தற்போது கண்ணாடி அணியும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில் கிட்டப்பார்வை பாதிப்பு காரணமாக அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை என்பது ஒரு நோய் அல்ல, அது ஒரு குறைபாடுதான் என்பதை நம் முதலில் உணர வேண்டும்.
நம் கண்ணின் உள்ளேயுள்ள விழித்திரை ரெட்டினா (Retina) என அழைக்கப்படுகிறது. இது நமது கண்ணில் உட்கடைசி உறையாகும். இது மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இதில் ஏற்படும் ஏற்ற, இறக்கம் பார்வை குறைபாட்டை ஏற்படுத்துகிறது.
ரெட்டினா விழித்திரைக்கும் கண்ணின் நரம்பு மண்டலத்திற்கும் தொடர்புள்ளது. நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை மற்றும் பல கண் குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை குறைபாடு இருக்கும். சர்க்கரை நோய் இருந்தாலும் கண் குறைபாடுகள் ஏற்படலாம்.
விழித்திரைக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்படுவதால் விழித்திரை பலகீனமாகி அதன் காரணமாக கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை குறைபாடு வந்த பின் கண்களுக்கு அதிக உழைப்பு தராமல் தேவையான அளவு ஓய்வு தர வேண்டும். எதையும் கூர்ந்து பார்க்கவோ, படிக்கவோ கூடாது. மேலும், அதிகமான ஒளியை உற்று நோக்கக் கூடாது. இது கண் பாதிப்பை மேலும் அதிகரிக்கும். நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் நமது கண்ணில் நீர் மறைத்து பார்வை குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.
கண்ணுக்குக் குளிர்ச்சி கிடைப்பதால் விழித்திரை மற்றும் நரம்பு மண்டலம் பழைய நிலைக்குத் திரும்புவதால் பார்வைத்திறன் அதிகரித்து கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குணமாகிறது. கண்ணுக்கும், விழித்திரைக்கும் இடையே உள்ள நீர் துளி விலகுவதால் நம் பார்க்கும் காட்சிகள் நமக்கு நன்றாகத் தெரிகிறது.
கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை குறைபாடு வந்த பின் அதை குணப்படுத்த உணவு முறையில் மாற்றம் தேவைப்படுகிறது. குழந்தைகள் நல்ல பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும், புரதச்சத்து நிறைந்த பால், மீன், கேரட், பீட்ரூட், மஞ்சள் நிற பழங்கள், பருப்பு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உணவு முறைகளைப் பின்பற்றி வந்தால் கிட்டப்பார்வை பாதிப்பிலிருந்து தப்பி விடலாம்.
கேரட் ஜூஸ், மாதுளை ஜூஸ் சாப்பிடலாம் மற்றும் திராட்சைப் பழத்தை ஊற வைத்து அதை கொட்டையுடன் நன்றாக அரைத்து ஜூஸ் செய்து அருந்தினால் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகள் வராமல் தடுக்க முடியும்.
நமது உடலுக்குத் தேவையான வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி12 சத்து குறைபாடுகள் காரணமாகவும், கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை மற்றும் பல கண் குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.
உலர் திராட்சை, பேரிச்சம்பழம், பப்பாளிபழம், மாதுளம் பழம், சப்போட்டா பழம் ஆகிய பழ வகைகளை சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து, கால்சியம் சத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் புளிப்பு சத்து கிடைப்பதால் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகள் வராமல் தடுக்க முடியும்.
தினமும் ஒரு பழச் சாறு அருந்தும் பழக்கத்தை நமது உணவு முறையில் கொண்டு வருவது மிகவும் நல்லது. கண்ணனுக்குப் பலம் தரும் முருங்கை கீரை மற்றும் அரைகீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொண்டால் கண் பார்வைத்திறன் அதிகரித்து கண் நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
தினமும் 20 நிமிடங்கள் சூரிய ஒளி படும்படி இருப்பவர்களுக்கும், சூரிய ஒளி படும்படி விளையாடும் குழந்தைகளுக்கும் கிட்டப்பார்வை ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.