எனது ஓட்டும் கருத்துக்களும் விற்பனைக்கு அல்ல – ஆர்.ஜே. ஆனந்தி!

RJ Ananthi
RJ Ananthi
Published on

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியைவிட்டு வெளியே வந்த ஆர்.ஜே.ஆனந்தி தனது ஓட்டுகளும் கருத்துக்களும் விற்பனைக்கல்ல என்று பதிவிட்டிருக்கிறார்.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. போன சீசனில் எப்படி பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் இப்போது ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு டீமுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, ரஞ்சித், விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். மேலும் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 6 பேர் பங்கேற்றனர்.

இதையும் படியுங்கள்:
உயர் கிரியேட்டினின் அளவைக் குறைக்கும் 7 உணவுகள்!
RJ Ananthi

இதனையடுத்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா ஆகியோர் வெளியேறியிக்கிறார்கள்.

பிக்பாஸ் தொடரில் தற்போது போட்டியாளர்கள் மத்தியில் போட்டி பொறாமை ஆகியவை வெடித்திருக்கிறது. அந்தவகையில் இந்த வாரம் ஒரு புது டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் போட்டியாளர்களுக்கு குறிப்பிட்ட கற்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை தங்களுடைய பார்ட்னர் உதவியுடன் எதிர் அணியினர் கற்களை எடுக்காமல் பாதுகாக்க வேண்டும். இந்த போட்டியில் ஜெஃப்ரி, ராணவை  தள்ளி இருந்தார்.

இதனால் ராணவுக்கு கடுமையாக அடிபட்டது. ஆனால், அப்போதுகூட சவுந்தர்யா கிண்டல் செய்துக் கொண்டிருந்தார். பின்னர் ராணவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், அவர் மூன்று மாதங்கள் முழுமையாக ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக பிக்பாஸ் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
அன்று யுவராஜ் தந்தை… இன்று அஸ்வின் தந்தை… விளக்கமளித்த அஸ்வின்!
RJ Ananthi

இதற்குப் போட்டியாளர்கள் ராணவிடம் மன்னிப்புக் கேட்டார்கள்.

இப்படியான நிலையில் ஆர்.ஜே. ஆனந்தி ஒரு பதிவைப் போட்டிருக்கிறார். “ரொம்ப விஷமத்தனமான எண்ணம் கொண்டவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியேதான் இருக்கிறார்கள். ஆனால், போட்டியாளர்கள் மத்தியில் இந்த மாதிரியான எண்ணங்கள் கிடையவே கிடையாது. போட்டியாளர்கள் வில்லன்களும் கிடையாது, ஹீரோக்களும் கிடையாது. அவர்களும் தவறு செய்யக்கூடிய மனிதர்கள் தான். என்னுடைய ஓட்டும் கருத்துக்களும் விற்பனைக்கு கிடையாது. என்னால் ஒருவருடைய கொள்கை பரப்பு செயலாளராக இருக்க முடியாது. என்னுடைய ஹவுஸ்மேட் போட்டியை  அவர்களுடைய சொந்த முயற்சியில், சொந்த திறமையில் வெற்றிபெறட்டும்.” என்று பேசியிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com