விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜி கதிர் திருமணம் குறித்த உண்மை தற்போது வெளிவருமா என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கான நேரமும் வந்துவிட்டது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 தொடர் அண்ணன் தம்பிகள் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இது சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சீரியல் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் ஆரம்பமானது. இது அப்பா மகன்களின் கதையாக இருந்து வருகிறது.
கடந்த சில வாரங்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் பல விறுவிறுப்பான கதைகளங்கள் நகர்ந்தன. அதாவது, செந்தில் பாண்டியனுக்கு தெரியாமல் 10 லட்ச ரூபாயை எடுத்து, மீனாவின் அப்பாவிடம் கொடுத்து அரசு வேலை வாங்கினார். இந்த உண்மை பாண்டியன் வீட்டுக்கு தெரிந்து பெரும் பிரச்சனை ஆனது.
இது முடியும் நேரத்தில், அரசி குறித்தான விஷயங்கள் வெளியே வந்தது. அதாவது, அரசி தனக்கு தானே தாலி கட்டிக்கொண்ட விஷயம் வெளியே தெரிய வந்தது. மேலும் அரசி குமரவேலுவை பழி வாங்கதான் இதை செய்தார் என்று இரண்டு குடும்பங்களுக்கும் தெரிந்து, பாண்டியன் அரசியை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
தற்போது மற்றுமொரு உண்மை வெளியே வர இருக்கிறது. அதாவது, ராஜிக்கும் கதிருக்கும் எப்படி திருமணம் நடந்தது என்பது குறித்தான உண்மைதான் அது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடக்கத்திலேயே இவர்களுடைய கதைதான் விறுவிறுப்பாக இருந்தது. ஆனால், கடைசியாகத்தான் இந்த உண்மை வெளிவர காத்திருக்கிறது.
கதிருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், ராஜி தன் நகைகளை அடகு வைத்து பணம் கொடுக்க முடிவு செய்கிறார். ராஜி நகைகளை அடகு வைத்து பணத்தைப் பெறவிருக்கும் சமயத்தில், சக்திவேல் அதே வங்கிக்கு வந்துவிடுகிறார். ராஜியின் வருகைக்கான காரணத்தைத் தெரிந்துகொண்ட அவர், அந்த நகைகளைப் வாங்கிப் பார்க்கிறார். “இது நம்ம வீட்டு நகையாச்சே, ராஜி இதை எப்படி விற்கலாம்?” என்று யோசித்த சக்திவேல், இந்த விஷயத்தைப் பயன்படுத்தி பாண்டியன் குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கிறார். வங்கியில் அவருக்கு தெரிந்தவரிடம் ராஜியிடம் மாலையில் வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு சொல்லச் சொல்கிறார். ராஜியும் நம்பி வீட்டிற்குச் சென்றுவிடுகிறார்.
அதற்குள் வங்கியில் இருந்து நகையை சக்திவேல் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து, முத்துவேல் மற்றும் குடும்பத்தினர் முன் நடந்ததைச் சொல்கிறார். இதை வைத்து பிரச்சனை செய்ய நினைக்கும் சக்திவேல், பாண்டியன் வீட்டு வாசலில் நின்று கத்துகிறார். ராஜி, கதிர், மற்றும் கோமதி அனைவரும் வந்து "என்ன ஆச்சு?" என்று கேட்க, "பாண்டியனை வரச் சொல்லுங்கள், நான் பேச வேண்டியது நிறைய இருக்கிறது" என்று சக்திவேல் சொல்கிறார். உடனே கோமதி, பாண்டியனுக்கு போன் செய்து வரச் சொல்கிறார்.
சக்திவேல் இந்த நகை விஷயத்தை வைத்து பாண்டியன் குடும்பத்தை அவமானப்படுத்தப் போகிறார். இதனால் வேறு வழியில்லாத ராஜி, உண்மையைச் சொல்லப் போகிறார்.
கண்ணனால் ஏமாற்றப்பட்டது குறித்தும், கோமதி உதவி செய்து தனது மகனை கட்டிவைத்து குடும்ப மானத்தை காத்தது குறித்தும் ராஜி சொல்லப்போகிறார். இதையெல்லாம் தெரிந்து முத்துவேல் திருந்தவும் வாய்ப்பிருக்கிறது.