கிணற்றுக்குள் இருக்கும் பல நூறு ஆண்டு பேய்... 'Secret of Kalinga' ஓடிடி விமர்சனம்!

Secret of Kalinga
Secret of Kalinga source:district
Updated on

திரைப்படம்: Secret of Kalinga

மொழிகள்: மலையாளம் / தமிழ் (டப்பிங்)

வகைமை: சூப்பர் நேச்சுரல் ஹாரர் த்ريرலர்

தளம்: சன் நெக்ஸ்ட் (Sun NXT)

வயது வரம்பு: 16+ (Adult Content Warning)

இயக்கம்: சனீஷ் உன்னிகிருஷ்ணன்

மதிப்பீடு: 2.5 / 5

18/06/2026 முதல் கேரள திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், 24/07/2026 முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்கில் காணக் கிடைக்கிறது.

(குறிப்பு: 2024-ம் ஆண்டு வெளியான 'கலிங்கா' என்ற தமிழ்ப்படத்திற்கும், இந்தப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை).

ஸ்பாய்லர் அலெர்ட் :

ஒரு காலேஜ்க்குப்பின் புறம் அடர்ந்த காடும், ஒரு பாழடைந்த கிணறும் இருக்கிறது.அது தடை செய்யப்பட்ட பகுதி.நாயகனின் நண்பன் குடிபோதையில் அந்த அடர்ந்த வனப்பகுதிக்கு வருகிறான்.அப்போது கிணற்றில் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கிறது.

மந்தாகினி என்ற பெண் பேய் அங்கே பல நூற்றாண்டுகளாக வசித்து வருகிறது.அங்கே யார் வந்தாலும் அவர்களை மயக்கி ,ஹிப்னாடிஸ் செய்து கிணற்றுக்குள் விழ வைத்து கொன்று விடும்.நாயகனின் நண்பன் அந்த கிணற்றில் விழுந்து இறக்கிறான்.

அடுத்த நாள் காலேஜில் அதைப்பற்றித்தான் பேச்சு."இனி யாரும் அந்தக்காட்டுப்பகுதிக்கோ, கிணற்றின் அருகேயோ செல்லக்கூடாது" என எச்சரிக்கப்படுகிறது.

மந்தாகினியின் பிளாஷ்பேக்:

பல நூற்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் ஒன்று.கலிங்க நாட்டின் மன்னன் யாராலும் வெற்றி கொள்ள முடியாதவனாக இருந்தான்.அவனுக்கு ஆண் வாரிசு இல்லை.மந்தாகினி என்ற பெண் மட்டுமே.இளவரசி சின்ன வயதில் இருந்தே துணிச்சலுடன் வளர்ந்தாள்.பெரியவள் ஆனதும் நாட்டின் அரசுப்பொறுப்பை ஏற்றுக்கொண்டாள்.அவளிடம் சக்தி வாய்ந்த மந்திர திரவம் இருந்தது.அது இருப்பதால் தான் யாராலும் வெல்ல முடியவில்லை என்ற பேச்சு எழுந்தது.எதிரிகள் சதித்திட்டம் தீட்டி அந்த மந்திர திரவத்தை இளவரசி மந்தாகினியிடமிருந்து அபகரித்து,சதி செய்து அவளைத்தோற்கடித்து ஒரு கிணற்றில் அவளைப்போட்டு மூடி விடுகிறார்கள்.தனது முடிவுக்குக்காரணமானவர்களை மந்தாகினி பழி வாங்குவதாக ஒரு ஐதீகம். அந்த வழியில் யார் சென்றாலும் அவர்கள் தானாகவே கிணற்றில் குதித்து இறந்துவிடுவார்கள்.

இந்தக் கதை கல்லூரியில் பரப்பப்பட்டதும் பலரும் அதை நம்பவில்லை. தடையை மீறி அந்த இடத்துக்கு செல்லத்துடிக்கிறார்கள்.சில காலம் கழித்து பலரது வேண்டுகோளுக்கு இணங்க அந்தத்தடை அகற்றப்படுகிறது.புது வருடம் பிறக்க இருப்பதால் புது வருடக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அந்தத்தடை செய்யப்பட்ட பகுதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

நாயகனின் தம்பி இப்போது அந்தக் கல்லூரியில் படிக்கிறான். அவனுக்கு ஒரு காதலியும் உண்டு.சில வருடங்களுக்கு முன் நாயகன் அங்கே சென்றபோதும், நாயகனுக்கு எந்தப் பாதிப்பும் நிகழவில்லை. இப்போது நாயகனின் தம்பியும் கிணற்றுக்குள் விழுந்தும் உயிருடன் வந்துவிடுகிறான்.அப்படியானால் நாயகனுக்கும், நாயகனின் தம்பிக்கும், அந்த கலிங்க இளவரசி மந்தாகினிக்கும் ஏதோ ஒரு முன்ஜென்ம தொடர்பு இருக்கும் என நாயகன் கணிக்கிறான். அந்த ரகசியத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கிறான். இதற்கு பின் நிகழும் சம்பவங்களே மீதித் திரைக்கதை!

