள் மட்டும் தான் இத்தொடரைப் பார்க்க முடியும். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று 4 எபிசோடுகள் வெளிவரும்.

இதையும் படியுங்கள்:
ஓடிடி தளங்களின் பார்வை கன்னடத்தின் பக்கம் திரும்புமா?
Kana Kannum Kalangal

கனா காணும் காலங்கள் சீசன் 3 தொடரில் குக் வித் கோமாளியில் கலக்கிய சக்தி, நண்டு ஜெகன் மற்றும் பிர்லா போஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒவ்வொரு சீசனுக்கும் புதுப்புது மாணவர்களை களமிறக்குவதும் இத்தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

பள்ளியில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை வெப் தொடரில் காண்பது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் கதையின் களத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா? காதல் காட்சிகள் எப்படி இருக்கும்? நண்பர்களுக்கு இடையேயான ஒற்றுமை எப்படி இருக்கும்?

தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com