

திரைப்படம்: The Truthers (மூலத் தலைப்பு: Los Creyentes)
மொழிகள்: ஸ்பானிஷ் / ஆங்கிலம் / தமிழ் (டப்பிங்)
வகைமை: சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர்
தளம்: நெட்ஃபிலிக்ஸ் (Netflix)
வயது வரம்பு: 18+ (Adult Content Warning)
இயக்கம்: ரோஜர் குவால்
மதிப்பீடு: 3/5
ஸ்பாய்லர் அலர்ட் (Spoiler Alert):
நாயகி ஒரு பார் டெண்டர் ஆக பெர்லின் நகரில் வசிக்கிறாள். அவளது பெற்றோர் ஸ்பெயினில் வசிக்கிறார்கள். அம்மாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நாயகி பெற்றோரை பிரிந்து தனியாக வசிக்கிறாள். கடந்த இரண்டு வருடங்களாக பெற்றோருடன் எந்தவிதத் தொடர்போ பேச்சுவார்த்தையோ அவளுக்கு இல்லை.
ஒரு நாள், நாயகியின் அம்மா அவளுக்கு போன் செய்கிறாள். ஆனால், நாயகி போனை எடுக்கவில்லை. "உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்;, சில உண்மைகளை சொல்ல வேண்டும் என நாயகியின் அம்மா நாயகிக்கு வாட்ஸ்அப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறாள். அப்போதும் நாயகி அசால்ட்டாக இருக்கிறாள்.அன்று இரவு பார்ட்டிக்குச் சென்று ஜாலியாகக் கொண்டாடிவிட்டு வீட்டிற்குத் திரும்பும் நாயகிக்கு, அவளது அப்பா போன் செய்கிறார். "உன் அம்மா குடித்துவிட்டுப் போதையில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து, தலையில் அடிபட்டு இறந்துவிட்டாள்" என்று சொல்ல அதிர்ச்சி அடைந்த நாயகி உடனே அங்கே போகிறாள்.
அப்பாவின் நடவடிக்கைகள், பேச்சு, உடல்மொழி அனைத்துமே சந்தேகத்திற்கு இடமாக இருக்க, "தன் அப்பாதான் அம்மாவைக் கொலை செய்துவிட்டு விபத்து என நாடகமாடுகிறாரோ?" என நாயகி சந்தேகப்படுகிறாள்.
இதையடுத்து தன் முன்னாள் காதலனை வரவழைக்கும் நாயகி, அதே வீட்டில் தங்கித் தன் அம்மாவின் மர்ம மரணத்தின் பின்னணியை பற்றித் தகவல்களை சேகரிக்கிறாள். இதற்குப்பின் நிகழும் பரபரப்பான சம்பவங்களே மீதித் திரைக்கதை!
ஸ்டெபனி மாக்னின் (நாயகி): நாயகியாக ஸ்டெபனி மாக்னின் பிரமாதமாக நடித்திருக்கிறார். அப்பா மேல் சந்தேகப்படுவது, காதலனுடன் வாக்குவாதம் செய்வது, போலீசில் புகார் கொடுப்பது என கலவையான உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஜோஸ் கொரனாடோ (அப்பா): இவர் சைக்கோவா? அரை லூசா? அல்லது காரியக் கிறுக்கா? என்று தெரியாமல் ஆடியன்சை குழப்பும் வித்தியாசமான நடிப்பு.மனிதர் அசத்துகிறார்!
அல்பர்ட்டோ ஓமோ (முன்னாள் காதலன்): நாயகியின். முன்னாள் காதலனாக அல்பர்ட்டோ ஓமோ கெஸ்ட் ரோலில் வந்து போகிறார். கச்சிதமான நடிப்பு.
மேலே சொன்ன முதன்மை கதாபாத்திரங்கள் தவிர, சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
கார்லோஸ் மோண்ட்டரோ + டாரியோ மட்ரோனா இருவரும் இணைந்து திரைக்கதை அமைக்க ரோஜர் குவால் இயக்கி இருக்கிறார்.
பின்னணி இசை நிக்கோ கேஸ்டல் அருமை. ஜூவானா ஜ்மெனென்சியின் ஒளிப்பதிவு கச்சிதம்.டார்க் டோனை பிரமாதமாக செட் செய்திருக்கிறார்.
