

07/03/2026 முதல் திரை அரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற இந்த லோபட்ஜெட் படம், இப்போது 15/04/2026 முதல் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ் டப்பிங்கில் காணக் கிடைக்கிறது. சிம்பு நடித்த மாநாடு படம் போல் இதுவும் ஒரு டைம்லூப் மூவி.
படத்தின் இயக்குநர் ஆன ஜித்து சதீசன் மங்களாத்து 2025ல் தான் இயக்கிய ஒரு 15 நிமிட குறும்படத்தை டெவலப் செய்து 2 மணி நேரப்படமாகத் தந்துள்ளார்.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு போலீஸ்காரர். அவரை ஒரு புதிய ஏரியாவுக்கு மாற்றுகிறார்கள். நாயகனின் மனைவி நிறை மாத கர்ப்பிணி. அவளைப் பாதுகாப்பாக, கவனமாக இருக்கும்படி சொல்லிவிட்டு நாயகன் தான் போக வேண்டிய ஏரியாவுக்குப் போகிறார்.
அங்கே ஜீப்பில் போகும்போது ஒரு விபத்து நிகழ்கிறது. ஒரு போலீஸ்காரர் அடிபடுகிறார். அவரை ஹாஸ்பிடலுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார். அந்த போலீஸ்காரர் வைத்திருந்த வயர்லெஸ் போனில் கால் வருகிறது. அட்டெண்ட் செய்தால் இன்னொரு போலீஸ்காரர் கானகத்தில் ஆபத்தில் சிக்கி இருப்பதாக சொல்கிறார்.
சில கைதிகளை அழைத்துக்கொண்டு போலீஸ் ஜீப்பில் செல்லும்போது கைதிகள் போலீசை தாக்கி விட்டு தப்பி விடுகின்றனர். அவர்களைத் தேடி காட்டுக்குள் செல்லும் போலீசில் ஒருவர் தான் இவர்.
இதில் சுவராஸ்யமான விஷயம் 1994 கால கட்டத்து ஆள் இவர். நாயகன் 2025ம் வருடத்து ஆள். வெவ்வேறு கால கட்டத்தில் இருக்கும் நபர்கள் ஒரே இடத்தில் சந்தித்தது எப்படி? இதற்கு விடை கூறும் கதை தான் மொத்தத் திரைக்கதையும்.
நாயகன் ஆக நீத்து கிருஷ்ணா அருமையாக நடித்திருக்கிறார். அஸ்கர் அலி, சித்தார்த் பரதன் உள்ளிட்ட மற்ற அனைவரும் கொடுக்கப்பட்ட கேரக்டரை உள் வாங்கி நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு, லொக்கேஷன் இரண்டும் படத்தின் இரு கண்கள். அமானுஷ்யம் நிறைந்த கானகத்தைக் கண் முன் நிறுத்தி இருக்கிறார்கள். பிரம்மாண்டமான காகம் சிலை ஆர்ட் டைரக்சன் திறமைக்கு ஒரு சான்று.
பின்னணி இசை முடிந்த வரை பயம் காட்டுகிறது.
சபாஷ் டைரக்டர்
காகம் சிலையைக் கண்ட பின் கானகத்தை விட்டு வெளியேற வழி இல்லாமல் எந்தத் திசையில் சென்றாலும் ஒரே இடத்திலேயே சுற்றி சுற்றி வருவது திகில்.
படத்தின் ரன்னிங்க் டைம் 129 நிமிடங்கள், ஒரு காட்சி கூட போர் அடிக்கவில்லை.
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்
போர்த்துக்கீசிய மன்னர் காலத்து ஒற்றன் என்று தன்னை சொல்லிக் கொள்பவன் எப்படி சார் என்ற ஆங்கில வார்த்தையை சொல்றான்? அவன் எப்படி நிகழ் கால மொழியைப்பேச முடிகிறது?
புதை குழியில் மாட்டிக்கொண்ட போலீசைக் காப்பாற்ற இரு போலீஸ் ஆபீசர்களும் முயற்சிக்கும்போது அவர் மூழ்கிக்கொண்டே இருக்கிறார். காட்டில் திடீர் என ஒரு சத்தம் வந்ததும் அனைவரும் ஸ்டன் ஆகி நிற்கும்போது புதை குழியும் ஸ்டன் ஆகி விடுமா?
போலீஸ் காவலில் இருந்து தப்பிய கைதிகள் அவர்கள் பாட்டுக்கு ஓடிப் போகாமல் கானகத்தில் மெனக்கெட்டு போலீஸ்காரர்களை எதற்கு தூக்கிக் கொண்டு இருக்கிறார்கள்?
கடோத்கஜன் மாதிரி ஜிம்பாடி உள்ள போலீசை ஒரு பொடிப்பையன் மாதிரி இருக்கும் கைதி கழுத்தை நெறிப்பது எப்படி?
படத்தின் பின்பாதி சம்பவங்கள் Enter Nowhere (2011) என்ற ஹாலிவுட் படத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 13+
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - வித்தியாசமான டைம்லூப் மிஸ்ட்ரி க்ரைம் திரில்லர் படம். மாறுபட்ட ஒரு அனுபவம்.