மதகஜராஜா படம் வெளியாகி 2 வாரங்களே ஆன நிலையில், ஓடிடியில் ரிலீஸாகியிருக்கிறது.
2012ம் ஆண்டே மத கஜ ராஜா படத்தை வெளியிடுவதற்காக சுந்தர் சி வேக வேகமாக படத்தை எடுத்து முடித்தார். ஆனால், சில பல காரணங்களால் வெளியாகவில்லை. இந்தப் படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தில் விஷால் பாடிய ஒரு பாடல் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த படம் திடீரென்று பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது
அதேபோல் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது.
12 வருடங்கள் கழித்து வெளியாகும் படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? அந்த காலத்தில் எடுத்த ஒரு படத்தை இன்றைய காலத்தில் ஏற்றுக்கொள்வார்களா? போன்ற சந்தேகம் அனைவருக்குமே இருந்தது. சுந்தர் சி கூட பயந்தார்.
ஆனால், யாரும் எதிர்பாரா விதமாக இந்தப் படம் நன்றாக ஓட ஆரம்பித்தது. ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.
இதன் விளைவாக மதகஜராஜா படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது. முதல் 12 நாளில் மதகஜராஜா திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல் செய்து அசத்தியுள்ளது.
இத்தனை வருடங்கள் கழித்து வெளியான ஒரு படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா என்று கோலிவுட் திரையுலகமே வாய் பிளந்தது. இப்படி நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் படத்தை அதற்குள் ஓடிடியில் ரிலீஸாக்கியுள்ளனர்.
ஆனால் இந்தியாவில் அல்லாமல் வெளிநாட்டில் Einthusan எனும் ஓடிடி தளத்தில் பணம் கட்டி பார்க்கும் முறையில் இந்த படம் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இப்படத்தின் ஹெச்டி பிரிண்ட் டெலிகிராம் போன்ற பைரசி தளங்களில் தற்போது வெளிவந்து வேகமாக பரவி வருகிறது.
இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் பயன்படுத்தும் ஓடிடியில் இல்லாமல், வெளிநாட்டு ஓடிடியில் ஏன் வெளியாகியிருக்கிறது என்ற குழப்பத்தில் உள்ளனர்.