
பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை டம்ளரில் வைத்து, கவிழ்த்து மூடி வையுங்கள். வெற்றிலலை வைத்தபடி வாடாமல் இருக்கும்.
ஸ்வாமி படங்களைத் துடைக்கும் தண்ணீரில் கற்பூரத்தை கரைத்துத்துடைத்தால் ஸ்வாமி படங்களை பூச்சி அரிக்காது.
மாலையில் வாங்கும் மல்லிகைப் பூ மறுதினத்திற்கும் வாடாமல் இருக்க, ஒரு பாத்திரத்தை நீரில் முக்கி எடுத்து அதில் பூக்களை வைத்து மூடி வைக்கவும். மறுநாள் வரை பூக்கள் வாடாமல் புதியதாக, மணமுடன் இருக்கும்.
பூஜை காரியங்களுக்கு பயன்படுத்தும் வெள்ளிப் பாத்திரங்களோடு, கூடவே சிறு கற்பூரக்கட்டிகளைப் போட்டு வைத்தால் வெள்ளிப்பாத்திரங்கள் கறுத்துப் போகாது.
பூஜை அறையைப் பளிச்சென்று வைக்க ஸ்வாமி படங்களை ஒரே சைஸில் ஆர்டர் கொடுத்து வாங்கி மாட்டவும். தெய்வ பக்தியோடு சேர்ந்து கலையார்வமும் மின்னுமே!
மாலையில் தீபம் ஏற்றும் முன்பு திரி நூல்களை ஒரு மணிநேரம் முன்பே கட் செய்து, ஒரு கப்பில் நாலு ஸ்பூன் எண்ணெய் விட்டு ஊற வைத்துவிட வேண்டும். பின் அகல்விளக்கில் அந்தத் திரிநூலை எடுத்து எண்ணெய்விட்டு ஏற்றினால் விளக்கு நன்றாக நின்று எரியும்.
சூடம், சாம்பிராணி, விபூதி, குங்குமம் போட ஒரே சைஸில் டப்பாக்கள் வாங்கி அவற்றில் கொட்டி வரிசையாக வைக்கவும்.
தீப்பெட்டி ஈரமாகி நமுப்பாக இருந்தால் அரிசி மாவை அதன் மீது தடவி விட்டுக் கொளுத்தினால் டக் என்று ஏற்ற வரும்.
ஐந்தரைப் பெட்டியை, பூஜை சாமான்களை மஞ்சள், குங்குமம், அட்சதை, சந்தன வில்லை, பஞ்சு திரி, தசாங்கம், சூடம் போன்றவற்றை போட்டு வைக்கவும் பயன்படுத்தலாம்.
பூஜையறையில் விளக்கு ஏற்ற சுத்தமான நல்லெண்ணெயைத்தான் பயன்படுத்த வேண்டும்.
பூஜைக்கு பயன்படுத்தும் மஞ்சள் கிழங்கு, குங்குமம் போன்றவை கெடாமல் இருக்க, காய்ந்த துளசி இலைகளை அவை இருக்கும்.
டப்பாவில் போட்டு வைத்தால் சிறுவண்டுகள், சிறு பூச்சிகள் வராது.
பூஜையறையில் இருக்கும் ஸ்வாமி படங்களை வாரம் ஒரு முறை அல்லது மாதம் இருமுறை மெல்லிய வெள்ளைத் துணியால் நன்றாக துடைத்து வைக்கவேண்டும்.
பூஜையறையில் பயன்படுத்தும் விளக்கை எப்போதும் நன்றாக துடைத்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பூஜையறையில், பூஜைக்கு பயன்படுத்தும் வாழைப்பழங்களை ஒரு ஈரத்துணியில் சுற்றி வைத்தால் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.