சூப்பர் ஹீரோ படத்தில் பாலையாவுடன் ஜோடி சேரும் உலக அழகி!

Aiswarya Rai with Balayya
Aiswarya Rai with Balayya
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

தெலுங்கு முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

தமிழ் சினிமாவில் எப்படி ரஜினிகாந்தோ அதேபோல் தெலுங்கு சினிமாவில் பாலையா. அந்தக் காலத்தில் ரஜினிகாந்த் அவரது ஸ்டைலுக்காகவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதேபோல் பாலையா தனது ஆக்ஸனுக்காக பிரபலமானார். இவர் ஒற்றை விரலால் ரயிலேயே நிப்பாட்டுவார், இவர் அடித்தால் மனிதர்கள் மட்டும் பறக்கமாட்டார்கள், கார்க்கூட காற்றில் பறக்கும். அப்போது இதனை அனைவரும் ஒரு மாஸாக பார்த்தனர்.

ஆனால், இப்போதைய ரசிகர்கள் இதை வைத்து ட்ரோல் செய்கிறார்கள். இருந்தாலும் பாலையா படங்கள் நன்றாக திரையரங்குகளில் ஓடி வசூல் ரீதியாக ஹிட் கொடுத்துதான் வருகிறது.

பாலையா 1974ம் ஆண்டிலிருந்து சினிமா துறையில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் பகவந்த் கேசரி. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாக செய்திகள் வந்தன. அதுவும் இப்படம்தான் விஜய் நடிக்கும் தளபதி 69 படமாம்.

இந்த நிலையில், பாலகிருஷ்ணா நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாலகிருஷ்ணா சூப்பர் ஹீரோ கதைக்களம் கொண்ட படத்தில் நடிக்கப்போகிறாராம். பாலகிருஷ்ணா சூப்பர் ஹீரோவாக நடிக்கவிருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கப்போகிறார் என்கின்றனர். 

ஐஸ்வர்யா ராய் வெகுகாலம் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்காமல் இருந்து வந்தார். அதன்பின்னர் பொன்னியின் செல்வன் படத்தில்தான் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து மீண்டும் ஒரு ஹிட் கொடுத்தார்.

இதையும் படியுங்கள்:
சிறகடிக்க ஆசை: வீட்டை விட்டு வெளியேறும் ஸ்ருதி.. அமைதிகாக்கும் ரவி!
Aiswarya Rai with Balayya

அந்தப் படத்திலேயே கொஞ்சம் குண்டாக இருந்தார். அதன்பின்னர் அதிகம் குண்டாகிவிட்டார். இதனால், பலர் அவரை உருவக்கேலி செய்தனர். அதற்கு அவர் குழந்தைகள் பிறந்தால் குண்டாவது சகஜம்தான் என்று கூறி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அதேபோல் மறுபக்கம் அபிஷேக் பச்சனுக்கும் இவருக்கும் விவாகரத்தாகவுள்ளதாகவும் செய்திகள் வந்தன. இருவரும் பிரிந்து வாழ்வதாகவும், அவர்களது மகள் ஐஸ்வர்யா ராயுடன் இருந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் இவர் பாலையாவுடன் படத்தில் இணையவுள்ளது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com