MERCY(2026) - சினிமா விமர்சனம் : 90 நிமிட கெடு.. மரண தண்டனையில் இருந்து தப்புவாரா கிறிஸ் பிராட்?
ரேட்டிங் (3 / 5)
வகை: சயின்ஸ் பிக்ஷன் க்ரைம் த்ரில்லர்
ஓடிடி: அமேசான் பிரைம்
23/1/2026 அன்று திரையரங்குகளில் வெளியான இந்தப்படம் பிப்ரவரி 20 முதல் அமேசான் பிரைமில் தமிழ் டப்பிங்குடன் கிடைக்கிறது. 60 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவான இப்படம், 53 டாலர் மட்டுமே வசூல் செய்தது.
ஸ்பாய்லர் அலெர்ட் :
அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுக்க உள்ள பிரச்சனை, கோர்ட்டில் ஒரு கேஸ் நடந்தால் தீர்ப்பு வர வருடக்கணக்கில் ஆகும்.அமெரிக்க அரசு இந்த தாமதத்தைக்களைய 'மெர்சி' என்ற ஆர்ட்டிபிசியல் இண்ட்டெலிஜென்ஸ் ஜட்ஜை உருவாக்கி 90 நிமிடங்களில் ஒரு கேசை முடிக்கத்திட்டம் இடுகிறார்கள்.இங்கே வக்கில் வாதம்,வாய்தா எதுவும் கிடையாது.குற்றம் சாட்டப்பட்டவர், ஜட்ஜ் இருவர் மட்டுமே.குற்றத்தை செய்யவில்லை என்பதை அந்த 90 நிமிடங்களில் ஆதாரங்களுடன் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்..
நாயகன் போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் டிடெக்டிவ் ஆக வேலை செய்கிறான்.நாயகன் தன் மனைவி, மகளுடன் 16 வருட இல்லற வாழ்க்கையை இனிதே நடத்தி வருபவன்.ட்யூட்டியில் சக அலுவலக நண்பன் இறந்ததால் அந்த துக்கத்தை மறக்க குடிக்கிறான்.முதலில் அவனுக்கு குடிப்பழக்கம் இருந்தது.ஆனால் திருமணத்துக்குப்பின் அதை விட்டு விட்டான்.இப்போது மன உளைச்சலால் மீண்டும் குடிகாரன் ஆகி விட்டான்.
நாயகி ஒரு கெமிக்கல் கம்பெனியில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார்.அந்த கம்பெனியில் திருட்டுத்தனமாக கெமிக்கல்சை திருடி வெளியே கொண்டு செல்லும் ஊழியனை நாயகி கண்டு பிடிக்கிறார்.
நாயகி தன் கணவன் குடிகாரன் ஆன பின்பு வேறு ஒரு நண்பருடன் பழக்கம் கொள்கிறாள்.இப்படிப்பட்ட சூழலில் ஒரு நாள் நாயகி கொலை செய்யப்படுகிறாள்.சந்தர்ப்ப சூழ்நிலைகள் எல்லாம் அவள் கணவன் ஆன நாயகனை குற்றவாளி என்று சொல்கிறது.நாயகன் கைது செய்யப்பட்டு மெர்சி கோர்ட்டில் நிறுற்றப்படுகிறான்.90 நிமிடங்களில் அவன் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும்.இல்லையெனில் நாயகனுக்கு மரண தண்டனை.
நாயகியின் கொலைக்கு காரணம்:
குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவனா?
மனைவியின் புதிய ஆண் நண்பரா?
அல்லது அலுவலகத்தில் திருடியபோது மாட்டிய ஊழியனா?
மீதித் திரைக்கதை இந்த மர்மத்தை அவிழ்க்கிறது.
உலகின் சிறந்த உதட்டழகி பட்டத்தை வென்ற ஏஞ்சலீனா ஜூலி நடித்த வாண்ட்டட் Wanted(2008) படத்தை இயக்கிய டிமுர் பெக்மம் பெபோவ் தான் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார்.இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில் நடக்கும் இதன் திரைக்கதையை எழுதி இருப்பது மார்க்கோ வான் பெல்லே.
நாயகன் ஆக நடித்திருப்பது கிறிஸ் பிராட். 90 நிமிடப்படத்தில் 60 நிமிடங்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடியே உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டிய சவாலான பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளார். க்ளைமாக்சில் ஆக்சன் சீனிலும் நன்கு பங்களிப்பு செய்திருக்கிறார்.
மெர்சி என்னும் ஜட்ஜ் ஆக ரெபக்கா பெர்குசன் பிரமாதமாக நடித்திருக்கிறார்.முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாத ரோபோடிக் நீதிபதியாக (AI Judge) தத்ரூபமாக நடித்துள்ளார்.மிஷின் இம்பாசிபிள் படத்தில் நடித்தவர் தான் இவர்.மற்ற அனைவருமே அவரவர் கேரக்டரை சிறப்பாக மெருகேற்றி இருக்கிறார்கள்.
சபாஷ் டைரக்டர்
1.பெற்றோருக்கு தெரியாமல் டீன் ஏஜ் மகன்/மகள் சோசியல் மீடியாவை எப்படி எல்லாம் தவறாக உபயோகிக்கிறார்கள் என்பதை காட்டிய விதம்.
2. கிளவுட்சில் சேமிக்கப்படும் க்ளிப்பிங்க்ஸ், வீடியோக்கள், போட்டோக்கள் இவற்றை வைத்தே நிரபராதி என நிரூபிக்க வேண்டும் என்ற கதைக்களம் நமக்கு புதுசு.
3.என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் மனித ஜட்ஜூக்கு இருக்கும் மனிதாபிமானம் ,உள்ளுணர்வில் இவன் குற்றவாளியா? இல்லையா? என்பதை கண்டுபிடிக்கும் திறமை இவை எல்லாம் AI ஜட்ஜூக்கு கிடையாது என்பதை சொன்ன விதம்.
4.நாயகன் கண்டுபிடிக்கும் ஒரு ட்விஸ்ட் + படத்தின் டெக்னிக்கல் அம்சங்கள்,க்ளைமாக்ஸ்.
ரசித்த வசனங்கள்
1 "கோர்ட்டில் ஒரு ஜட்ஜா நான் கத்துக்கிட்ட விஷயம்... எல்லாரும் பொய் சொல்வார்கள்!"
2 எனக்கு எதுவும் நினைவில்லை யுவர் ஆனர். மனைவியை கொலை பண்ணுனது கூடவா ?
3 "தப்பு பண்ணுனவங்கதான் ஓடுவாங்க... பயப்படுறவங்களும் ஓடுவாங்க!"
4 "மனிதனா இருந்தாலும், ஏஐ-யா இருந்தாலும் எல்லாரும் தப்பு செய்வாங்க."
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள் :
1. கடந்த 16 வருடங்களாக ஒற்றுமையாக குடித்தனம் செய்த நாயகி. தன் கணவன் கடந்த சில நாட்களாக குடிக்கிறான் என்பதற்காக புது உறவை நாடி செல்வது நம்பும்படி இல்லை.
2. கோர்ட்டில் வேக வேகமாக ஆதாரங்களை காட்டி மறைய செய்வதால் ஆடியன்சால் அதை நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.
3.க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஓரளவுக்கு யூகிக்கக்கூடியதாக உள்ளது.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 13+ க்ளீன் யு
ஃபைனல் கமெண்ட் - வித்தியாசமான சயின்ஸ் பிக்சன் மற்றும் க்ரைம் திரில்லர் பார்க்க விரும்புபவர்கள் தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்.
ரேட்டிங்க் 3/5

