இந்த வாரம் ஓடிடியில் வெளியான மற்றும் வெளியாகவுள்ள சீரிஸ், படங்கள் ஆகியவற்றைப் பார்ப்போம்.
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மிகவும் பிரபலமானதுதான் ஓடிடி. திரையரங்குகளில் பார்ப்பதைவிட ஓடிடியில் பார்வையாளர்கள் அதிகம். அதுவும் சிலர் திரையரங்கில் ஒருமுறைப் பார்த்துவிட்டு ஓடிடியில் தோன்றும் நேரமெல்லாம் மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள். அந்தவகையில் இந்த வாரம் இறுதிக்குள் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் சீரிஸ்கள் பார்ப்போம்.
ஸ்குவிட் கேம் சீசன் 2:
உலகம் முழுவதுமுள்ள மக்கள் விரும்பிப் பார்த்த ஒரு சீரிஸ் ஸ்குவிட் கேம். நெட்ஃப்ளிக்ஸில் வெளியான இந்த சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் 2வது சீசன் எப்போது வரும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அந்தவகையில் இன்று இந்த சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக துவங்கியுள்ளது.
அந்தகன்:
ப்ரசாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ஆகா மற்றும் சன் நெக்ஸ்ட் என இரண்டிலும் நாளை வெளியாகிறது. ஏற்கனவே ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
சொர்க்கவாசல்:
ஆர்.ஜே.பாலாஜி செல்வராகவன், சானியா ஐயப்பன் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் 'சொர்க்கவாசல்' படம் வெளியானது. ஒரு உண்மை கதையை தழுவி எடுத்த இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'சொர்க்கவாசல்' டிசம்பர் 27 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.
ஜாலியோ ஜிம்கானா:
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன், அபிராமி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியானது 'ஜாலியோ ஜிம்கானா'. இப்படத்தில் ஒரு பாடல் மீம் மெட்டிரியலாக ஹிட்டானது. இப்படம் டிசம்பர் 27 ஆம் தேதி முதல் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவிருக்கிறது.
இந்த படங்களைத் தவிர 'ரூபன்’ மற்றும் ’வட்டார வழக்கு’ ஆகிய படங்கள் டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் எதிர்பார்த்த சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாவதால், இந்த வாரம் செக்க போடு வாரம் என்றே கூறலாம்.