Secret of Kalinga
Secret of Kalingasource:indianexpress

நடிகர்களின் பங்களிப்பு:

  • சனீஷ் உன்னிகிருஷ்ணன் (நாயகன்): நாயகனாக சனீஷ் உன்னி கிருஷ்ணன் நடித்திருக்கிறார், கச்சிதமான நடிப்பு.

  • அல்தாப் சலீம் (நாயகனின் தம்பி): நாயகனின் தம்பியாக வரும் அல்தாப் சலீம் தான் படத்தில் அதிக நேரம் வருகிறார்.இவருக்கு ஒரு காதலியும் உண்டு என்பதால் இவர் தான் நிஜ நாயகன். இவரது காமெடி சென்ஸ், டயலாக் டெலிவரி கன கச்சிதம்.

  • பிற நடிகர்கள்: தியான் சீனிவாசன், மாளவிகா மேனன், ரியாஸ் கான், கவுரி நந்தா, லட்சுமி நந்தன், உல்லாஸ் பந்தலம் என மற்ற அனைத்துக் கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் தங்களுக்கு தரப்பட்ட பங்கினை சரியாக செய்திருக்கிறார்கள்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

  • இயக்கம் & நடிப்பு: சனீஷ் உன்னிகிருஷ்ணன்

  • திரைக்கதை: ஜிஷ்னு எம். ஆர்யன் & சனீஷ் உன்னிகிருஷ்ணன்

  • ஒளிப்பதிவு: ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார்கள். மந்தாகினி பேயால் பாதிப்படைபவர்களின் விழிகள் மட்டும் முழு வெள்ளைக்கண்மணி ஆக மாறுவது திகில்.

  • பின்னணி இசை: பின்னணி இசையும் அதன் பங்கிற்கு ரசிகர்களை மிரட்டியிருக்கிறது.

சபாஷ் டைரக்டர் (பலங்கள்):

  1. சுவாரஸ்யமான தொடக்கம்: படத்தின் ஓப்பனிங்க் சீனில், மந்தாகினிப் பேயால் இறக்கும் முதல் ஆளின் கதையை, மூன்று வெவ்வேறு கோணங்களில் மாற்றி மாற்றி சொன்ன விதம் அருமை.

  2. நம்பகமான பிளாஷ்பேக்: மந்தாகினிப் பேயின் பிளாஷ்பேக் கதை நம்பும்படி சொல்லப்பட்ட விதம் சிறப்பு.

  3. காமெடி கெமிஸ்ட்ரி: நாயகனின் தம்பிக்கும் அவனுடைய காதலிக்குமான ரொமாண்டிக் போர்ஷன் நல்ல காமெடி

  4. பார்ட் 2 'லீட்': நாயகன், நாயகனின் தம்பி, மந்தாகினிப் பேய் ஆகிய மூவருக்குமான தொடர்புக் கதையை வைத்து 'பாகம் 2' விரைவில் வரும் என்று க்ளைமாக்ஸில் காட்டியது குட்!

லாஜிக் மிஸ்டேக்ஸ் (குறைபாடுகள்):

  1. பல நூற்றாண்டுகளுக்கு முன் கிணற்றில் சிறை வைக்கப்பட்ட மந்தாகினி தன் இறப்புக்குக்காரணமானவர்களை மட்டும் தானே பழி வாங்க வேண்டும்?அப்பாவி மாணவர்களை ஏன் கொல்ல வேண்டும்?

  2. சரித்திரபுகழ் பெற்ற இடத்தை அரசாங்கம் ஏன் டேக் ஓவர் செய்து உரிய பாதுகாப்புத்தரவில்லை?

  3. நாயகியின் தோழி ஒரு காண்டம் பாக்கெட்டை நாயகியின் பேக்கில் வைப்பது அதற்கான காரணத்தை சொல்வது எதுவும் நம்பும்படி இல்லை.

  4. நாயகியின் பேக் கில் தோழி வைத்த காண்டம் பாக்கெட் இருக்கிறது. அதை எடுக்க வேண்டும் என நாயகி பரிதவிப்பதும் செயற்கை.விடிந்தால் நியூ இயர், காலேஜ் லீவ் தானே? எதற்குப்பதற வேண்டும்?

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 16+

கல்கி கமெண்ட்:

ஹிஸ்டாரிக்கல் ஹாரர் திரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம். சில பயமுறுத்தும் காட்சிகள் உண்டு..!

ரேட்டிங் 2.5/5

இதையும் படியுங்கள்:
அம்மாவின் மரணம்... சந்தேக வளையத்தில் அப்பா! நெட்ஃபிலிக்ஸின் 'The Truthers' திரை விமர்சனம்!
Secret of Kalinga
இதையும் படியுங்கள்:
பதி, பத்னி அவுர் வோ தோ (Pati, Patni Aur Woh Do - 2026): சினிமா விமர்சனம் @ நெட்பிளிக்ஸ்..!
Secret of Kalinga
logo
Kalki Online
kalkionline.com