சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.
சிங்கப்பெண்ணே சீரியலில் அடுத்தடுத்து விறுவிறுப்பாக நகர்கிறது. அன்பு, மகேஷ், ஆனந்தி என மூவருக்கும் இடையே முக்கோண காதல்கதை நகர்கிறது.
அந்தவகையில் அன்பு அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாததும், ஆனந்தி அதற்கு வேண்டுதல்கள் செய்து வந்ததும் விறுவிறுப்பாக நகர்ந்தன. அந்தவகையில், அன்பு அம்மாவின் உடல் நலம் சரியாகி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார். ஆகையால், அடுத்து மற்றொரு விஷயம் நடக்கப்போகிறது. ஹாஸ்டல் வார்டனின் ரகசியம் அடுத்து வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், வார்டன் யாருக்கும் தெரியாமல் தனது பீரோவிலிருந்து ஒரு புடவை மட்டும் குழந்தைகள் விளையாடும் கிளுகிளுப்பை வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனை ஆனந்தி பார்த்துவிட்டு வந்து தனது நண்பர்களிடம் சொல்கிறார். இதனை மித்ரா ஒட்டுக்கேட்டு புது ப்ளானை போடுகிறார். வார்டனின் ரகசியத்தை அறிந்து ஆனந்தியை பழிவாங்க போகிறேன் என மித்ரா கூறி இருந்தாள்.
மித்ரா தனது திட்டப்படி வார்டனின் புடவை மற்றும் கிளுகிளுப்பை எடுத்து விடுகிறார். இதை அறிந்த வார்டன் அழுதுக்கொண்டே தேடுகிறார். இதனால் ஆனந்தி மிகவும் கஷ்டப்படுகிறார்.
வார்டனின் மகன் மகேஷ் என்றுதான் சீரியல் ஆரம்பத்திலிருந்தே ட்விஸ்ட்டாக அமைந்தது. ஆனால், என்ன நடந்தது என்பதுதான் தெரியவில்லை. இதற்கான ஃப்ளேஷ் பேக் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வார்டன் , ஒரு அம்மாவாக மகேஷுடன் ஆனந்தியை சேர்த்து வைப்பேன் என்று சபதம் எடுத்திருக்கிறார்.
ஏற்கனவே அன்புதான் அழகன் என்று தெரிந்ததிலிருந்து இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வருகின்றனர். இதற்கிடையில் மகேஷ் ஆனந்தியிடம் தனது காதலை கூறுகிறார். ஆனால், ஆனந்தி அதற்கு என் உயிரைக் கூட கேளுங்கள் தருகிறேன். ஆனால், காதலை மட்டும் கேட்காதீர்கள். நான் அன்புவை காதலிக்கிறேன் என்று கூறுகிறார்.
ஆனால், வார்டனின் இந்த சபதத்தால் எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம். இந்த முக்கோண காதல் கதையில் இறுதிவரை யார் யாருடன் சேரப்போகிறார்கள் என்பதை ட்விஸ்ட்டாகவே வைத்திருக்கிறார்கள்.