இந்த வாரம் OTT-யில் என்ன பார்க்கலாம்? ஆக்ஷன், த்ரில்லர் என விருந்து படைக்கும் 6 முக்கிய திரைப்படங்கள்..!

OTT  release movies
OTT release movies
Published on

1. The Bluff (2026)

  • மொழி: ஆங்கிலம் / தமிழ் (டப்பிங்)

  • தளம்: அமேசான் பிரைம் (Amazon Prime)

  • வெளியீடு: பிப்ரவரி 25, 2026

பாலிவுட் நடிகை பிரியஙகா சோப்ரா நடித்த ஹாலிவுட் படம் இது. இவர் தமிழிலும் நடித்திருக்கிறார். விஜய் நடித்த தமிழன் படத்தில் இவர் தான் நாயகி.2000-ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்றவரும் இவரே.

இந்தப்படம் 16/2/2026 முதல் திரை அரஙகுகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.19-ம் நூற்றாண்டில் ஒரு பெண் தன் குடும்பத்தைக் காக்கப் போராடும் கதை.ரன்னிங டைம் 101 நிமிடங்கள்.இந்தத் திரைப்படம் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று முதல் அமேசான் பிரைம் தளத்தில் தமிழ் டப்பிங் உடன் காணக்கிடைக்கிறது.இது ஒரு யு படம்.

2. Bridgerton (Season 4 - 2026)

  • மொழி: ஆங்கிலம் / தமிழ்

  • தளம்: நெட்பிளிக்ஸ் (Netflix)

  • வெளியீடு: பிப்ரவரி 26, 2026

உலகப்புகழ் பெற்ற பீரியாடிக் ரொமாண்டிக் டிராமா. இதன் புதிய சீசனில் 4 எபிசோடுகள் உள்ளன. ஒவ்வொரு எபிசோடும் 53 டூ 73 நிமிடங்கள்.விருதுகளைக் குவித்த இந்தத் தொடர், அதன் பிரம்மாண்டமான பின்னணிக்காகப் பெயர் பெற்றது.இதன் முதல் பாகம் 2020ல் வெளிவந்து ஹிட் ஆனது.

3. Honey

  • மொழி: தெலுங்கு / தமிழ்

  • தளம்: சன் நெக்ஸ்ட் (Sun NXT)

  • வெளியீடு: பிப்ரவரி 27, 2026

தெலுங்குப்படமான இதுதமிழ் டப்பிஙகில் வெளியாகிறது.நவீன் சந்திரா நாயகன் ஆக ,திவ்யா பிள்ளை நாயகி ஆக நடித்த சைக்கலாஜிக்கல் திரில்லர் படம் இது.சமீப காலங்களில் இவரது ஸ்க்ரிப்ட் செலக்சன் அருமையாக இருந்து வருகிறது.மதனப்பள்ளியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

4. Accused (2026)

  • மொழி: ஹிந்தி / தமிழ்

  • தளம்: நெட்பிளிக்ஸ் (Netflix)

  • வெளியீடு: பிப்ரவரி 27, 2026

கொங்கனா சென் சர்மா, பிரதீபா நடித்துள்ள சைக்கலாஜிக்கல் மிஸ்டரி த்ரில்லர். ஒரு மகப்பேறு மருத்துவரின் மனைவிக்குத் திருமண வாழ்க்கையில் வரும் மிரட்டல்களைச் சுற்றியே இதன் திரைக்கதை நகர்கிறது.

5. தடயம் (Tadhayam - 2026)

  • வகை: தமிழ் வெப் சீரிஸ்

  • தளம்: ஜீ 5 (Zee5)

  • வெளியீடு: பிப்ரவரி 27, 2026

1999ல் தமிழ்நாடு, ஆந்திரா பார்டரில் நடந்த தொடர் கொலைகளைப்பற்றி இன்வெஸ்டிகேசன் செய்யும் ஒரு போலீஸ் ஆபீசரின் கதை இது.இதில் சப்-இன்ஸ்பெக்டர் அதியமான் ஆக சமுத்திரக்கனி, இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆக ஷிவாதா நடிக்கிறார்கள் .இது ஒரு யு/ஏ படம் 16+

6. சீக்ரெட் ஸ்டோரிஸ்: ரோஸ்லின் (2026)

  • மொழி: மலையாளம் / தமிழ்

  • தளம்: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar)

  • வெளியீடு: பிப்ரவரி 27, 2026

'திரிஷ்யம்' புகழ் ஜீத்து ஜோசப் தயாரிப்பில் சுமேஷ் நந்தகுமார் இயக்கத்தில் வெளிவரும் வெப் சீரிஸ் இது.

மீனா,சஞ்சனா தீபு,வினீத் ,அனிஷமா அனில்குமார் நடித்த வெப் சீரிஸ் இது.ரோஸ்லின் ஆக சஞ்சனா தீபு நடித்திருக்கிறார்.

அடிக்கடி கனவில் பயஙகரமான ஒரே மாதிரி காட்சிகள் வரவே நாயகி அதன் மர்மத்தை துப்பு துலக்க இறங்குவது தான் கதை.பச்சை நிறக்கண்களுடன் இதற்கு முன் நாயகி சந்தித்திராத ஒருவர் அடிக்கடி கனவில் வருகிறார்.சைக்காலஜிஸ்ட் உதவியுடன் நாயகி துப்பு துலக்குகிறார்

நாயகியின் தொடர் கனவுகளும், அதன் பின்னால் உள்ள மர்மங்களுமே இதன் கதைக்களம்.

இதையும் படியுங்கள்:
வசூலில் 'மாஸ்'... ஸ்டைலில் 'கிளாஸ்'! மக்கள் திலகம் காட்டிய 'பாக்ஸ் ஆபீஸ்' வித்தை!
OTT  release movies

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com