பாண்டியன் ஸ்டோர்ஸ்-ஐ தொடர்ந்து புதிய சீரியலில் நடிக்கும் சுஜிதா!

சுஜிதா
சுஜிதா
Updated on

பிரபல நடிகை சுஜிதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைந்ததையடுத்து பிரபல சீரியல் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை சுஜிதா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். பிரபலமான முந்தானை முடிச்சு, மந்திர புன்னகை உள்ளிட்ட பல படங்களில் சத்யராஜ், பாக்கியராஜுக்கு குழந்தையாக நடித்திருப்பார். வெள்ளித்திரையை தொடந்து தற்போது சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.

கௌரி சீரியல்
கௌரி சீரியல்

பல நடிகைகள் தற்போது சீரியலில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதாநாயகியாக நடித்தார். இவரின் பொறுமை குணம் பலரையும் வெகுவாக கவர்ந்தது. 4 மருமகளில். மூத்த மருமகளாக வந்த தனம், மற்ற தம்பிகளை பிள்ளைகளாக வளர்த்தார். 5 வருடங்களுக்கு மேல் ஓடிய இந்த சீரியல் சமீபத்தில் முடிவடைந்தது. இந்த சீரியலின் 2ஆம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இதையும் படியுங்கள்:
பிக்பாஸ் பணபெட்டி வாரம்.. போட்டியாளர்களுக்கு வந்த ட்விஸ்ட்!
சுஜிதா

5 வருடங்களும் தனம் கேரக்டரில் சுஜிதாவே நடித்து அசத்தினார். இந்த சீரியல் முடிவிடைந்ததால் அடுத்து என்ன செய்கிறார் என பலரும் கேள்வி கேட்டு வந்தனர். இந்த நிலையில் கலைஞர் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ள கௌரி சீரியலில் கமிட்டாகியுள்ளார். இந்த தகவலை தொடர்ந்து ரசிகர்கள் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com