விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹினி சிட்டியுடன் சேர்ந்து அடுத்த திட்டத்தைத் தீட்டுகிறார். இதில் சத்யா வசமாக சிக்கப்போகிறார் என்பதுதான் தெளிவாக தெரிகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா வீட்டுக்கு வந்த மருமகள்களிடம் பாரபட்சம் காண்பிக்கிறார். பணக்கார, படித்த மருமகளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். ஆனால் படிக்காத மருமகளை அடிமை போல் வீட்டு வேலை வாங்குகிறார். ஆனால் இதை கூட பொறுத்துக் கொள்ள முடியும் பெற்ற மகன்களுக்கு இடையே பாரபட்சம் பார்த்து முத்துவை ஏதோ வேண்டாத பிள்ளையாக நினைத்து அவமானப்படுத்தி வெறுத்து வருகிறார்.
யாரைப் படித்த பணக்கார மருமகள் என்று நினைக்கிறாரோ அவர் பொய் சொல்லி சமாளித்து வருகிறார். ஆம்! ரோஹினி பல பொய்களை சொல்லி இருக்கிறார்.
இப்படி கதைக்களம் நகரும் வேளையில், இப்போது ரவிக்கு முதலாம் ஆண்டு திருமண நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கிடையே ஸ்ருதியை காணவில்லை. ஆனால், எப்படியோ முத்துவும் மீனாவும் சேர்ந்து அவரை அழைத்து வந்துவிட்டனர்.
கேக் வெட்டி கொண்டாடிய பிறகு ஸ்ருதி-ரவி இருவரும் அனைவரையும் பற்றி பேசி எல்லோரையும் சந்தோஷப்படுத்திவிட்டனர். இந்த எபிசோட் முடிந்ததும் நாளைக்கான ப்ரோமோ ஒளிபரப்பானது.
அதில், ரோஹினி, வித்யா, சிட்டியை சந்தித்து வீடியோ வெளியிட்டது நீங்கள் என்ற சந்தேகம் முத்துவிற்கு வந்துவிட்டது என கூறுகிறார்.
சிட்டியும் கண்டிப்பாக முத்துவிற்கு என் மீது சந்தேகம் வரும் எனக் கூற, அப்போது சிட்டியிடம் வேலைப் பார்க்கும் ஒருவன், ஒருநாள் சத்யா உங்களைப் பற்றி கேட்டார் என்று கூறுகிறார்.
அதற்கு சிட்டி, சத்யாவை மடக்க ஒரு ப்ளான் கூறுகிறார். ஒரு பிரச்சனையில் சத்யா சிக்க வேண்டியது, நான் தான் பாவம் பார்த்துவிட்டேன். அந்த வழக்கில் சத்யா சிக்கினால் கண்டிப்பாக வெளியே வர முடியாது என்கிறார்.
இதனால், முதலில் சத்யாவை பிரச்சனையில் சிக்க வைக்கப் போகிறார்கள் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.