சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில், வார்டன் மித்ராவிடம் வசமாக சிக்கிக்கொண்டார். இனி மித்ரா தனது அடுத்த காயை எப்படி நகர்த்தப் போகிறார் என்பதுதான் ரசிகர்களின் அடுத்த கேள்வியாக உள்ளது.
சீரியலின் முக்கியமான கதைக்களமே முக்கோண காதல் கதைதான். அன்பு தான்தான் அழகன் என்று சொல்லாமல் ஆனந்தியை காதலித்து வந்தார். அதேபோல் மகேஷும் ஆனந்தியை காதலிக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் அன்புதான் அழகன் என்பது ஆனந்திக்குத் தெரிய வந்தது. அதுமுதல் ஆனந்தி மற்றும் அன்பு இருவரும் காதலித்து வருகிறார்கள்.
முதலில் அன்பு அம்மாவுக்கு ஆனந்தியை கண்டாலே பிடிக்காது. ஆனால், இப்போது அவரும் ஆனந்தியை ஏற்றுக்கொண்டு விட்டார்.
இதற்கிடையே வார்டன் மூலம் மகேஷ் அழகப்பனை திருமணத்திற்கே சம்மதிக்க வைத்து விட்டான். மறுபக்கம் ஆனந்தியிடம் அன்பு அம்மா பேசுகிறார். அவரும் அன்பு உடனான திருமணம் குறித்துப் பேசுகிறார். இதனால் ஆனந்தியும் அன்புவும் சந்தோஷத்தில் உள்ளனர். மகேஷ் ஆனந்தி அப்பாவிடம் பேசியது தெரியாமல் இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
நேற்றைய எபிசோடில் பார்வதியும் வார்டனும் பேசிய காட்சிகள் ரசிகர்களின் மனதை திருப்தி படுத்தியது. இதனால் கடந்த காலத்தில் என்ன நடந்திருக்கும் என்பது ஓரளவுக்கு தெரியவந்தாலும், மகேஷுக்கு எப்போது தெரிய வரும் என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.
இன்னொரு பக்கம் ஆனந்தி தன் தோழிகளுடன் கிளம்பி அன்பு வீட்டுக்கு போகிறாள். மகேஷ்-வார்டன் மற்றும் ஆனந்தி அவளுடைய தோழிகள் ஒரே நேரத்தில் ஹாஸ்டலை விட்டு கிளம்புவதை மித்ரா பார்த்து விடுகிறாள். இது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஏற்கனவே பார்வதி; மகேஷ், வார்டன், ஆனந்தி, தில்லைநாதன் என அத்தனை பேர் மீதும் பயங்கர கோபத்துடன் இருக்கிறார்.
இப்போ இந்த விஷயம் மட்டும் தெரிந்தால் கண்டிப்பாக ருத்ர தாண்டவம் ஆடி விடுவார். இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு பட்டாசு தான்.
மேலும் வார்டன் எப்படியாவது தன்னுடன் ஆனந்தியை சேர்த்து வைத்துவிடுவார் என்று மகேஷ் எண்ணுகிறார்.