Siragadikka Aasai: 2 லட்சம் கேட்கும் விஜயா… முத்துவால் கொடுக்க முடியுமா?

Siragadikka aasai
Siragadikka aasai
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

சிறகடிக்க ஆசை சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் கேஸை வாபஸ் வாங்க விஜயா 2 லட்சம் கேட்கிறார். இதனை முத்துவால் கொடுக்க முடியுமா? என்பதைப் பார்ப்போம்.

கடந்த எபிசோட்களில் சத்யாவின் அம்மா போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார். முத்துவும் மீனாவும் பதற்றத்துடன் சென்று போலீஸிடம் சத்யாவின் அம்மாவை விடுவிக்குமாறு கேட்கின்றனர். ஆனால், போலீஸ் இன்னும் ஒரு நாளில் சத்யாவை கூட்டி வரவில்லை என்றால், அவர் அம்மாவையே கோர்டுக்கு அழைத்துச் செல்வேன் என்று சொல்லிவிடுகிறார்.

இதைக் கேட்டதும் நான் சத்யாவை கூட்டி வருகிறேன் என்று முத்து சொல்லி சத்யா அம்மாவை அழைத்து செல்கின்றார்.

முத்து மீனாவை கூட்டிக்கொண்டு வக்கீலை பார்க்கப் போகிறார்கள். வக்கீல் இந்த வீடியோ ஆதாரம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுவிட்டது. எல்லோரும் பார்த்திருப்பார்கள். ஆகையால், கேஸ் கைமீறி போய்விட்டது. ஆனால், உங்கள் அம்மா வந்து வாபஸ் வாங்கினால் கேஸை முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று யோசனை வழங்குகிறார்.

உடனே முத்துவும் மீனாவும் வீட்டிற்கு செல்கிறார்கள். உடனே மீனா, “நம்ம பேசினால் எப்படி அத்தை ஒப்புக்கொள்வார்?” என்று கேட்கிறார். அதற்கு முத்து நாம் பேசினால் அம்மா கேஸை வாபஸ் வாங்கமாட்டாங்க. அப்பாவிடம் சொல்லி பேச சொல்வோம் என்று அண்ணாமலையிடம் சென்று பேசுகிறாரக்ள். மீனா அண்ணாமலையிடம் கெஞ்சுகிறார்.

அந்தவகையில் அண்ணாமலை சென்று விஜயாவிடம் பேசுகிறார். விஜயாவிடம் சத்யாவின் வாழ்க்கையையும் மீனாவின் குடும்பத்தைப் பற்றியும் எடுத்துச் சொல்கிறார்.

உடனே விஜயா ஒரு செக் வைக்கிறார். அதாவது நான் கேஸை வாபஸ் வாங்குகிறேன். ஆனால், முத்து மற்றும் மீனா வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்கிறார். வேறு வழியில்லாமல் முத்துவும் மீனாவும் சம்மதம் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
டெல்லி கணேஷ் சிறந்த எழுத்தாளரும் கூட என்பது தெரியுமா?
Siragadikka aasai

ஆனால் அப்போதும் விஜயா கேஸை வாபஸ் வாங்கவில்லை. இதுபற்றி முத்துவும் மீனாவும் சென்று வக்கீலிடம் சொல்லி புலம்புகிறார்கள். இதற்கு பேசும்விதத்தில் பேசினால்தான் சரிபட்டு வரும் என்று சொல்லிவிட்டு வக்கீல் சென்று விஜயாவைப் பார்க்கிறார்.

விஜயா நான் கேஸை வாங்கினால் எனக்கு என்ன பலன் என்று கேட்கிறார். உடனே வக்கீல் 50 ஆயிரம் தருவதாக கூறுகிறார். ஆனால், அதலாம் ரொம்ப கம்மி என்று சொன்னதும். வக்கீல் 1 லட்சம் என்கிறார். ஆனால், விஜயா 2 லட்சம் வேண்டும் என்று கூறிவிடுகிறார். இதனையடுத்து வக்கீல் உடனே அங்கேயே 2 லட்சத்தை வைக்கிறார். இதைப் பார்த்து விஜயா ஷாக் ஆகிறார். இத்துடன் ப்ரோமோ முடிகிறது.

logo
Kalki Online
kalkionline.com