வசூலில் பட்டையை கிளப்பிய ‘காந்தாரா சாப்டர் 1’ இப்போ ஓடிடியில்... எப்போ தெரியுமா?

‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
kantara a legend chapter-1
kantara a legend chapter-1
Published on

நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கி 2020-ல் வெளிவந்த திரைப்படம் காந்தாரா. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததுடன், வசூலிலும் சாதனை படைத்தது. கர்நாடக மாநிலத்தின் துளு பேசும் மக்கள் இன்றும் பின்பற்றி வரும் சடங்குகளில் முக்கியமான ஒன்று "பூத கோலா". இந்த தெய்வ வழிபாட்டையும், காடுகளுக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் அடிப்படையாக வைத்து ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவான இந்த படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் ப்ரீகுவல் ‘காந்தாரா சாப்டர் 1’ என்ற பெயரில் கடந்த 2-ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகி ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 125 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், உலகளவில் இதுவரை ரூ.818 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இப்படம் இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது. இந்நிலையில், வரும் அக்டோபர் 31ம் தேதி ஆங்கிலத்திலும் படம் வெளியாக போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி ஜோடியாக ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க இவர்களுடன் இணைந்து ருக்மிணி வசந்த், குல்ஷன், ஜெயராம், பிரமோத் ஷெட்டி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பழங்குடிகள் - மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

இயக்குநராகவும், நடிகராகவும் ரிஷப் ஷெட்டி தனது 100 சதவீத உழைப்பை இந்தப் படத்தில் கொடுத்துள்ளார். அவருக்கு ஈடுகொடுத்து உழைச்ச ஆர்ட் டைரக்டர், இசையமைப்பாளர் மற்றும் படத்தில் பணிபுரிந்த ஒவ்வொரும் கொடுத்த பங்களிப்பு தான் இந்தப் படத்தைப் பெரிய லெவலுக்குக் கொண்டுபோக உதவி இருக்குனு சொல்லலாம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போது பல்வேறு தடைகளும், அமானுஷ்யங்களும், 4 பேர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ‘காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் எப்போது ஒடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் காத்து கொண்டிருந்த நிலையில் அது குறித்த மாஸான அப்டேட்டை தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
வசூலில் பட்டையை கிளப்பும் காந்தாரா சாப்டர் 1: இந்த ஆண்டில் முதலாவதாக ஆயிரம் கோடி உறுதியாகுமா..?
kantara a legend chapter-1

அதன்படி, உலகெங்கும் வசூல் வேட்டை செய்து வரும் 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி பிரைம் ஓடிடி தளத்தில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாள ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com