விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மற்றும் மீனாவிற்கு ரோகிணி மீது சந்தேகம் வந்திருக்கிறது. இதனையடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
முத்துவிற்கும் மீனாவிற்கும் இப்போது ரோகிணி மீது பெரிய சந்தேகம் வந்திருக்கிறது. அதாவது ரோகிணி அப்பா மலேசியாவில் வேலைப் பார்த்துக்கொண்டு பணக்காரராக இருக்கும்போது எதற்காக சிட்டியிடம் இருந்து பணத்தை வாங்கி வட்டிக்கு விட்டு செலவழிக்க வேண்டும். அதுவும் மனோஜுக்கு தெரியாமல் ஏன் ரோகிணி அப்படி செய்ய வேண்டும் என்று இருவருக்கும் சந்தேகம் வருகிறது.
கண்டிப்பாக இதற்கு பின்னர் எதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று யோசிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், என்னுடைய போனில் மட்டும் இருந்த வீடியோ எப்படி வெளியே போனது என்று முத்து சந்தேகிக்கிறார்.
ஆனால் நம்மிடம் எதுவும் ஆதாரம் இல்லாமல் சொன்னால் எடுப்படாது, அதனால் இதற்குப் பின்னணியில் இருக்கும் ரகசியத்தை நான் சீக்கிரமாக கண்டுபிடிக்கிறேன் என்று முத்து மீனாவிடம் சொல்லிவிட்டார். அடுத்ததாக முத்து மற்றும் மீனா இருவரும் சேர்ந்து நடிகர் வீட்டுக்கு சென்று மனோஜை ஏமாத்திவிட்டு போன கதிரை பற்றி விசாரிக்கிறார்கள்.
அந்த விசாரணையில் கதிரின் சொந்த ஊர் ஏற்காடு என்பது மட்டும்தான் தெரிந்தது. அந்த சமயத்தில் சிந்தாமணி டெக்ரேசன் ஆர்டருக்காக வீட்டிற்கு வந்து விடுகிறார். அப்பொழுது அந்த நடிகர் மண்டபத்திற்குள் இருக்கும் டெக்கரேஷன் எல்லாத்தையும் நீங்க பாத்துக்கோங்க, வெளியிலும் மாப்பிள்ளை மற்றும் மணமகள் காருக்கு டெக்கரேஷன், வீட்டு டெக்கரேஷன் எல்லாத்தையும் மீனா பார்க்கட்டும் என்று ஆர்டரை பிரித்து கொடுத்து விடுகிறார்.
கோபத்தில் இருக்கும் சிந்தாமணி, முத்து மற்றும் மீனாவை சீண்டுகிறார். அதற்கு முத்து நாங்கள் யாருக்கும் போட்டி கிடையாது. உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று சவால் விடுகிறார். பிறகு முத்து மற்றும் மீனா வீட்டிற்கு வந்ததும் அண்ணாமலை விஜயா ரோகிணி மற்றும் மனோஜ் அனைவரும் இருக்கும்பொழுது கதிரின் சொந்த ஊர் ஏற்காடு என்பது தெரிந்து விட்டது.
இதனையடுத்து கதிரை கண்டுபிடிக்க அவருடைய போட்டோ இருந்தால் மட்டும்போதும் என்று கூறுகிறார். முத்து மனோஜிடம் போட்டோ எதும் இருக்கிறதா என்று கேட்கிறார். அவர் இல்லை என்றதும் அடுத்து என்ன செய்யலாம் என்று அனைவரும் யோசிக்கிறார்கள்.
அதாவது அந்த கதிருக்கு அட்வான்ஸ் பணத்தை கோவிலில் வைத்து தான் கொடுத்தார்கள். அந்த கோவிலில் சிசிடிவி கேமரா இருக்கிறது அதை பார்த்தால் தெரிந்துவிடும் என்று மீனா சொல்கிறார். உடனே முத்து நல்ல ஐடியாவாக இருக்கிறது என்று சொல்லிய நிலையில் மீனா எனக்கு அந்த கோயிலில் நிர்வாகம் பண்ணும் அதிகாரிகளை தெரியும் என்கிறார்.
அதேபோல் அந்த வீடியோ முத்து கையில் சிக்கக்கூடாது என்று மற்றொருபக்கம் ரோகிணி ப்ளான் செய்கிறார்.
அப்போது செருப்பு தைக்கும் தாத்தாவிடம் ஒரு போன் இருக்கிறது. அதுபற்றி மீனா விசாரிக்கிறார். அந்த போன் யாருடையது என்று மட்டும் தெரிந்தால் அனைத்து உண்மைகளும் வெளிவந்துவிடும்.