
ரத்தம் - மனித உடலின் முக்கிய அம்சம். ரத்த ஓட்டம் நின்று விட்டால் மனிதனின் உயிர் போய்விடும். அப்படிப்பட்ட ரத்தம் பல வகைகளை கொண்டது. சில வகை ரத்தம் அதிகமாக கிடைக்கும், சில வகை ரத்தம் மிகவும் அபூர்வமானதாக இருக்கும். இதில் பாசிட்டிவ், நெகட்டிவ் என்ற வகைகளிலும் ரத்தப் பிரிவுகள் உள்ளன. ஒரு குழந்தை உருவாகும் போதே, தனது தாய் தந்தையின் ரத்த வகையை பொறுத்து அதற்கேற்ற ரத்த வகை உருவாகிறது. ஆனால், சில பெற்றோர்களுக்கு இருக்கும் ரத்த வகை அவர்களது குழந்தைக்கு இருக்காது. இப்படி சொந்த உறவுகளுக்குள்ளேயே ரத்த வகை மாறுகிறது.
A positive, A negative, AB positive, AB negative, B positive, B negative, O postive, O negative என பல வகையில் ரத்தம் உள்ளது. இதில் அதிகமானவர்களுக்கு 'ஓ பாசிட்டிவ்' தான் உள்ளது என்பதால் 'ஓ' ரத்த வகை காமன் என்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இந்த வகை ரத்தத்தை கொண்டவர்கள் கொடை வள்ளலாக திகழப்படுவார்கள். ஏனென்றால் அனைத்து பாசிட்டிவ் வகையான ரத்தத்தை கொண்டவர்களுக்கும் இந்த வகை ரத்தம் பொருந்தும். ஆனால் ஓ பாசிட்டிவ் கொண்ட நபர், ஓ பாசிட்டிவ் ரத்தத்தை மட்டுமே பெறமுடியும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த 'O' ரத்த வகையை சேர்ந்தவர்கள் அதிக எதிர்ப்பு சக்தியை கொண்டவர்களாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உங்களுக்கு 'ஓ பாசிட்டிவ்', ரத்தம் என்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இந்த செய்தியை படிக்கலாம். அதிலுள்ள சிறப்புகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
நீங்கள் O+ ஆக இருந்தால், உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு இயற்கையாகவே வலுவாக இருக்குமாம். ஏதாவது இவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் இயற்கையாகவே எளிதில் அதை எதிர்த்து போராடமுடியுமாம். மற்றவர்கள் ஒரு நோயில் இருந்து வெளிவரும் நேரத்தை விட O+ ரத்தம் கொண்டவர்கள் விரைவில் குணமடைவதை பார்க்கலாம்.
O+ இரத்த வகைகளுக்கு சாதரண நோய் மட்டுமல்ல இதய நோய் போன்ற சில உடல்நலப் பிரச்சினைகளின் ஆபத்தும் கூட குறைவாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அப்படியே இருந்தாலும், அது அவர்களால் நீண்ட காலம் தாக்குபிடிக்க கூடியதாக இருக்கும். ஏனென்றால் அதனை எதிர்த்து போராடும் சக்தி அவர்களின் ரத்தத்திற்கு அதிகளவில் உள்ளது.
எந்த வகை ரத்தத்திற்கும் இல்லாத ஒரு நுண்ணுயிர், O+ வகை ரத்தத்திற்கு இருக்கும். இது உடலில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உடனடியாக வந்து அதை குணப்படுத்தும். இது ஒரு ரகசிய ஆயுதம் என்றே சொல்லலாம்.
எனவே O+ ரத்த வகையை கொண்டவர்களே, நீங்கள்தான் நோய் எதிர்ப்பு சக்தியின் சூப்பர் ஹீரோக்கள் என்றால் அது மிகையாகாது.