
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை விட்டாச்சி. தொடர் விடுமுறை என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது, எந்த படம் புதுசா ரிலீஸ் ஆகுது, எந்த இடத்திற்கு டூர் போகலாம் என்று கணக்கு பார்த்து கொண்டிருப்பவர்கள் ஏராளம். இவர்களில் ஒருசிலர் எல்லா இடத்திலேயேயும் கூட்டமாக இருக்கும். எப்படி போறது, அப்படியே போனாலும் எந்த இடத்தையும் சரியாக பார்க்க முடியாது, சரி தியேட்டருக்கு போகலாம்னு நினைச்சா அங்கேயும் ஹவுஸ்புல் ஆயிடுச்சி என்ன பண்றதுனு யோசிப்பவர்களும் இருக்காங்க.
வயசானவங்க, சின்ன குழந்தையை வைத்திருப்பவர்கள் இந்த நேரத்தில் வெளியில் போனால் ரொம்ப கஷ்ட படவேண்டியிருக்கும் என்று நினைத்து வீட்டிலேயே அடைந்து கிடப்பார்கள். எங்கேயும் போய் கஷ்டப்படாமல் வீட்டிலேயே ஹாய்யாக குடும்பத்துடன் உட்கார்ந்து பாடம் பார்க்க ஒரு ஐடியா சொல்லுங்க என்று கேட்பவர்களுக்கான சூப்பரான பதிவு தான் இது.
தற்போது பண்டிகை தினங்களில் தியேட்டருக்கே டஃப் கொடுக்கும் வகையில் பல டிவி சேனல்களும் புதுப்படங்களை போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்புகின்றன. அந்த வகையில் இந்த பொங்கலுக்கு டிவியில் எல்லா சேனலுமே போட்டி போட்டு கொண்டு புதிய படங்களை களம் இறக்கி உள்ளது. இந்த பொங்கல் பண்டிகைக்கு எந்தெந்த டிவியில் என்னென்ன படம் போடப்போறாங்க என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சன் டிவி: பொங்கல் அன்று (14-ம்தேதி) நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்படுகிறது. T. J. ஞானவேல் இயக்கிய இந்த அதிரடி படத்தில் ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்துள்ளனர். 15-ம் தேதி காலை 11 மணிக்கு இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் பிலமென்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் கவின் நடித்துள்ள பிளட்டி பெக்கர் படம் ஒளிபரப்படுகிறது.
கலைஞர் டிவி: பொங்கல் அன்று (14-ம்தேதி) மதியம் 1.30 மணிக்கும் இந்தியன்-2 திரைப்படமும், மாலை 6 மணிக்கு துணிவு மற்றும் இரவு 9.30 மணிக்கு பிட்சா2 படமும் ஒளிபரப்பாகிறது. மாட்டுபொங்கலுக்கு (15-ம்தேதி) காலை 10 மணிக்கு கருடன், மதியம் 1.30 மணிக்கு Love Today, மாலை 6 மணிக்கு விடுதலை1, இரவு 9 மணிக்கு அகிலன் படம் ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் டிவி: பொங்கல் அன்று (14-ம்தேதி) 12.30 மணிக்கு வாழை திரைப்படமும், மாலை 5.30 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் ஒளிபரப்பாக உள்ளது. மாட்டு பொங்கல் அன்று(15-ம்தேதி) மாலை 6 மணிக்கு கார்த்தி, அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
ஜீ தமிழ்: பொங்கல் அன்று (14-ம்தேதி) 10.30 விஷால் நடித்த ரத்னம், மதியம் 3.30 மணிக்கு ஜெயம் ரவியின் பிரதர், மாலை 6.30 மணிக்கு விஜய்யின் கோட் படங்கள் ஒளிபரப்பாக உள்ளது. மாட்டு பொங்கல் அன்று(15-ம்தேதி) மதியம் 3.30 மணிக்கு அருண்நிதி நடித்த டிமாண்டி காலணி 2 திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
ஜீ திரை: ஜனவரி 15-ம்தேதி மதியம் 1 மணிக்கு நடிகர் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
- இது தவிர டிவி சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளும், பட்டிமன்றங்களும் ஒளிபரப்பாக உள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்து இந்த பொங்கல் பண்டிகையை சந்தோஷத்துடனும், குதூகலத்துடனும் கொண்டாடுங்கள்.