'ஜன நாயகன்' விமர்சனம்: தளபதியின் கடைசிப் படம் உண்மையிலேயே வென்றதா? முழு அலசல்!

'நண்பா நண்பி செல்லம் கேளு'... முதல்வர் விஜய்யின் பொலிடிக்கல் ஆக் ஷன் மசாலா படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தியதா? முழுமையான விமர்சனம் இதோ!
ஜன நாயகன் - முதல்வர் விஜய்
ஜன நாயகன் - முதல்வர் விஜய்
Updated on
ரேட்டிங்(3 / 5)

ஒரு கொலைக் கேசில் கைதியாக சிறை தண்டனை அனுபவிக்கும் சிறைக்கைதி நாயகன். அந்த சிறையில் உள்ள ஒரு பெரும்புள்ளியைத் தப்பிக்க வைக்க போலியான ஜெயில் கலவரத்தை நடத்த திட்டம் தீட்டுகிறார்கள். நாயகன் அதை முறியடிக்கிறான். இதனால் ஜெயில் அதிகாரிக்கு நாயகன் மேல் நல் அபிப்ராயம் ஏற்படுகிறது.

நாயகனின் அம்மா மரணப்படுக்கையில் இருக்கிறார். கடைசி ஆசையாக நாயகனைப் பார்க்க விரும்புகிறார். சட்டத்தை மீறி அந்த ஜெயில் அதிகாரி நாயகனை பரோலில் அனுப்புகிறார். ஜெயில் அதிகாரியின் மகளுடன் நாயகனுக்கு ஒரு நல்ல பாண்டிங் உருவாகிறது.

ஒரு விபத்தில் அந்த ஜெயில் அதிகாரி இறந்து விட, நாயகன் அவரது மகளைத்தன் வளர்ப்பு மகளாக வளர்க்கிறான்.

மகளை மிலிட்ரி ட்ரெய்னிங் அனுப்ப ஆசைப்படுகிறான். ஆனால் மகளுக்கு அதில் ஆர்வம் இல்லை.

இது இப்படி இருக்க, நாயகன் எந்தக் கொலைக்கேசில் சிறை தண்டனை பெற்றானோ கொலை செய்யப்பட்டதாக நினைத்த ஆள் உயிருடன் இருப்பதை அறிகிறான். நாயகனுக்கும், வில்லனுக்கும் உண்டான பிளாஷ்பேக் என்ன? வில்லனின் புதிய திட்டம் என்ன? நாயகன் அதை முறியடித்தானா? என்பதை மீதித் திரைக்கதையில் சொல்லி இருக்கிறார்கள்.

ஜன நாயகன் - முதல்வர் விஜய்
ஜன நாயகன் - முதல்வர் விஜய்

நாயகனாக முதல்வர் விஜய். புதிய ஹேர் ஸ்டைல், பக்குவப்பட்ட நடிப்புடன் கலக்குகிறார். ஆக் ஷன் சீக்வன்சில் ரசிகர்களின் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது. அவர் பேசும் அரசியல் பஞ்ச் வசனங்களுக்கு அப்படி ஒரு வரவேற்பு. 'தளபதி கச்சேரி' பாட்டில் முதல்வர் விஜயின் டான்ஸ் கலக்கல் ரகம்.

ஒரே ஒரு குறை, வழக்கமாகப் பிரமாதமாக காமெடி செய்யும் முதல்வர் விஜய், ரொமாண்டிக் போர்சனில் குறும்பு காட்டும் முதல்வர் விஜய் - இந்த இரண்டு அங்கங்களும் மிஸ்சிங்க்.

நாயகியாக பூஜா ஹெக்டே படம் முழுக்க ஸ்லீவ்லெஸ் பிளவுசுடன் கிளாமராக வருகிறார். ஆனால் டூயட் எதுவும் இல்லை. குடும்ப விழா, கோவில் என எங்கே போனாலும் ஸ்லீவ்லெஸ் டிரஸ்தானா? என்ற கமெண்ட் தியேட்டரில் எழுந்தது!

