சசிகுமாரின் "வதந்தி 2" முதல் அதர்வாவின் "இதயம் முரளி" வரை: இந்த வார OTT ரிலீஸ் லிஸ்ட் இதோ!

இந்த வார OTT வெளியீடுகள்
இந்த வார OTT வெளியீடுகள்
Updated on

இன்றைய டிஜிட்டல் காலத்தில் OTT தளங்கள் மக்களின் பொழுதுபோக்கில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. திரையரங்குகளுக்கு செல்ல முடியாத சூழலிலும், வீட்டிலிருந்தே புதிய திரைப்படங்களையும் தொடர்களையும் ரசிக்க முடிகிறது. அந்த வகையில் இந்த வாரம் பல புதிய படைப்புகள் OTT தளங்களில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளன.

இந்த வார வெளியீடுகள்:

இந்த வார OTT-யில் “Oh Sukumari”, “இதயம் முரளி”, மற்றும் “வதந்தி சீசன் 2” ஆகியவை வெளியாகின்றன. காதல், நகைச்சுவை, குடும்பம் மற்றும் த்ரில்லர் என பல்வேறு வகை கதைகள் இதில் இடம்பெற்றுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இது சிறந்த பொழுதுபோக்காக அமையும்.

Oh Sukumari:

திருவீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள “Oh Sukumari” ஒரு குடும்ப நகைச்சுவை திரைப்படமாகும். Amazon Prime Video-வில் வெளியாகிறது.குடும்ப உறவுகள், சின்ன சின்ன சிக்கல்கள் மற்றும் நகைச்சுவை கலந்த காட்சிகள் மூலம் இந்த படம் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Oh Sukumari:
Oh Sukumari:Source:cinemaexpress

இதயம் முரளி:

நடிகர் முரளியின் மகனும், பிரபல நடிகருமான அதர்வா-வின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இதயம் முரளி. இப்படத்தில் நட்டி நட்ராஜ், பிரீத்தி முகுந்தன், கயாது லோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவரின் டான் பிக்சர்ஸ் நிறுவனமே இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் அதர்வாவுடன் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், ஜோனிதா காந்தி, மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் பஹத் பாசில் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில்,அதர்வா நடித்துள்ள “இதயம் முரளி” திரைப்படம் Netflix-ல் ஆகஸ்ட் 7 முதல் வெளியாகிறது. காதல் மற்றும் உணர்ச்சி சார்ந்த கதையம்சத்துடன் உருவாகியுள்ள இந்த படம் இளைய தலைமுறையினருக்கு மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதயம் முரளி
இதயம் முரளிsource:twitter

வதந்தி சீசன் 2:

சசிகுமார் நடிப்பில் உருவான “வதந்தி சீசன் 2” Amazon Prime Video-வில் வெளியாகிறது. மர்மம் மற்றும் விசாரணை கதையம்சத்துடன் உருவாகியுள்ள இந்த தொடர் முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

vadandhi 2
vadandhi 2 source:twitter

மேலும் சமீப காலமாக ஓடிடி தளங்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் குறுகிய காலத்திலேயே ஓடிடி யில் வெளியாவதால் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் அவற்றை எளிதாக கண்டு ரசித்து வருகின்றனர்..அதே போல வெப் தொடர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது..

ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகி வருவதால் எந்தப் படைப்பை முதலில் பார்க்கலாம் என்ற ஆர்வமும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது..

இந்த வாரம் வெளியாகும் இந்த மூன்று படைப்புகளும் வெவ்வேறு ரசனையுடைய பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என சினிமா வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன..

இந்த மூன்று வெளியீடுகளுடன் இந்த வாரம் ஓடிடி தளங்களில் மேலும் சில புதிய படைப்புகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க உள்ளன.. தமிழ் ரசிகர்களுக்காக " நூறு சாமி" திரைப்படம் zee 5 தளத்தில் வெளியாகிறது..

Nooru saamy
Nooru saamy source:twitter

அதே நேரத்தில் கார்கில் போரின் பின்னணியில் உருவாக்கப்பட்ட ' Operation Safed Sagar..the untold story of the kargil war " என்ற வெப் தொடர் வரலாற்றை விரும்பும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கொரிய தொடர்களை விரும்புவர்களுக்காக " our sticky love " என்ற புதிய காதல் தொடர் netflix இல் வெளியாகிறது..

இதனால் தமிழ் திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் இந்திய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு மொழிப் படைப்புகளும் இந்த வாரம் ஓடிடி தளங்களில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளன..வார இறுதியில் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் வீட்டிலேயே தரமான பொழுதுபோக்கை அனுபவிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்..

மொத்தத்தில், இந்த வார OTT வெளியீடுகள் ரசிகர்களுக்கு பல்வேறு வகை பொழுதுபோக்குகளை வழங்குகின்றன. குடும்பத்துடன் வீட்டிலேயே அமர்ந்து ரசிக்க சிறந்த தேர்வாக இவை அமையும். காதல், நகைச்சுவை, த்ரில்லர் என பல உணர்வுகளை ஒரே வாரத்தில் அனுபவிக்க முடிவதால், இந்த வெளியீடுகள் ரசிகர்களுக்கு தொடர்ச்சியான மகிழ்ச்சியை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படியுங்கள்:
ரூ.4000 கோடி ராமாயணம் ட்ரெய்லர் வெளியீடு: சாய் பல்லவி சீதைக்கு எழும் விசித்திரமான ட்ரோல்கள்!
இந்த வார OTT வெளியீடுகள்
logo
Kalki Online
kalkionline.com