பிரபல சீரியல் நடிகர் 'நேத்ரன்' மருத்துவமனையில் அட்மிட்!

Nethran
Nethran
Updated on

சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சின்னத்திரையில் பல ஆண்டுகளாக நடிகராக வலம் வருபவர் நடிகர் நேத்ரன். சீரியல்களில் மட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோ மற்றும் திரைப்படங்களில் கூட துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மருதாணி சீரியல் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய நேத்ரன் சூப்பர் குடும்பம், முள்ளும் மலரும், வள்ளி, சதிலீலாவதி, மஹாலக்ஷ்மி, உறவுகள் சங்கமம், பாவம் கணேசன் உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார்.

நடிகர் நேத்ரன் சக நடிகையான தீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரு மகள்கள் உள்ளனர். நேத்ரன் மனைவி தீபாவும் பிஸியாக பல தொடர்களில் நடித்து வருகிறார். தற்போது முத்தழகு, சிங்கப்பெண்ணே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

மிகவும் பிரபலமான டான்ஸ் ரியாலிட்டி ஷோவான 'ஜோடி நம்பர் 1' நிகழ்ச்சியில் நேத்ரன் தனது மகள் அபிநயாவுடன் இணைந்து நடனமாடியுள்ளார். அபிநயா சிறந்த நடன தலைநகராக விளங்குகிறார். சோசியல் மீடியாவில் அவ்வப்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார்.

சமீப காலமாக திரைத்துறையை சேர்ந்த பலரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சின்னத்திரை நடிகர் ஒருவர் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார் என்ற தகவலை அவரின் மகள் உருக்கமான வீடியோ மூலம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தந்தைக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
சாலிகிராமத்தையே வாங்கும் சூரி – பார்த்திபன் ஓபன் டாக்!
Nethran

அதில், அப்பா சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு கேன்சர் பாசிட்டிவ் என வந்துள்ளது. அதற்கான அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. ஆனால் அவரின் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐசியூவில் வைத்து இருக்கிறார்கள். அவர் விரைவில் குணமடைந்து வீட்டுக்கு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இதை எப்படி அனைவருக்கும் தெரிவிப்பது என பல நாட்களாக தயங்கி கொண்டே இருந்தேன். ஆனால் இப்போது தான் சொல்ல முடிந்தது. நீங்கள் அனைவரும் அப்பா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களின் பாசிட்டிவ் வைப்ஸால் நிச்சயம் அப்பா விரைவில் சரியாகிவிடுவார் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com