உங்களுக்குத் தூக்கமின்மை கோளாறு உள்ளது என்பதை தெரிந்துகொள்ளும் வழிகள்!

Ways to identify insomnia Problem
Ways to identify insomnia Problem
Published on

தூக்கமின்மை என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். சிலர் 4 முதல் 5 மணி நேரம் ஆழ்ந்து தூங்கினாலே மறுநாள் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். சிலருக்கு 7 மணி நேரம் தூங்கினால் போதுமானதாக இருக்கும். இவர்களுக்குத் தூக்கம் குறித்து எந்தப் பிரச்னையும் இல்லை. அதுவே, சிலருக்கு 6 மணி நேரம் தூங்கினாலும் சரி, ஒருசிலருக்கு 9 மணி நேரம் தூங்கினாலும் சரி இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும் போல் தோன்றும். அவர்களுக்குத்தான் தூக்கமின்மை பிரச்னை இருக்கும். எனவே, தூங்கி எழுந்த பின் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள், எவ்வளவு விரைவாக தூங்குகிறீர்கள், எவ்வளவு ஆழமாக தூங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் நீங்கள் எப்படி நன்றாகத் தூங்குகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

தூக்கமின்மை ஏற்படுத்தும் பாதிப்புகள்: தொடர்ச்சியாக தூக்கப் பிரச்னை இருந்து, அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் விடும்போது, அது நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இதயக் கோளாறு, உடல் பருமன், உடலில் எண்டோகிரைன் சிஸ்டம் பாதிக்கப்படுவது போன்றவை ஏற்படும். இது நமது உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்பு ஏற்படுவது, சருமம் சார்ந்த நோய்கள் உண்டாவது, உடல் கழிவுகள் அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும், வாகன விபத்துகளையும் உண்டாக்கும். இவை தவிர, பக்கவாதம் போன்ற உடல்நலக் கோளாறுகளும் ஏற்படலாம். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி, ஹார்மோன் சுரப்பு பாதிக்கப்படலாம். எனவே, ஒவ்வொருவருக்கும் போதுமான அளவு தூக்கம் மிகவும் அவசியம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் தூக்கமின்மை பாதிப்புகள்: இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பெரும்பாலும் தூக்கத்தைத் தொலைத்து இரவில் செல்போனில் மூழ்கி விடுகின்றனர். அவர்கள் உபயோகப்படுத்தும் ஸ்மார்ட் போன், தொலைக்காட்சி மற்றும் லேப்டாப் ஆகியவற்றிலிருந்து வெளிவரும் வெளிச்சம் மற்றும் கதிர்வீச்சின் காரணமாகவும் அவர்கள் தூக்கமின்மைக்கு ஆளாகிறார்கள். இதனால், குழந்தைகளுக்கு ஞாபக சக்தி மற்றும் கவனித்தல் திறன் குறைபாடு ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளதாக பல ஆய்வறிஞர்களும் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
பழுதடைந்த கிட்னியை பலமாக்க உதவும் 10 வகை உணவுகள்!
Ways to identify insomnia Problem

தூக்கமின்மை வகைகள்: தூக்கமின்மையின் அளவுகோல்கள் வேறுபட்டு இருந்தாலும், அது தெளிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை, நிலையற்ற (transient), தீவிரமான (acute) மற்றும் நாட்பட்ட / நீடித்த (chronic) தூக்கமின்மை என மூன்று வகைப்படும். இவற்றை முறையே எளிதில் குணமாகக்கூடிய தூக்கமின்மை, சற்று கடுமையான / தீவிரமான தூக்கமின்மை, முற்றிய தூக்கமின்மை எனக் கூறலாம்.

நிலையற்ற தூக்கமின்மை: இது சில நாட்களிலிருந்து சில வாரங்கள் வரை நீடித்து இருக்கும். இது வேறொரு கோளாறின் விளைவாகவும் ஏற்படக்கூடும். தூங்கும் சூழலில் மாற்றம், தூங்கும் நேரத்தில் மாற்றம், கடுமையான மனச்சோர்வு, மன உளைச்சல் ஆகியவை இதற்குக் காரணங்களாக இருக்கலாம். தூக்கமின்மை அல்லது குறைவான தூக்கத்தினால் தெளிவான மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும்.

தீவிரமான தூக்கமின்மை: இந்த நிலையில் ஒரு மனிதன் 3 வாரம் முதல் 6 மாதங்கள் வரை தொடர்ந்து நல்ல தூக்கத்தை பெற இயலாமல் போய்விடுகிறது. பொதுவாக, இது குணப்படுத்தக்கூடிய நிலையாகவே காணப்படும்.

இதையும் படியுங்கள்:
ஏற்றுக்கொள்ளுதல் எனும் அரிய குணத்தின் சிறப்புகள்!
Ways to identify insomnia Problem

நாட்பட்ட / நீடித்த தூக்கமின்மை: பல ஆண்டுகளுக்கு நீடித்து இருக்கும் இது, முதன்மையான கோளாறாகவும் இருக்கலாம் அல்லது மற்றொரு கோளாறினாலும் ஏற்படலாம். இதன் விளைவுகள் இதன் மூல காரணத்திலிருந்து வேறுபட்டும் இருக்கும். தூங்கவே முடியாத நிலை, தசைகளில் தளர்ச்சி, மன அழுத்தம், மன தளர்ச்சிகள் இதனால் ஏற்படுகின்றன. ஆனால், நீடித்த தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட பலரும் மிகவும் விழிப்புணர்வுடன் காணப்படுகின்றனர். இந்த கோளாறுடன் வாழும் சிலருக்கு நடக்கும் சம்பவங்கள் மென்நகர்வாக (slow motion) நடப்பதை போல் தெரியும். அசைகின்ற பொருட்கள் சுற்றுப்புறத்துடன் மங்கி, ஒருங்கிணைத்து காணப்படுகின்றது. இதனால் காட்சிகள் இரண்டு இரண்டாகவும் தெரிய நேரிடுகிறது.

பகலில் தூக்கம்: இரவில் தூக்கம் வரவில்லை என பகலில் சிலர் தூங்குவார்கள். பொதுவாக, மதிய உணவு சாப்பிட்ட பிறகு அரை மணி முதல் முக்கால் மணி நேரம் வரை தூங்கலாம். ஆனால், அந்தத் தூக்கம் 2 முதல் 3 மணி நேரம் தொடர்ந்தால், இரவு தூக்கம் பாதிக்கும். எனவே, பகலில் நீண்ட நேரம் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com