

திரையரங்கில் தவறவிட்ட படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் வசதி ரசிகர்களின் பொழுதுபோக்கு பழக்கத்தையே மாற்றிவிட்டது. அந்த வகையில், ஆகஸ்ட் 17 முதல் 23 வரை ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்கள் கவனம் ஈர்க்கின்றன. குறிப்பாக விஜய்யின் ‘ஜன நாயகன்’ வருகை இந்த வாரத்தின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. ஜூலை 23 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படத்தை மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கும், திரையரங்கில் தவறவிட்டவர்களுக்கும் இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முன்பான இறுதிப் படமாகவும் இப்படம் பேசப்படுவதால், ஓடிடி வருகைக்கும் எதிர்பார்ப்பு அதிகம்.
ஓடிடி வெளியீடுகளின் சிறப்பு என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் அல்லது மொழியை மட்டும் சார்ந்திருக்காமல் பல்வேறு ரசனைகளுக்கும் ஒரே வாரத்தில் விருந்து கொடுப்பதுதான். முன்பு ஒரு படம் திரையரங்கில் இருந்து ஓடிடிக்கு வருவதற்காக ரசிகர்கள் பல வாரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்போது வெளியீட்டு திட்டங்கள் வேகமாக மாறுவதால், திரையரங்கு அனுபவம் முடிந்த சில காலத்திலேயே வீட்டுத் திரையிலும் படங்களை ரசிக்க முடிகிறது.
‘ஜன நாயகன்’ விஷயத்தில் இந்த ஆர்வம் இன்னும் அதிகம். படம் எப்போது ஓடிடியில் வரும் என்ற கேள்விக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தற்போது ஆகஸ்ட் 21 என்ற தேதி உறுதியாகியுள்ளது. ZEE5-ல் வெளியாகும் இந்தப் படம் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளிலும் பார்வையாளர்களை சென்றடைய உள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களிடையே ஓடிடி வெளியீடு பேசுபொருளாகியுள்ளது.
இதேபோல் ‘Lanterns’ தொடர் சூப்பர் ஹீரோ ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. Green Lantern கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட இந்தத் தொடர் மர்மம் மற்றும் விசாரணை அம்சங்களுடன் உருவாகியுள்ளது. மறுபுறம் ‘Toy Story 5’ குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒரே நேரம் கவரும் குடும்ப பொழுதுபோக்காக அமைகிறது.
Netflix தொடர்களை விரும்புபவர்களுக்கு ‘Love Is Blind: UK’ புதிய சீசனும், ‘Outer Banks’ புதிய சீசனும் கவனம் ஈர்க்கின்றன.
இந்த வாரம் தேர்வுகள் அதிகம். அதே ஆகஸ்ட் 21-ம் தேதி ‘வெல்கம் டு தி ஜங்கிள்’ திரைப்படமும் JioHotstar-ல் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அக்ஷய் குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த நகைச்சுவைப் படம் ரசிகர்களுக்கு வேறுபட்ட அனுபவத்தை தரக்கூடும். ‘Toy Story 5’ போன்ற அனிமேஷன் படமும் பார்வையாளர்களைக் கவரத் தயாராகிறது. Netflix-ல் ‘Love Is Blind: UK’ சீசன் 3, ‘Outer Banks’ சீசன் 5 உள்ளிட்ட தொடர்களும் வெளியாகின்றன.
இந்த வார ஓடிடி பட்டியலில் இன்னொரு சுவாரஸ்யமான அம்சமும் உள்ளது.புதிய படங்கள் மட்டும் அல்லாமல் வெவ்வேறு வயதினரையும் ரசனை கொண்டவர்களையும் கவரும் வகையில் உள்ளடக்கங்கள் வெளியாகின்றன..
ஆகஸ்ட் 18 முதல் "Toy story 5:"திரைப்படத்தை டிஜிட்டல் முறையில் வாடைகைக்கு அல்லது வாங்கிப் பார்க்கும் வசதியும் கிடைக்கிறது..வூடி ,பஸ் லைட் இயர், ஜெஸ்ஸி உள்ளிட்ட பழைய கதாபாத்திரங்கள் மீண்டும் வருவதால் அனிமேஷன் ரசிகர்களுக்கு இது சிறப்பு விருந்தாக அமையும்..
அதே போல் "Lanterns" சூப்பர் ஹீரோ கதையை மர்மம் மற்றும் விசாரணையுடன் இணைத்து புதிய அனுபவத்தை தருகிறது.."outer Banks" புதிய சீசன்," Love is blind"UK "; சீசன் 3 போன்ற தொடர்களும் இந்த வார பட்டியலில் இடம் பெற்றுள்ளன..
இதனால் குடும்பத்துடன் படம் பார்க்க விரும்புபவர்கள் முதல் தொடர்ந்து தொடர்களைப் பார்ப்பவர்கள் வரை அனைவருக்கும் இந்த வாரம் ஓடிடி யில் ஏதாவது ஒன்று காத்திருக்கிறது..
ஓடிடியின் மற்றொரு முக்கிய மாற்றம் ஒரே தளத்தில் மட்டும் உள்ளடக்கம் தேட வேண்டிய அவசியம் இல்லாததுதான்.. வெவ்வேறு தளங்கள் தங்களுக்கென தனித்துவமான படைப்புகளை வெளியிடுவதால், பார்வையாளர்களுக்கு தேர்வு செய்யும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.குறிப்பாக இந்த வாரம் புதிய திரைப்படங்கள், சூப்பர் ஹீரோ தொடர், அனிமேஷன் படம், ஆவணப் படம் என பல வகைகள் இடம் பெற்றிருப்பது ஓடிடி உலகின் பரந்த வளர்ச்சியை காட்டுகிறது..
ஒரே வாரத்தில் இவ்வளவு வித்தியாசமான படங்களும் தொடர்களும் வருவது ஓடிடி உலகம் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதற்கு சான்று. அதிலும் ‘ஜன நாயகன்’ வருகை தமிழ் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த வார இறுதியில் ரிமோட் யார் கையில் இருக்கிறது என்பதுதான் முக்கியம்!