ரன்னிங் டைம்: 105 நிமிடங்கள்
நம் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களுக்கு எப்போதும் காரண காரியத்தை தேடிக்கொண்டிருக்க கூடாது என்ற சைக்கலாஜிக்கல் தத்துவத்தை சொன்ன விதம் அருமை.
கதை ஆரம்பித்து 90% போர்ஷன் முடியும் வரை நாயகியின் அம்மாவை நாயகியின் அப்பாதான் கொலை செய்திருப்பார் என்ற சந்தேகத்தின் பாதையில் கதை செல்ல திடீரென நாயகியின் அப்பா நாயகியின் மீது சந்தேகப்படுவதாக போலீசில் புகார் தருவது எதிர்பாராத திருப்பம்.
நாயகியின் அப்பாவும், அவரது தோழியும் இணைந்து ஒரு மெடிக்கல் கம்பெனியின் சட்டத்துக்கு புறம்பான வேலைகளை தோலுரிக்க முற்படுவதுதான் மெயின் கதை என்று க்ளைமாக்ஸில் யூ-டர்ன் அடிப்பது நல்ல திருப்பம்.
க்ளைமாக்ஸில் நாயகியின் அப்பாவா அல்லது நாயகியா... யார் அம்மாவின் மரணத்திற்கு முதன்மை காரணம் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் முடித்த விதம் புத்திசாலித்தனமானது.
கொலையாளி யார் என்பதை சொல்வதை விட; துக்கம், பயம், ஆதாரமில்லாத நம்பிக்கைகள் போன்றவை மனிதர்களை எப்படித் தவறான முடிவுக்கு அழைத்து செல்லும் என்பதை சைக்கலாஜிக்கலாக இயக்குநர் விளக்கிய விதம் அருமை.
நாயகியின் காதலன், தான் பணிபுரியும் மெடிக்கல் கம்பெனியின் ஐடி கார்டை நாயகியின் வீட்டில் மிஸ் செய்கிறான். அப்போதே கம்பெனியில் அதை பற்றி புகார் கொடுத்து வேறு கார்டும் வாங்கிக் கொள்கிறான். பொதுவாக மிஸ் ஆன கார்டை லாக் செய்து விடுவார்கள். அதை எப்படி ஆக்சஸ் செய்து ஒருவர் கம்பெனியின் உள்ளே போக முடியும்
தேவையற்ற விவாதம்: நாயகியின் அம்மாவுக்கு குடிப்பழக்கமே இல்லை என நாயகி வாதிடுகிறாள். ஆனால், நாயகி வீட்டை விட்டு போன சோகத்தில் கடந்த 2 ஆண்டுகளாகத்தான் அவளுக்கு குடிப்பழக்கம் இருந்தது என அப்பா வாதிடுகிறார். எதற்கு இந்த வீண் விவாதம்? போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டிலேயே அது தெரிந்துவிடுமே!
போலீஸ் அலட்சியம்: ஏரியில் நாயகி காலில் கிழித்தது காணாமல் போன சிறுவனின் சைக்கிள், அதனால் சிறுவனின் பிணம் ஏரியில் இருக்கலாம் என நாயகி சொல்கிறாள்.அதை அப்போதே போலீசில் ஏன் சொல்லவில்லை?
மெதுவான திரைக்கதை: படத்தின் ரன்னிங் டைம் 105 நிமிடங்கள்தான். ஆனால் 3 மணி நேரப் படம் பார்த்தது போன்ற உணர்வைத் தருகிறது. பொறுமை மிக மிகத் தேவை.
1. ரிட்டையர் ஆனபின் எல்லாமே முடிஞ்சிடுச்சு என்று அர்த்தம் இல்லை.
2 நேர்மையான வழியில் நான் போறேனா? இல்லையா?தெரியாது. ஆனா நிச்சயம் கெட்ட வழியில் இல்லை
3. நம்ம கூட இல்லாத ஒருவர் மீது குறை சொல்லி என்ன பயன் ?
4. இன்னொருவர் மீது குறை சொல்வது, பழிப்போடுவது ரொம்ப ஈசி.
5.எப்பவும் யாரையாவது குத்தம் சொல்லிட்டே இருப்பது சிலருக்கு மிக எளிது.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 18+
மாறுபட்ட 'ஸ்லோ பர்ன்' (Slow-burn) க்ரைம் டிராமாக்களை பார்க்க விருப்பமுள்ளவர்கள் தாராளமாக பார்க்கலாம். பெண்களுக்கு பிடிக்க கூடிய படம்!
ரேட்டிங் 3/5