Nine Tailed Fox 'குமிஹோ' பற்றிய சுவாரஸ்யமான தென்கொரிய கதை தெரியுமா?

nine tailed fox
Gumiho fox
Published on

உலகம் முழுவதும் உள்ள மக்கள் நம்பக்கூடிய பிரபலமான நாட்டுபுறவியல் கதைகள் பல உண்டு. நாகதேவதைகள், கடல்கன்னிகள் போன்ற உயிரினங்களை இருப்பதாக பலரும் நம்புகிறார்கள். அதைப்போல தென்கொரியாவில் மிகவும் பிரபலமான ஒன்று தான் 'குமிஹோ'(Gumiho) என்று சொல்லப்படும் ஒன்பது வால்களைக் கொண்ட நரியாகும்.

இந்த நரிகள் பிறக்கும் போது இதற்கு ஒன்பது வால்கள் இருக்காது. ஆரம்பத்தில் ஒரு வால் மட்டுமே இருக்கும். வருடங்கள் போக போக அதற்கு புது புது சக்திகள் வரும் போது ஒவ்வொரு வாலாக வரத் தொடங்கும். இந்த 'குமிஹோ' நரிகளுக்கு மூன்று வால்கள் வந்து விட்டால் அடுத்தவர்கள் உருவத்திற்கு மாற முடியும். அதாவது Shape shift செய்ய முடியும். கதைப்படி இந்த நரி ஒரு அழகான பெண்ணாக மாறி அரசர்கள் போன்ற சக்தி வாய்ந்தவர்களை மயக்கி அவர்களின் இதயத்தை சாப்பிட்டுவிடும் என்று சொல்லப்படுகிறது. பல ராஜ்ஜியங்கள் இந்த 'குமிஹோ' நரிகளால் அழிந்திருப்பதாக கதைகள் சொல்லப்படுகின்றன. 

இன்னும் சிறிது காலம் கழித்து இதனுடைய சக்தியால் ஐந்து வால்கள் வந்தால், அந்த சமயத்தில் இந்த நரிகள் எந்த உருவத்திற்கு மாறினாலும் அதில் கொஞ்சம் கூட தவறே இல்லாமல் பர்ஃபெக்டாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையிலேயே மனிதர்களா அல்லது நரி மனித ரூபத்தில் உருமாறி வந்திருக்கிறதா? என்பதை கண்டுப்பிடிக்கவே முடியாதாம். அதனுடைய கடைசி சக்தி வாய்ந்த அவதாரம் தான் Nine Tailed Fox.

இந்த நரிகளுக்கு ஒன்பது வால்கள் வந்து விட்டால் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்குமாம். அதிக வேகத்தில் ஓடுமாம். அதற்கு எத்தனை வால்கள் இருக்கிறதோ அதை பொருத்து அதனுடைய வலிமை மாறுப்படும். மனிதர்களை சாப்பிட்டு அதனுடைய சக்தியை அதிரித்துக் கொள்ளுமாம். என்னதான் இருந்தாலும் இந்த 'குமிஹோ'வின் ஆசை முழுமையாக மனிதனாக மாற வேண்டும் என்பது தான். ஏனெனில், இந்த 'குமிஹோ' நரிகள் மிகவும் தனிமையாக வாழ்ந்த நரிகளாகும். இது அதனுடைய சாபம் என்று கூட சொல்லலாம்.

எனவே, அதற்கு மனிதனாக மாற வேண்டும் என்பது பெரிய கனவாகும். அதற்கான வழி இந்த 'குமிஹோ' நரிகள் 100 நாட்கள் எந்த மனிதனையும் சாப்பிடாமல் இருந்தால் 101 ஆம் நாள் முழுமையாக மனிதனாக மாறிவிடும்.

இதையும் படியுங்கள்:
shocking! இறப்பிற்கு பின் எங்கே செல்வோம்? இந்த நம்ப முடியாத கதையை கேளுங்கள்!
nine tailed fox

அதே நேரத்தில் இந்த 'குமிஹோ' நரிகளுக்கு மனிதர்களை சாப்பிட வேண்டும் என்ற உணர்வும் இருந்துக் கொண்டேயிருக்கும். இது Discipline மற்றும் Desire இதில் எதை தேர்ந்தெடுப்பது என்பதை குறிக்கிறது.

எப்படியாவது அந்த நரி நூறு நாட்கள் கஷ்டப்பட்டு யாரையும் சாப்பிடாமல் இருந்தால், அது ஆசைப்பட்டது போலவே மனிதனாக மாறிவிடும். ஆனால், மனிதர்களை சாப்பிட வேண்டும் என்ற Short term pleasure ஐ அவை தேடிப்போனால் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கும்.

இதையும் படியுங்கள்:
உங்க வீட்டில் தெய்வ நடமாட்டம் இருக்கா? இந்த அறிகுறிகள் இருந்தால், இருப்பதாக அர்த்தம்!
nine tailed fox

ஜப்பானியர்கள் இதை Kitsune என்றும் சீனர்கள் இதை jiuweihu என்றும் கூறுகிறார்கள். இந்த 'குமிஹோ' கதையை தழுவி நிறைய படங்களும் வந்திருக்கிறது. My girlfriend is a gumiho என்பது மிகவும் பிரபலமான தென்கொரிய டிரமாவாகும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com