Siragadikka aasai: பணக்காரர்களான முத்து மீனா… வாயடைத்துப்போன குடும்பம்!

Siragadikka aasai update
Siragadikka aasai
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசையில் மனோஜ் தனது பிஸினஸ் டீலுக்காக ஒட்டுமொத்த குடும்பத்தையும் பணக்காரர்கள் தோற்றத்திற்கு மாற்றுகிறார். இதன் முழு கதையையும் பார்ப்போம்.

மனோஜ் ஒரு பிஸினஸ் டீலுக்காக ஒட்டுமொத்த குடும்பத்தையும் பணக்காரர்கள் தோற்றத்திற்கு மாற்றி கடை ஓபன் பண்ண ப்ளான் செய்கிறார். இதுதொடர்பாக ரவி மற்றும் முத்துவிடம் சொல்லி சம்பந்தம் வாங்குகிறார். அதேபோல் ரோகிணி, ஸ்ருதி, மீனாவிடமும் சம்பந்தம் வாங்கிவிடுகிறார். இதனையடுத்து நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடக்கிறது.

விஜயாவை ஒரு ஹீரோயின்போல் மேக்கப் செய்து நிகழ்ச்சிக்கு கூட்டி வருகிறார்கள். அதேபோல் ஸ்ருதி மற்றும் ரவியும் கெத்தாக வந்து நிற்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து மனோஜ் மற்றும் ரோகிணி ஆகியோரும் பெரிய தொழிலதிபர்கள் போல் வந்து நிற்கிறார்கள்.

இப்படி அனைவரும் வந்து நிற்பதைப் பார்த்து விஜயா, “மீனா, முத்து வரமாட்டார்கள். மீனாவிற்கு இது செட் ஆகவில்லை என்று அப்படியே ஓடிப் போய் இருப்பார்.” என்று மட்டம் தட்டிப் பேசுகிறார். 

ஆனால் அதற்கு நேர்மாறாக முத்து மற்றும் மீனா ஆகியோரும் கெத்தாக பணக்காரர்கள்போல் வந்து நிற்கிறார்கள். இதைப்பார்த்து அங்குள்ள அனைவருமே ஷாக் ஆகிறார்கள். ஆச்சர்யத்தில் வாயடைத்துப்போய் நிற்கின்றனர். பிறகு மீனாவின் அழகை ரசிக்கும் விதமாக முத்து கொஞ்சம் ஓவராக ரொமான்ஸ் பண்ணி மீனாவை சுற்றி போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்ததும் ரோகிணி, வித்யாவிடம் இதுதான் நல்ல சான்ஸ் இன்னைக்கு எப்படியாவது முத்துவிடம் இருக்கும் வீடியோவை எடுத்து விட வேண்டும் என்று சொல்கிறார்.

இதையும் படியுங்கள்:
2024 தீபாவளி திரைப்படங்கள் ஒரு பார்வை - ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா படங்கள் இல்லை! இருந்தாலும்..!
Siragadikka aasai update

உடனே வித்யா, இதற்காகதானே அவர்களை இப்படி கூட்டி வந்திருக்கிறாய். அதனால் வேலையை முடித்துவிடலாம் என்று சொல்கிறார். மீனாவின் தம்பி வீடியோ மட்டும் கிடைத்துவிட்டால் ரோகிணி, முத்து மற்றும் மீனாவின் கூடையே இருந்து முதுகில் குத்திவிடுவார். அந்த வீடியோவை வைத்து மீனாவின் குடும்பத்தை அசிங்கப்படுத்திவிடுவார்.

அப்படி நடப்பதற்குள் முத்துவிற்கு ரோகிணியின் உண்மை முகம் தெரிந்துவிடுமா? அல்லது ரோகிணி மீனாவின் குடும்பத்தை அசிங்கப்படுத்தும்போது முத்து மீனா குடும்பத்திற்கு சப்போர்ட் செய்வாரா? போன்ற எதிர்பார்ப்புகளை நோக்கித்தான் கதைக்களம் நகர்கிறது.

logo
Kalki Online
kalkionline.com