ஹிந்தி பிக்பாஸிற்கு சென்று பட்டையை கிளப்பிய ஸ்ருதிகா தற்போது எலிமினேட் ஆகவுள்ளார். இதுகுறித்தான முழு விவரத்தையும் பார்ப்போம்.
தமிழ் பிக்பாஸ் போலவே ஹிந்தி பிக்பாஸும் தமிழக மக்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறது. அதற்கு ஒரே காரணம் ஸ்ருதிகாதான். ஸ்ருதிகாவின் காட்சிகள் மட்டும் இங்கு வைரலாகி வந்தன. மேலும் சிலர் அந்த காட்சிகளை மட்டும் தமிழில் டப் செய்துப் பார்க்கிறார்கள். குக் வித் கோமாளி மூலம் பிரபலமான ஸ்ருதிகாவின் இயல்பான குணம் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அதனை ஹிந்தி மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? இல்லை நாடகம் என்று சொல்வார்களா? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு இருந்தது.
அதேபோல் முதலில் ஸ்ருதிகாவை ட்ரோல் செய்தவர்கள், பின்னர் அவருக்கே ரசிகர்களாக மாறிவிட்டனர். அந்தளவிற்கு ஸ்ருதிகாவின் உண்மை முகம் வெளிவந்தது. சல்மான் கான் முதல் ஹிந்தி பிக்பாஸ் வரை ஸ்ருதிகாவிடம் சகஜமாக பேசி சிரிக்கும் வீடியோக்கள் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும்.
தமிழ் பிக்பாஸ் போலவே ஹிந்தி பிக்பாஸும் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. சென்ற வாரம் ஹிந்தி பிக்பாஸில் ஃபேமிலி ரவுண்ட் வந்தது. இதில் ஸ்ருதிகா அர்ஜுனை சந்தித்தார். அதேபோல் அவரது மகனும் அங்கு வந்தார். அவர்கள் ஸ்ருதிகாவை டைட்டில் வின்னர் ஆகும்படி சொல்லி வாழ்த்தினார்கள்.
இப்படியான சூழ்நிலையில் இந்த வாரம் நடந்த மீட் வீக் எவிக்ஷனில் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் வெளியேறி இருப்பதாக இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. இதேதான் ஹிந்தி ஊடகங்களும் தெரிவித்துள்ளன.
இதற்கு தமிழ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதாவது ஒரு தமிழ் பெண்ணாக இருந்து ஹிந்தி பிக்பாஸில் வெற்றிபெறுவது கடினம்தான். இவ்வளவு தூரம் வந்ததே பெரிய சாதனைதான் என்று புகழ்ந்து வருகின்றனர்.
மற்றொருபக்கம் விஜய் டிவி பிரபலங்கள் குரேஷி, புகழ் ஆகியோரும் ஓட்டு போட்டதாக வீடியோ வெளியிட்டு வருகின்றனர். ஒட்டுமொத்த இந்திய மக்களின் மனதில் ஸ்ருதிகா இடம் பிடித்ததால், இவரின் எலிமினேஷன் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இனி எப்போது அவர் தமிழ்நாட்டிற்கு திரும்பி வருவார் என்பதை நோக்கி தமிழக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.