சிங்கப்பெண்ணே: அன்புவிற்கு வந்த பேராபத்து… உதவிக் கரம் நீட்டும் மகேஷ்… ஆனந்தி நிலை என்ன?

Singapenne
Singapenne
Published on

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே தொடரில் அன்புவிற்கு ஒரு பிரச்னை வருகிறது. அதற்கு மகேஷ் தான் உதவவுள்ளதுபோல் கதை நகர்கிறது. இதற்கிடையே ஆனந்தி நிலைமை என்னவாகும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு, ஆனந்தி மற்றும் மகேஷ் என ஒரு முக்கோண காதல் கதை காட்டப்படுகிறது. அன்பு தான்தான் அழகன் என்று சொல்லாமல் ஆனந்தியை காதலித்து வந்தார். அதேபோல் மகேஷும் ஆனந்தியை காதலிக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் அன்புதான் அழகன் என்பது ஆனந்திக்கு தெரிய வந்தது. அதுமுதல் ஆனந்தி மற்றும் அன்பு இருவரும் காதலித்து வருகிறார்கள்.

இது தெரியாமல் மகேஷும் ஆனந்தியை காதலித்து வருகிறார். இப்படியான நிலையில் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த விஷயம் நடந்துவிட்டது.

அதாவது மகேஷ் தனது காதலை ஆனந்தியிடம் வெளிப்படையாக சொல்லிவிடுகிறார். அதற்கு ஆனந்தி மண்டியிட்டு அழுகிறார். என் உயிரைக் கூட கேளுங்கள் கொடுக்கிறேன். ஆனால், காதலை மட்டும் கேட்காதீர்கள். என் மனது என்னிடம் இல்லை. அது அன்புவிடம் இருக்கிறது என்று கதறி அழுகிறார். எதுவும் சொல்லிக்கொள்ளாமல் மகேஷ் அங்கிருந்து கிளம்புகிறார்.

இதையும் படியுங்கள்:
என் மகன் படம் வெற்றிபெற்றால் புகைப்பிடிப்பதை நிறுத்துகிறேன் – அமீர்கான்!
Singapenne

ஆனால் இடையில் மாட்டிக்கொண்டது அன்புதான். ஏனெனில் ஒருபக்கம் காதலி மறுபக்கம் உயிர் நண்பன் என்று இருவருக்கும் இடையே சிக்கிக்கொண்டார்.

இப்படியான நிலையில்தான், அன்புவின் அம்மாவுக்கு பெரிய ஆபத்து வந்திருக்கிறது. திருடர்கள் கழுத்தில் இருக்கும் செயினை அறுக்கும்போது கீழே விழுந்து விடுகிறார் அன்புவின் அம்மா.

இதனால் அவருடைய தலையில் அடிபட்டு இருக்கிறது. மேலும் தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அன்பு தனது அம்மாவின் மருத்துவ செலவை எப்படி பார்க்கப்போகிறார் என்பது தெரியவில்லை. எப்படியும் இதற்கு மகேஷ் தான் உதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அப்படி உதவி செய்தால், அன்பு மீண்டும் மகேஷுக்கு கடன் படுவார்.

இதையும் படியுங்கள்:
சென்னை முட்டுக்காட்டில், சொகுசு கப்பலில் 'மிதக்கும் உணவகம்' - ஒரு கண்ணோட்டம்
Singapenne

ஏற்கனவே அன்பு மகேஷ் காட்டும் பாசத்தால் உருகிப் போய் கிடக்கிறான். இதில் மகேஷ் கொடுக்கும் பணத்தால் அன்புவின் அம்மா உயிர் பிழைத்து விட்டால் அவ்வளவுதான் கதை முடிந்தது. மகேஷின் காதலை சேர்த்து வைக்க கூட அதிக வாய்ப்பு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com