

ஜெயச்சந்திரன் ஹாஸ்மி இயக்கத்தில் அஸ்வின் குமார், அர்ச்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்துள்ள ஆக்டோபஸ் என்ற வெப் சீரிஸ் ஜி5 ஒரிஜினல் தளத்தில் வெளியாகியுள்ளது. இதன் கதை என்ன என்று இப்போது பார்க்கலாம்.
அது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு புறநகர் பகுதி. அதன் பெயர் அன்பு நகர். அங்கே பல்வேறு வகையான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கே உள்ள ஒரு வீட்டில் அஸ்வின் குமார் குடியேறுகிறார். அஸ்வினின் நடவடிக்கை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அனைவருக்கும் முன்பே மது அருந்துகிறார். தனது மனைவியை மற்றவர் கண் முன் அடித்து துன்புறுத்துகிறார். இதைப் பார்க்கும் எதிர் வீட்டு பெண்ணான அர்ச்சனா இதை தடுக்க முயற்சிக்கிறார். ஆனால் அர்ச்சனாவை அவமானப்படுத்தி அனுப்புகிறார் அஸ்வின்.
இவரது மோசமான நடவடிக்கைகளை பார்த்து அன்பு நகரில் உள்ள பலர் அவரை கண்டிக்கிறார்கள். ஆனால் அஸ்வின் யாரையும் மதிக்காமல் தன் இஷ்டத்திற்கு இருக்கிறார். ஒருநாள் அஸ்வினின் மனைவி காணாமல் போகிறார். இரண்டு நாட்களுக்கு மேலாகியும் மனைவி வீட்டை விட்டு வெளியே வராததால் மனைவியை ஏதாவது அஸ்வின் செய்திருக்கலாம் என்று அன்பு நகரில் உள்ள குடும்பத்தார்கள் சந்தேகிக்கிறார்கள். உடனே காவல்துறையில் புகார் கொடுக்கிறார்கள்.
காவல்துறை பல்வேறு சோதனைகளை செய்து பார்த்து அஸ்வின் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்கிறது. இருந்தாலும் அன்பு நகரில் உள்ளவர்களுக்கு அஸ்வின் மீது சந்தேகம் வலுவாக இருக்கிறது. பல்வேறு தடயங்களை தேடி செல்கிறார்கள் இருந்தாலும் ஒரு தடயம் கூட சிக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள். நீதிமன்றத்திற்கு வரும் அஸ்வின் எனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை என்று உறுதியாக சொல்கிறார். இறுதியில் என்ன ஆனது? உண்மையில் அஸ்வினுக்கு திருமணம் ஆனதா? அல்லது அவர் மனைவி என்று துன்புறுத்திய பெண் யார் என்று பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்த வெப் சீரிஸ்.
இந்த வெப் சீரிஸில் ஏழு எபிசோடுகள் உள்ளன. முதல் நான்கு எபிசோடுகள் அஸ்வினை சுற்றி சுற்றி வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் அர்ச்சனா உட்பட அன்பு நகரில் உள்ள அனைவரும் அஸ்வின் மனைவியை கண்டுபிடிக்க முயற்சி செய்வதும், அதில் தோல்வி அடைவதுமாக செல்கிறது. நான்காவது எபிசோடு இறுதியில் இருந்து அடுத்து வரும் மூன்று எபிசோடுகளும் வேறு ஒரு திசையில் பயணித்து வேறு ஒரு கதையை சொல்கிறது.
இந்த இரண்டு கதைகளுக்கும் உள்ள முடிச்சை இறுதியில் உள்ள எபிசோடு கலைக்கிறது. இந்த வெப் சீரிஸை பார்க்கும் போது வெவ்வேறு கதை போல தோன்றும் இரண்டு தனித்தனி சம்பவங்கள் ஒரு புள்ளியில் இணையும் ஒரு நாவலை படிப்பது போல் உள்ளது. பரபரப்பாக திரில்லர் கதை இருக்க வேண்டும் என்ற இடத்தில் கூட கொஞ்சம் நிதானமாகவும் இந்த திரைக்கதை வடிவமைத்திருக்கிறார்கள்.
