
பெண்களின் அலங்காரத்தில் லிப்ஸ்டிக் தவிர்க்க முடியாத அளவு சாதன பொருளாக இருக்கிறது. மேக்கப் போடுவதற்கு ஆர்வம் காட்டாதவர்கள் கூட லிப்ஸ்டிக்கை உபயோகிக்க தவறமாட்டார்கள். ஒரு சில நிமிடங்களிலேயே லிப்ஸ்டிக் கை பூசி அழகை மெருகேற்றி விடலாம்.
அதே வேளையில் லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் ஏனெனில் சிலவகை லிப்ஸ்ட் டிக் குகளில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது.
பாதிப்புகள்;
*லிப்ஸ்டிக் கலந்திருக்கும் ஈயம் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க கூடியது. அதனை தொடர்ந்து பயன் படுத்துவது நீண்டகால ஆரோக்கிய பிரச்னைகளை ஏற்படுத்தும்.
*லிப்ஸ்டிக்ல் காணப்படும் பித்தலேட்டுகள் நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
*பாலி எத்திலின், கிளைக்கோலிக் அமிலம் உள்ளிட்டவையும் லிப்ஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப் படுகின்றன அதை நரம்பு மண்டலத்திற்கு பாதிப்புகளை உண்டாக்கக்கூடியது.
*பாரபின் மெழுகு என்னும் ரசாயனமும் லிப்ஸ்டிக்கில் சேர்க்கப்படுகிறது. அது சருமத்துக்குள் எளிதில் ஊடுருவும் தன்மை கொண்டுள்ளது. சரும எரிச்சல் புற்றுநோய் உள்ளிட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தவும் வழி வகுக்கும்.
*லிப்ஸ்டிக்கில் உடலுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சில நச்சுப் பொருள்களும் உள்ளது. அவற்றை உடல் உறிஞ்சுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இது தெரியாமல் பலரும் லிப்ஸ்டிக்கை அதிகம் பூசுகிறார்கள். அடர்த்தியாக பூசினால்தான் பளிச்சென்று தெரியும் என்ற எண்ணம் இதற்கு காரணமாக இருக்கிறது.
*லிப்ஸ்டிக்கை உபயோகிக்கும்போது உதடுகளில் திடீரென்று அரிப்பு ஏற்பட்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அது ஒவ்வாமையின் அறிகுறியாக அமையும்.
*லிப்ஸ்டிக்கில் பிஸ்மத் ஆக்ஸி குளோரைடு என்னும் ரசாயனம் கலந்திருக்கிறது. இது சரும செல்களை சிதைக்க கூடியது. அதனால் எச்சரிக்கையுடன் இதனை உபயோகிக்க வேண்டும்.
*லிப்ஸ்டிக் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் இருமல், கண் எரிச்சல், மூச்சுத்திணறல், உள்ளிட்ட உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். லிப்ஸ்டிக்கில் பெட்ரோ கெமிக்கல்கள் உள்ளன. இவையும் நாளமில்லா சுரப்பி செயல்பாடுகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். முக்கியமாக அறிவு ஆற்றல் மற்றும் இனப்பெருக்க திறன்களில் சிக்கல்களை உண்டாக்கும்.
*அடிக்கடி லிப்ஸ்டிக் பயன்படுத்துவது சிறுநீரக செயலிழப்புக்கும் வித்திடும். லிப்ஸ்டிக்கில் அதிக அளவு காட்மியம் இருப்பதுதான் காரணம் எனவே லிப்ஸ்டிக்கை அதிகம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது அளவுகளை நிபுணர்களிடம் கலந்தாலோசித்து விட்டு பயன்படுத்தலாம்.
*லிப்ஸ்டிக் வாங்குவதற்கு முன்பு அதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களை கவனித்து வாங்க வேண்டும். அது எந்த அளவுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மனதில் கொள்ள வேண்டியவை;
*அடர் நிறங்களைக் கொண்ட லிப்ஸ்டிக்குகளை அதிகம் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அவை அதிகளவில் நச்சு ரசாயனங்களை உள்ளடக்கி இருக்கின்றன.
*லிப்ஸ்டிக் பயன்படுத்துவதற்கு முன்பு பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்துங்கள். இது உதடுகளுக்கு பாதுகாப்பு அடுக்கை வழங்கும். அதிக பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும்.
* நச்சு இல்லாத இயற்கை மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்ட உதட்டு காயங்களை உபயோகிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் லிப்ஸ்டிக் பூசுவதை தவிருங்கள். அது கருவை பாதிப்பு ஏற்படுத்தும். வாரத்தில் இரண்டு மூன்று முறைக்கு மேல் லிப்ஸ்டிக்கை உபயோகிக்காதீர்கள்.