நாயகனின் வளர்ப்பு மகளாக மமிதா பைஜூ கொஞ்சிப் பேசும் சிரிப்பு, குறும்பு கொப்புளிக்கும் கன்னம், சித்தா என நாயகனை விளிப்பது அனைத்தும் அழகு (சித்தப்பா என்பதன் சுருக்கம் தான் சித்தா)

ஜெயில் அதிகாரியாக கவுதம் வாசுதேவ் மேனன் காட்டும் கம்பீரம் கனகச்சிதம். ஆங்கிலம் அதிகம் பேசாமல் நார்மல் தமிழ் பேசுவது சிறப்பு.

வில்லனாக பாபி தியோல் மிரட்டி இருக்கிறார். அவரது ஜிம் பாடி அருமை. போலீஸ் ஆபீசராக வரும்போது அவமானப்படும் காட்சியில் அருமையான நடிப்பு.

ஐஏஎஸ் ஆபீசராக பிரியாமணி கெஸ்ட் ரோலில் வருகிறார்.

நேர்மையான ஆபீசராக நரேன், முதல்வராக நாசர், அரசியல்வாதியாக பிரகாஷ் ராஜ், நாயகனின் அம்மாவாக ரேவதி, போலீஸ் ஆபீசராக நிழல்கள் ரவி என அனைவரது நடிப்பும் கிளாஸ்.

அனிரூத் இசையில் 5 பாடல்கள் அனைத்தும் இனிமை. 'தளபதி கச்சேரி' பாட்டுக்கு தியேட்டரே செலிபிரேஷன் மோடில் கொண்டாடித் தீர்த்தது. அந்தப் பாட்டுக்கு நடன வடிவமைப்பும் அருமை. அனிரூத்தும் ஒரு சீனில் வந்து போகிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டம். ஆக்சன் சீக்வன்ஸ், க்ளைமாக்ஸ் காட்சிகளைப் படம் பிடித்ததில் லாவகம் தெரிகிறது.

பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங்கில் படம் 183 நிமிடங்கள் ஓடுகிறது. பின் பாதியில் கொஞ்சம் ட்ரிம் செய்து இருக்கலாம்.

பகவந்த்கேசரி தெலுங்குப் படத்தின் கதையை வாங்கி ஹெச்.வினோத் திரைக்கதை அமைத்திருக்கிறார். சதுரங்க வேட்டை படத்துக்குப்பின் வசனத்துக்கு அதிக முக்கியத்துவம் தந்த படமாக இது அமைகிறது.

ஜன நாயகன் - முதல்வர் விஜய்
ஜன நாயகன் - முதல்வர் விஜய்

சபாஷ் டைரக்டர்

  • ஓப்பனிங்க் சீனில் வரும் ஜெயில் கலவரக்காட்சி, ஆக்சன் சீக்வன்ஸ் அதகளம்.

  • நாயகனுக்கும், வளர்ப்பு மகளுக்குமான பாண்டிங் அருமை. விசுவாசம் அப்பா மகள் செண்ட்டிமெண்ட் போலவே இதிலும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

  • பிளாஷ்பேக் சீனில் போலீஸ் ஆபீசராக வரும் முதல்வர் விஜய் கலக்குகிறார்.

  • வில்லன்களாக வரும் பிரகாஷ் ராஜ், பாபிதியோல் இருவரது கேரக்டர் டிசைனும் வலிமையாக எழுதப்பட்டிருப்பது சிறப்பு.

  • கடைசி அரைமணி நேரம் ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு பிரம்மாண்டம், கிராபிக்ஸ் ஒர்க்ஸ், விசுவல்ஸ் அருமை.

இதையும் படியுங்கள்:
ஜன நாயகன்: ஹெச். வினோத்தின் முந்தைய Box Office சாதனைகளை உடைக்குமா?
ஜன நாயகன் - முதல்வர் விஜய்

ரசித்த வசனங்கள்

  • நம்ம பாதுகாப்பில் தளபதி இல்லை  சார், தளபதி பாதுகாப்பில் தான் நாம் இருக்கோம்.

  • பொண்ணுங்களுக்கு பயம் இருக்கக்கூடாது. புலி மாதிரி வளர்க்கணும்.

  • நம்ம வாழ்க்கைல எப்பவும் பயத்துக்கு இடம் தரக்கூடாது. பயத்தையும் , பயமுறுத்தறவனையும் ஓட விட்டு இப்படி கெத்தா நிக்கணும். அப்போதான் உலகம் நீ சொல்றதை கவனிக்கும்.

