சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே தொடரில் மித்ராவின் ப்ளான் வெற்றியில் முடிகிறது. இதனால் ஆனந்தி மிகப்பெரிய சிரமத்தில் மாட்டிக்கொண்டார்.
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு, ஆனந்தி மற்றும் மகேஷ் என ஒரு முக்கோண காதல் கதை காட்டப்படுகிறது. அன்பு தான்தான் அழகன் என்று சொல்லாமல் ஆனந்தியை காதலித்து வந்தார். அதேபோல் மகேஷும் ஆனந்தியை காதலிக்கிறார். இதனையடுத்து ஆனந்திக்கு உண்மை அனைத்தும் தெரிந்துவிட்டது. அதாவது அன்புதான் அழகன் என்பது ஆனந்திக்கு தெரியவந்தது. பிறகு இருவரும் தங்களது காதலை தெரிவித்துக் கொண்டார்கள்.
இப்படித்தான் கதை நகர்ந்து வருகிறது. அந்தவகையில் அன்பு மற்றும் மகேஷ் ஆனந்தியை ஹவுஸ் கீப்பிங் வேலையிலிருந்து ப்ரொமோட் செய்து டெய்லராக மாற்றிவிடுகிறார்கள்.
இது கருணாகரன் மற்றும் மித்ராவிற்கு பிடிக்கவே இல்லை. ஆனந்தி டெய்லராக மாறிவிட்டால், கம்பெனியில் நிரந்தர உறுப்பினராக மாறிவிடுவார் என்று இருவரும் பயப்படுகின்றனர்.
ஆனந்திக்கும் உஷாவிற்கும் இடையே பெரிய போட்டி நடைபெறுகிறது. அதாவது இருவரில் யார் வேகமாக அழகாக மூன்று டிஷர்ட் தைக்கிறார்கள் என்ற போட்டி வைக்கப்படுகிறது.
இதில் ஆனந்திதான் இறுதியில் வெற்றிபெறுகிறார்.
இதனையடுத்து இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில், ஆனந்தி இந்த குவாலிட்டி செக்கிங்கிலும் ஜெயித்தது போல் காட்டப்படுகிறது. உடனே கருணாகரன் மித்ராவிடம் நீங்க ஆனந்தியுடன் தானே ஹாஸ்டலில் தங்கி இருக்கீங்க. எப்படியாவது ஆனந்தியை நாளைக்கு ஆபிஸ்க்கு வரவிடாமல் தடுத்துவிடு என்கிறார். மித்ராவும் அதற்கு திட்டம் போடுகிறார்.
ஆனந்தி பாத்ரூமில் குளிக்க போன சமயத்தில் அந்த ஹாலில் சோப்பு நுரையாலான தண்ணியை அவளும் அவளுடைய தோழிகளும் ஊத்துகிறார்கள்.
ஆனந்தியின் பாத்ரூம் கதவையும் தட்டி விட்டு சென்று விடுகிறார்கள்.
ஆனந்தி வெளியே வரவும் சோப்பு தண்ணீர் வழுக்கி கீழே விழுந்து விடுகிறாள். ஆனந்தியின் கை மற்றும் வயிற்றுப் பகுதியில் அடிபட்டு விடுகிறது.
இதனால் மித்ராவின் திட்டம் கச்சிதமாக நிறைவேறிவிடுகிறது. ஆனால், ஆனந்தியால் இந்த கையை வைத்துக்கொண்டு தைக்க முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதற்கிடைய ஆனந்தி கர்ப்பமாக இருப்பது ஒரு கதை நகர்வாக இருக்கிறது. இப்போது ஆனந்தி கீழே விழுந்து வயிற்றில் அடிப்பட்டிருக்கிறது. இதனால் வயிற்றில் குழந்தை நலமாக இருக்கிறதா? என்பதுதான் ரசிகர்களின் சந்தேகமாக இருக்கிறது.