பிக்பாஸ் சீசன் 8 முடிந்த நிலையில், அடுத்த சீசனின் தொகுப்பாளர் யார் என்ற கேள்விதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக முடிந்தது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, ரஞ்சித், விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். மேலும் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 6 பேர் பங்கேற்றனர்.
இதனையடுத்து ஒவ்வொரு வாரமாக போட்டியாளர்கள் எவிக்ட் ஆகிக்கொண்டே வந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் மீண்டும் எவிக்ட்டான போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்து விளையாடினார்கள். இப்படியான நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்த க்ரான்ட் ஃபினாலே நேற்று நடைபெற்று முடிந்தது. இதில் முத்து மற்றும் சவுந்தர்யா முதல் இரண்டு இடத்தைப் பிடித்திருந்தனர். இறுதியாக முத்து பிக்பாஸ் சீசன் 8ன் வெற்றியாளர் ஆனார்.
இதில் ரசிகர்களுக்கு எந்த ஷாக்கும் இல்லை. ஏனெனில் கடந்த சில நாட்களாகவே ரசிகர்களுக்குத் தெரிந்துவிட்டது முத்துதான் வெற்றியாளர் என்று. ஆகையால், ட்விஸ்ட் எதுவும் இல்லை.
முதல்முறை விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இம்முறையும் தொகுப்பாளர் மீது கலவையான விமர்சனங்களே வந்தன.
இதற்கிடையே பிக்பாஸ் சீசன் 8 நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் விஜய் சேதுபதி இந்த ஒரு சீசன் மட்டும்தான் தொகுத்து வழங்குவார் என்றும் கமல் ஒரு படிப்பை படிப்பதிலும் வேறு சில விஷயங்களில் பிஸியாக இருப்பதால் இந்த சீசன் மட்டும் வரமாட்டார் என்றும், அடுத்த சீசனில் மீண்டும் தொகுப்பாளராக களமிறங்குவார் என்றும் செய்திகள் கசிந்தன.
இதனால், ரசிகர்களும் இனி விஜய் சேதுபதி இல்லை என்று நினைத்தனர். ஆனால், நேற்று விஜய் சேதுபதிக்கென்று ஒரு வீடியோ ஒளிபரப்பானது. அதில் ஆட்டம் இதோட முடியல, தொடர்கிறது என்று விஜய் சேதுபதி சொல்லி இருந்தார்.
இதன்மூலம் அடுத்த சீசனிலும் விஜய் சேதுபதிதான் தொகுப்பாளர் என்பது உறுதியானதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.