சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில், மகேஷ் ஆனந்தி இல்லையென்றால் செத்துவிடுவேன் என்று கூறியது அனைவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.
அன்பு ஆனந்தி மகேஷ் என்ற முக்கோண காதல் கதைதான் சிங்கப்பெண்ணேவின் முழு கதையும். அன்பு மற்றும் ஆனந்தி காதலிப்பது மகேஷுக்கு தெரியாமல் இருக்கிறது. ஆனால் மகேஷ், ஆனந்தி மீதுள்ள காதலில் பலவற்றை தியாகம் செய்கிறார்.
ஒரு சின்ன வீட்டில் தங்க முடிவெடுக்கிறார். காதலுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன் என்று மகேஷ் கூறினாலும், அந்த குட்டி வீட்டில் அவரால் இருக்க முடியவில்லை. மொட்டை மாடியில் மகேஷ் வெயிலில் படுத்திருக்கிறார். இவரின் இந்த கஷ்டங்களைப் பார்த்த அன்பு, மிகவும் வருத்தப்படுகிறார். உடனே ஆனந்திக்கு போன் பண்ணி இது பற்றி வருத்தமாக பேசுகிறான்.
இதனால் ஆனந்தி, அன்புவும் தானும் காதலிப்பதாக மகேஷிடம் கூறிவிட வேண்டும் என்று முடிவெடுக்கிர்றார். இதன் முதற்கட்டமாக வார்டனிடம் தன்னுடைய காதலைப் பற்றி கூறுகிறார்.
இது அவருக்கும் மிகவும் ஷாக் ஆகிறது. ஏனெனில் மகேஷுடன் ஆனந்தியை சேர்த்து வைக்க வார்டன் ப்ளான் செய்தார். ஆனால், இப்போது ஆனந்தியின் முடிவு அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும். அவளின் உணர்வை மதிக்கிறார். மேலும் ஆனந்தி நானும் அன்புவும் காதலிப்பதை நீங்கள்தான் மகேஷிடம் கூற வேண்டும் என்று வார்டனிடம் கூறிவிடுகிறார்.
தயக்கத்துடன் வார்டன் கால் செய்து மகேஷை வரவழைக்கிறார். இதை கேட்டுக் கொண்டிருக்கும் மித்ரா அதை பார்வதியிடம் சொல்கிறாள்.
அந்தவகையில் இன்றைய ப்ரோமோவில், வார்டன் பேச ஆரம்பிப்பதற்குள்ளையே மகேஷ் ஆனந்தி இல்லனா நான் செத்துடுவேன் என்று சொல்லி விடுகிறான்.
இது வார்டனுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது. அதனால் அன்பு மற்றும் ஆனந்தியின் காதலைப் பற்றி மகேஷிடம் சொல்லாமல் விட்டு விடுகிறார்.
ஆனந்தி வார்டனிடம் இதுகுறித்து கேட்கும்போது மகேஷ் சொன்னதை அவளிடம் கூறுகிறார். இதனால், ஆனந்தியின் கடைசி நம்பிக்கையும் உடைந்துவிட்டதாக அவர் எண்ணுகிறார்.
இனி என்ன நடக்கப்போகிறது என்பதையும், பார்வதி என்ன செய்யப்போகிறார் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.