  • நாளைல இருந்து உனக்கு ரெண்டு நிழல். ஒண்ணு உன்னுது, இன்னொண்ணு என்னுது.

  • ஏம்ப்பா, ட்ரெய்லரே உலகம் பூரா ட்ரெண்ட் ஆகுதுன்னா , மெயின் பிக்சர்? - தெறிக்கும்!

  • மத்தவங்க பேசினா ஸ்பீச், தளபதி பேசினா ரீச்!

  • ஒரு பிரேம் கூட மிஸ் ஆகக்கூடாது, என் படம் அவனுக்குத் தெரியணும், அவன் பயம் எனக்குத் தெரியணும்.

  • மொத்தத் தமிழச்சிங்க ஆதரவு தளபதிக்கு எப்பவும் இருக்கும்.

  • மாற்றம் என்பது ஒரு பெரிய பிராசஸ். கொஞ்சம் கொஞ்சமாத்தான்  நடக்கும்.

  • நான் காட்டில் பிறந்தவன், பார்த்தாலே நரி எது? ஓநாய் எது?எனக் கண்டுபிடிச்சிடுவேன்.

ஜன நாயகன் - முதல்வர் விஜய்
ஜன நாயகன் - முதல்வர் விஜய்

செம ஹிட் பாட்டு

தளபதீ கச்சேரி...

தவிர்த்திருக்கலாம்

  • சண்டைக்காட்சிகளில் தேவை இல்லாமல் அதீத வன்முறை, கொடூரம், ரத்தம்.

  • கள்ளச்சாராயத்தை எதிர்த்துப் போராடும் மக்களை போலீஸ் சுட்டுத்தள்ளுவது ஓவர். அதுவும் எந்த ஊரில் மெஷின் கன்னால் போலீஸ் சுடுது?

  • நாயகன் தன் வளர்ப்பு மகளை மிலிட்ரி வீரர் ஆக்கியே தீருவேன் என அடம் பிடிப்பது

  • மம்தா பைஜூ மாதிரி அழகு மயிலைக் காதலிக்கும் கேரக்டர் ஒரு பர்சனாலிட்டி ஆளாக இருக்க வேண்டாமா?

  • மாநிலத்தின் முதல்வர் ஒரு சாதாரண மாவட்ட செயலாளருக்கு அவ்ளோ பயப்படுவாரா?

  • தன் வளர்ப்பு மகளைக் காப்பாற்ற வரும் நாயகன் அவ்வளவு களேபரமான சூழலில் செல்பி எடுப்பது போல் போஸ் கொடுப்பது போஸ்டர் டிசைனுக்கு ஓக்கே, ஆனா சிச்சுவேஷனுக்குப் பொருந்தவில்லை.

  • ஹையர் ஆபீசரை வில்லன் உடைகளை நீக்கி அவமானப்படுத்தும் போது போலீஸ் கான்ஸ்டபிள்ஸ் அவரைப் பார்த்து கிண்டலாக சிரிப்பார்களா?

  • எங்க வீட்டுப்பிள்ளை எம்.ஜி.ஆர் ஸ்டைலில் சவுக்கை சுழற்றி நாயகன் அடிப்பது ஓக்கே. ஆனால் எம்.ஜி.ஆர் அந்தப் படத்தில் சிரித்த முகத்தோடு வில்லனை டீல் செய்வார். இதில் நாயகன் சீரியஸ் முகத்தில் டீல் செய்வது எடுபடவில்லை.

இதையும் படியுங்கள்:
எம்.ஜி.ஆருக்கு மீனவ நண்பன்! விஜய்க்கு ஜனநாயகன்! எம்.ஜி.ஆரை திரையில் பின்தொடர்ந்த விஜய்!
ஜன நாயகன் - முதல்வர் விஜய்

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18 + (வன்முறைக்காக A சர்ட்டிபிகேட்)

கல்கி கமெண்ட் :

ஒரிஜினல் வெர்சன் பகவந்த் கேசரியை விட ரீமேக் வெர்சன் நன்றாக இருக்கிறது. ஆனால் முதல்வர் விஜய் நடித்த துப்பாக்கி ரேஞ்சுக்கு இல்லை. முதல்வர் விஜய் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.

logo
Kalki Online
kalkionline.com