
சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) சீரியலில் ரோகணி பற்றிய உண்மை எப்போது வெளியே வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் நிலையில், முத்துவின் சிறுவயது கதை குறித்த ப்ளாஷ்பேக் இந்த வாரம் ஒளிப்பரப்படவுள்ளது.
விஜய் டிவியில் பல வருடங்களாக டாப் இடத்தில் ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. ரோகிணி மாட்டுவாரா, என்றே தான் ரசிகர்களும் ஆர்வமாக கதையை கவனித்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ரோகிணி பணக்காரி இல்லை என்ற உண்மையை மொத்த குடும்பமும் அறிந்து கொண்டது. இதையடுத்து ரோகிணியை விஜயா அடித்த அடி பலரையும் மெய்சிலிர்க்க செய்தது என்றே சொல்லலாம். பிறகு எப்படியோ வீட்டிற்குள் வந்த ரோகிணி விஜயா மனதை மாற்ற தினசரி போராடி வருகிறார்.
விஜயாவின் கோபத்தால் மனோஜும், ரோகிணியும் ஒரே அறையில் தனித்தனியாக தான் வாழ்ந்து வருகின்றனர். இதுவே பெரிய விஷயமாக நினைத்து வரும் விஜயாவிற்கு விரைவில் ரோகிணி ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்தால் என்ன ஆகும் என்று தான் ரசிகர்கள் ஆவலோடு காத்து கொண்டிருக்கிறார்கள். இவர் மாட்டி கொள்வது போன்றே க்ரிஷை வீட்டிற்குள் கொண்டு வந்தனர். ஒரு பக்கம் ரோகிணியின் தாயார் ஊருக்கு செல்ல, ரோகிணியோ கிரிஷை ஒரு போர்டிங் ஸ்கூலின் ஹாஸ்டலுடன் சேர்த்து தங்க வைத்து விட்டு சென்றுவிட்டார். அங்கே கிரிஷின் உடன் பள்ளியில் பயின்று வருபவர்கள் செய்த கேலியால் கடுப்பான க்ரிஷ், ஒரு சிறுவனை அடித்து தாக்கிவிடுகிறார். இதனால் கடுப்பான அந்த சிறுவனின் தந்தை க்ரிஷை சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்க புகார் தெரிவிக்கிறார்.
ஆனால் முத்துவோ, க்ரிஷை சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கக்கூடாது என்று போராடி வருகிறார். இதற்கிடையில், மனோஜ் வீட்டில் வைத்து நீயே சிறுவயதில் சீர்த்திருத்த பள்ளியில் இருந்திருக்கிறாய். உன்னை பார்த்து தான் க்ரிஷ் ரவுடி அவதாரம் எடுத்துள்ளார் என்று கிண்டலடிக்க கடுப்பான முத்துவும், அவரின் தந்தையும் மனோஜை பலார் என அறைந்தனர். இதன் பிறகு உண்மையை அறிந்த மீனா, முத்துவிற்கு உறுதுணையாக பேசுகிறார். இனி வரும் வாரத்தில் முத்துவின் சிறுவயதில் என்ன நடந்தது என்று தெரியவரும். உண்மையில் விஜயா ஏன் முத்துவை வெறுக்கிறார் என்றும் இதில் தெரியவரும்.
அந்த வகையில் இன்றைய எபிசோட் முடிவில் வெளியான புரோமோவில், விஜயா சிறுவயதில் முத்துவை பாசமாக பார்த்து கொள்வது போலவும், ஜோசியக்காரர் சொன்னதால் தான் முத்துவை கொண்டு சென்று பாட்டி வீட்டில் விட்டது போன்றும் காட்டப்படுகிறது. ஆனால் முழு கதை என்ன என்று இனி வரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம். மொத்தத்தில் இந்த வாரம் ப்ளாஷ்பேக் வாரமாக இருக்கும்.