விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன் குடும்பத்தினர் தங்களின் குடும்ப ஒற்றுமையை நிரூபித்து காண்பித்துள்ளனர்.
பொங்கல் முடிந்து பல நாட்கள் ஆனாலும், இன்னும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மட்டும் முடியவே இல்லை. பொங்கல் முன்னிட்டு குலசாமி கோவிலில் முழு குடும்பமும் போய் பொங்கல் வைக்கின்றனர். இதனைத் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டிகளில் முதல் பரிசு வெல்பவர்களுக்கு கிரைண்டர் என்று அறிவிக்கப்படுகிறது. உடனே கோமதி, மகன் மற்றும் மருமகளை அழைத்து கிரைண்டர் வேண்டும் என்றும், முதல் பரிசை வெல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.
அதன்படி அரசி லெமன் ஸ்பூன், தங்கமயில் பலூன் டாஸ்க், ராஜி ஒரு கைப்பிடி தண்ணீர் கொண்டு வந்து பாட்டில் நிரப்ப வேண்டும். மீனா மியூசிக் சேரில் விளையாடுகிறார். இப்படி இவர்கள் விளையாடிய எல்லாவற்றிலும் ஜெயித்து விடுகிறார்கள்.
இதேபோல் கோமதி மகன்களும் விளையாடிய அனைத்திலும் வெற்றி பெறுகிறார்கள். இறுதியில் பாண்டியன் குடும்பம் மற்றும் இன்னொரு குடும்பம் கயிறு இழுக்கும் போட்டியில் விளையாடுகிறார்கள். இதில் முதல் பரிசு வென்றால் மட்டுமே கிரைண்டர் கிடைக்கும். ஆகையால் பாண்டியன் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு கயிறை இழுக்கிறார்கள். கோமதி கேட்டதுபோல் இறுதியாக முதல் பரிசை வென்றுவிடுகிறார்கள். முதல் பரிசான கிரைண்டரும் கிடைத்துவிடுகிறது.
மறுபக்கம் கதிருக்கு ராஜி மீது காதல் வந்துவிட்டது. ராஜியின் குடும்பம் மட்டுமே அங்கு இல்லை. ஆகையால், கதிர் மிகவும் பாசத்துடனும் அரவணைப்புடனும் பார்த்துக்கொள்கிறார். ராஜியின் குடும்பம் இல்லாத நினைப்பை சரி செய்யும் விதமாக ராஜி பக்கத்திலேயே இருந்து கதிர் அரவணைப்புடன் பாசத்தை காட்டி ரொமான்ஸ் பண்ண ஆரம்பித்து விட்டார். ஏற்கனவே ராஜிக்கும் கதிர் மீது காதல் வந்துவிட்டது.
அதனால், யாருக்கும் தெரியாமல் கதிரின் சின்ன வயசு போட்டோவை ராஜி எடுத்துக்கொண்டு ரசிக்கிறார். கதிரும் ராஜியும் மனதார இந்த கல்யாண வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டார்கள். இருப்பினும், இவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற இன்னும் எத்தனை கஷ்டங்களை சந்திக்கப் போகிறார்கள் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.