
இன்றைய காலத்தில் உடல் எடை குறைப்பவர்கள் காலை உணவாக பெரும்பாலும் ஓட்ஸ் கஞ்சி தான் சாப்பிடுவார்கள்.
ஆனால் கஞ்சி அத்தனை சுவையாக இருக்காது. சலிப்புத்தட்டி போகும்.
ஆனால் இனிமேல் ஓட்ஸை கொண்டு சுலபமான முறையில், அருமையான சுவையில், உப்புமா செய்து அனைவரும் சாப்பிடலாம். அதன் ரெசிபி இதோ:
தேவையான பொருட்கள்:
ரோல்டு ஒட்ஸ் - 1 கப்
கேரட் - 1
பீன்ஸ் - நறுக்கியது 1/2 கப்
வெங்காயம்- 1
பச்சைமிளகாய் - 2 கீறியது
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - சிறு துண்டு.
கொத்தமல்லி இலை - சிறிது
தாளிக்க:
எண்ணெய் - 2 டீ ஸ்பூன்.
உளுத்தப் பருப்பு - 1 டீ ஸ்பூன்.
கடுகு - 1 டீ ஸ்பூன்.
சீரகம் - 1 டீ ஸ்பூன்.
பெருங்காயத்தூள் - 1/4 டீ ஸ்பூன்.
தண்ணீர் - தேவைக்கு
எலுமிச்சை சாறு - சிறிது
வறுத்த வேர்க்கடலை - சிறிது
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின் நறுக்கிய பீன்ஸ், கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி காய்கறிகள் வேகும் வரை வதக்கவும் அதில் ஒட்ஸ் சேர்த்து கிளறி 1/2 கப் நீரை ஊற்றி, மூடி குறைவான தீயில் 5 நிமிடம் வெந்ததும் திறந்து ஒட்ஸ் வெந்ததா எனப் பார்க்கவும். வேகவில்லை எனில் சிறிது நீர் சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.
ஓட்ஸ் வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சை சாறு, வறுத்த வேர்க்கடலை, கொத்தமல்லி தூவி கிளறி விடவும்.
சுவையான (டயட்) ஓட்ஸ் உப்புமா ரெடி. இனி கஞ்சிக்கு 'நோ'தானே ப்ரோ?