விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புத்தம்புதிய தொடர் 'லட்சுமி மெஸ்'..!

Lakshmi mess serial
Lakshmi mess serial image source:vijay tv
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடர் 'லட்சுமி மெஸ்' பாண்டியன் ஸ்டோர்ஸ் பாணியில் குடும்பப் பாங்கான கதையம்சத்துடன், குடும்ப உறவுகள் மற்றும் உணர்ச்சிகளை மையப்படுத்தி இந்த தொடர் தயாராகிறது. விரைவில் இப் புதிய தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2, பாக்கியலட்சுமி போன்ற வெற்றித் தொடர்களை இயக்கிய டேவிட் சார்லி தான் இந்தத் தொடரை இயக்குகிறார். ஸ்பெக்ட்ரா புரொடக்ஷன்ஸ் இத்தொடரை தயாரிக்கிறது. 'பொன்னி' தொடரில் நடித்து மக்களின் மனங்களைக் கவர்ந்து புகழ் பெற்ற நடிகை வைஷ்ணவி இத்தொடரில் நாயகியாக நடிக்கிறார். இவருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து புகழ்பெற்ற நிரோஷா -ஸ்டாலின் ஜோடி இத்தொடரிலும் நடிக்கின்றனர். முத்து, நிரோஷா, வசந்த், சங்ரேஷ், மகேஷ் மற்றும் அஜித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த ரியாவும் இந்த சீரியலில் நடிக்கிறார்.

குடும்ப உறவுகளின் உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு, மிகவும் யதார்த்தமான கதைக்களத்துடன் இத்தொடர் உருவாகி வருகிறது. உணவு, கூட்டுக் குடும்பம், குடும்ப பொறுப்புகள், குடும்ப ஒற்றுமை மற்றும் பொறுப்புகளைச் சுமந்து வாழும் ஒரு பெண்ணின் உணர்வுபூர்வமான வாழ்க்கைப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. தன் சுய அடையாளத்தை தக்கவைத்துக் கொள்ளப் போராடும் அதே வேளையில் தனிப்பட்ட கனவுகள், குடும்ப எதிர்பார்ப்புகள் மற்றும் சமூக அழுத்தங்களை சமநிலைப்படுத்தும் ஒரு பெண்ணின் வலிமையை இக்கதை எடுத்துக்காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய தொடரின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்புத் தேதி மற்றும் நேரம் குறித்த அறிவிப்புகள் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொடரின் சுவாரசியமான தலைப்பும், பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடிகள் மற்றும் நம்பிக்கையூட்டும் நட்சத்திர பட்டாளங்களின் அணிவகுப்பும் பார்வையாளர்களிடையே ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. பிரபலமான சின்னத்திரை முகங்கள் இத்தொடரில் நடிப்பதால், அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்பே இந்த சின்னத்திரை சீரியலுக்கான எதிர்பார்ப்புகள் பெரிதும் அதிகரித்து வருகின்றன.

இதையும் படியுங்கள்:
இந்த வாரம் ஓடிடியில் கண்டு மகிழ: துரந்தர் 2 முதல் பேட்ரியாட் வரை..!!
Lakshmi mess serial
logo
Kalki Online
kalkionline.com