பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 தொடரில் கடைசி தம்பியாக நடித்த சரவணன் விக்ரம் தற்போது படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதுகுறித்தான முழு செய்தியையும் பார்ப்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 தொடர் தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. நான்கு அண்ணன் தம்பிகளின் கதையாக அமைந்த இந்த தொடர் சமுத்திரம் படத்தின் கதையை தழுவியதாக இருந்தது. அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையை போலவே அண்ணிகளின் பாசத்தையும் அழகாக காண்பித்திருப்பார்கள். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், ஒற்றுமையாக சேர்ந்து நின்று அந்த பிரச்சனையை முடித்து வைப்பார்கள். மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் ஆகிய கதாபாத்திரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன.
இந்த சீரியல் முடிந்த கையோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் ஆரம்பமானது. முதல் சீசனில் நடித்த மூர்த்தி இந்த சீசனில் பாண்டியனாக நடிக்கிறார். அதேபோல் ஜீவா, மீனா போன்ற கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் இந்த சீசனிலும் நடித்து வருகிறார்கள். அப்பா மகன்களின் கதையாக நகர்ந்து வரும் இந்த சீரியலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து வருகிறது.
அந்தவகையில் முதல் சீசனில் கடைசி தம்பியாக நடித்த சரவணன் விக்ரம் முதல்முறையாக படத்தில் கமிட்டாகிவுள்ளார். இவர் பிக்பாஸ் சீசன் 7லும் கலந்துக்கொண்டார். பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தின்மூலம் கிடைத்த ரசிகர்களே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரைக் கலாய்த்தனர். இந்த பிக்பாஸ் முடிந்த பின்னர் மீண்டும் சீரியலில் வளம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் எந்த நாடகத்திலும் நடிக்கவில்லை. தொடர்ந்து சமூக வலைதளங்களில் மட்டும் ஆக்டிவ்வாக இருந்தார்.
ஆனால், தற்போது சரவணன் விக்ரம் படத்தில் கம்மிட்டாகி இருக்கிறார். இது அவரின் முதல் படமாகும். பிரவீன் கே மணி என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இப்படத்தில் நாயகியாக ஹசிலி என்பவர் நடிக்கிறார். இப்பட பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இதன்மூலம் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் சரவணன். இதுபோல் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து கலக்கிக்கொண்டிருப்பவர்கள் ஏராளம். அந்த வரிசையில் சரவணன் வருவாரா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.