நடிகை த்ரிஷா ராஜமௌலி படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். வாருங்கள் இதுகுறித்தான முழு விவரத்தையும் பார்ப்போம்.
ராஜமௌலி 2001ம் ஆண்டு ஸ்டூடன்ட் நம்பர் 1 என்றப் படத்தின் மூலம் அறிமுகமாகி 2009ம் ஆண்டு வெளியான மகதீரா படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதன்பின்னர் 2015 மற்றும் 2017ம் ஆண்டுகளில் வெளியான பாகுபலி படங்கள் பிரம்மாண்டத்தின் உச்சமாக வெளியாகின.
அதேபோல் அடுத்த ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படமும் அவதார் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரான் வரைப் பெயர் பெற்றது. இதனையடுத்து இவருடைய அடுத்தப் படத்திற்கான அப்டேட் எப்போது வரும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தவகையில் சென்ற வருடம் பிப்ரவரி மாதம் இறுதியில் தனது அடுத்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கின்றது என்றுப் பேச்சு வாக்கில் கூறினார்.
பெயரிடப்படாத அந்தப் படம் #SSMB26 என்றழைக்கப்படுகிறது. இப்படத்தில் ஹீரோவைத் தவிர எந்த நடிகை நடிகர்களையும் தேர்ந்தெடுக்கவில்லை. ராஜமௌலியின் அடுத்தப் படத்தில் கைக்கோர்க்கும் நடிகர் தெலுங்கு ஸ்டார் மகேஷ் பாபு ஆவார்.
அதேபோல், ராஜமௌலியின் வாழ்நாள் ஆசை என்றால், அது மகாபாரத கதையை படமாக எடுக்க வேண்டும் என்பதுதான். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.
பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலியின் படத்தையே நடிகை த்ரிஷா நிராகரித்திருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? ஆம்! 2010ல் வெளிவந்த ‘Maryada Ramanna’ என்ற தெலுங்கு படம் தான் அது.
காமெடி நடிகர் சுனில் அதில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடித்தால் என் கெரியர் போய்விடும் என சொல்லி த்ரிஷா நடிக்க மறுத்துவிட்டாராம்.
அதன் பின் சலோனி அஸ்வனி என்ற நடிகை ஒப்பந்தம் ஆனார். ஆனால், அந்த படம் வெளியாகி பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
நடிகரை மனதில் வைத்துக்கொண்டு இயக்குநர் யார் என்பதை மறந்துவிட்டார் போல த்ரிஷா. ஆனால், அப்போதைய காலகட்டத்தில் ராஜமௌலியின் படங்கள் ஓவர் க்ரிஞ்சாக இருந்தது என்பதே உண்மை. ஓவர் ஹைப் கொடுத்து லாஜிக்கை மிஸ் செய்துவிடுவார். ஆனால், அந்த குறையை மகதீரா படத்தின் மூலம் சரி செய்துக்கொண்டு, அடுத்தடுத்த படங்களில் மிகச்சிறப்பான இயக்கத்தை வெளிக்காட்டினார்.