இருந்தாலும் சில இடங்களில் இந்த நிதானத்தையும் நம்மால் ரசிக்க முடிகிறது. அஸ்வின் இதுவரை தமிழ், மலையாள படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். துருவங்கள் பதினாறு படத்தில் வித்தியாசமான கேரக்டரில் அறிமுகமான அஸ்வினுக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது நடிப்பை வெளிக்காட்ட இந்த ஆக்டோபஸ் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
மனைவியை துன்புறுத்துவது, திமிராக நடந்து கொள்வது என ரசிகர்கள் வெறுப்பை சம்பாதிக்கும் அளவு நன்றாக நடித்துள்ளார். அஸ்வின் கடைசி மூன்று எபிசோடுகள் வேறு ஒரு திசையில் இவரின் நடிப்பு இருப்பது பாராட்டப்பட வேண்டியது. டிவி சீரியல்களின் செல்லப் பிள்ளையாக இருந்த அர்ச்சனா இதில் ஒரு ஹீரோயினாக நன்றாக நடித்துள்ளார். தனது தோழி பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று நினைத்து உதவ நினைக்கும் போதும், கிளைமாக்ஸ் காட்சியில் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவு ஒரு நல்ல நடிப்பையும் தந்துள்ளார். குடும்பத்திற்கு பயப்படும் ஒரு அமைதி பின்பு அதையே எதிர்த்து நிற்கும் இடம் என்று பல இடங்களில் அர்ச்சனா சபாஷ் போட வைக்கிறார்.
தீபன் சக்கரவர்த்தியின் பின்னணி இசை அதிக சப்தம் இல்லாமல் மெல்லிதாக ஒரு குடும்ப பின்னணியில் அமைந்த ஒரு வெப் சீரிசை ரசிக்கும்படி உள்ளது. ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸில் குறைகளே இல்லையா என்றால் இதிலும் சில குறைகள் இருக்கிறது. படத்தின் முதல் மூன்று எபிசோடுகள் மிகவும் சாதாரணமாகவும், பெரிய அளவில் ட்விஸ்ட் இல்லாமல் இருக்கிறது. இந்த முதல் மூன்று எபிசோடுகளை நாம் கடந்து விட்டால் போகப் போக நாம் ரசிக்க ஆரம்பித்து விடலாம். ஆங்காங்கே சில லாஜிக் மிறல்களும் உள்ளன.
பாலாஜி வேணுகோபால் நடிக்கும் நீதிமன்ற காட்சிகள் நகைச்சுவை என்று நினைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த நகைச்சுவை பெரிய அளவில் நமக்கு கை கூடவில்லை. இது போன்ற சில மைனஸ் பாயிண்டுகள் இந்த தொடரில் உள்ளது. முக்கியமான கேரக்டர்கள் மட்டுமின்றி அன்பு நகரில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களும் மிக நன்றாக நடித்து தனது பங்களிப்பை சரியாக தந்துள்ளார்கள்.
இந்த சஸ்பென்ஸ் திரில்லர் ஆக்டோபஸ் கதையில் திரில்லர் மட்டுமின்றி இன்று சமூகத்தில், செய்தித்தாளில் பார்க்கும் ஒரு முக்கியமான சமூகம் சார்ந்த ஒரு விஷயம் இருக்கிறது. இதை இந்த வெப் சீரிஸ் பார்க்கும் போது உணர்ந்து கொள்ளலாம். இந்த வார இறுதி நாட்களை குடும்பத்தினர் குடும்பத்துடன் சேர்ந்து ரசித்து மகிழ்ந்து ஒரு நல்ல சமூக சிந்தனையை உருவாக்க இந்த ஆக்டோபஸ் வெப் சீரிஸ் கண்டிப்பாக ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். ஆக்டோபஸ் -திரிலருக்குள் ஒரு சமூக சிந்தனை.
அன்பு நகரில் தொடங்கும் ஒரு சாதாரண சந்தேகம் எப்படி இரண்டாகப் பிரிந்து இறுதியில் ஒரு புள்ளியில் இணைகிறது என்பதையும், இந்தத் திரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சமூகச் சிந்தனையையும் வாசகர் தெளிவாகப் புரிந்துகொள்வார்.