சிறகடிக்க ஆசை: ரோகிணியின் உண்மையை உடைக்கப்போகும் வித்யா? கோபத்தின் உச்சத்தில் மீனா!

siragadikka aasai
siragadikka aasai
Published on

"சிறகடிக்க ஆசை" சீரியலில், கிரிஷ் விவகாரத்தால் முத்து, மீனா, மற்றும் ரோகிணியின் குடும்பங்களுக்கு இடையே மீண்டும் ஒரு பெரிய பிரச்சனை வெடித்துள்ளது. கிரிஷால் முத்து மற்றும் மீனாவுக்கு தொடர்ந்து பிரச்சனைகள் வருவதைக் கண்ட ரோகிணியின் அம்மா, அவளை முத்து மற்றும் மீனாவிடம் உண்மைகளைச் சொல்லும்படி அறிவுறுத்துகிறார். ஆனால், ரோகிணியோ இதற்கு மறுக்கிறாள்.

இதனிடையே, மீனாவின் அம்மா வீட்டிற்கு ரோகிணியின் அம்மா வந்து, கிரீஷை தன்னுடன் அழைத்துச் செல்லப்போவதாகக் கூறி பிரச்சனை செய்கிறார். மீனாவின் அம்மா, "மாப்பிள்ளை வரட்டும், அப்புறம் பேசிக்கலாம்" என்று சமாதானம் செய்ய முயன்றாலும், ரோகிணியின் அம்மா, "என் பேரனை கூட்டிட்டுப் போக நான் ஏன் மத்தவங்ககிட்ட பர்மிஷன் வாங்கணும்?" என்று ஆவேசமாகப் பேசுகிறார். இதைக் கேட்ட மீனா, முத்துவுடன் உடனடியாக வீட்டிற்கு வருகிறாள்.

முத்துவும் மீனாவும் வந்ததும், ரோகிணியின் அம்மா, "என் பேரனை நான் கூட்டிட்டுப் போறேன். அவன் என்ன அநாதையா?" என்று கோபமாகப் பேசுகிறார். முத்துவும் கோபமாகி, "அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல விட்டுட்டுப் போயிட்டீங்க. அவனுக்கு அன்பு கிடைக்காம எவ்வளவு கஷ்டப்பட்டான் தெரியுமா?" என்று ஆவேசமாகப் பேசுகிறான்.

இதைக் கேட்ட மீனா, "கிரிஷ் அம்மாக்கிட்ட நான் பேசணும், போன் பண்ணி தாங்க" என்று கேட்க, ரோகிணியின் அம்மா, "என் பொண்ணுக்கு உங்களோட அவன் இருக்கிறது பிடிக்கலை. உங்ககூட இருந்தா முத்து மாதிரி ரவுடி ஆகிடுவான்" என்று திமிராகப் பேசுகிறார். இதனால் மீனா கோபத்தின் உச்சிக்குச் செல்கிறாள். "கிரிஷுக்காக முத்து எவ்வளவு கஷ்டப்பட்டாரு தெரியுமா? யாருன்னே தெரியாதவங்க கால்ல போய் விழுந்தாரு. நீங்க இப்படிப் பேசிட்டு இருக்கீங்க" என்று கொந்தளிக்கிறாள்

இதையும் படியுங்கள்:
நவராத்திரி சுண்டல்: சமையல் குறிப்புகளும், சுண்டல் டிப்ஸ்களும்!!
siragadikka aasai

இருப்பினும், முத்து, "கிரிஷுக்கு பாட்டியோட பாசமாவது கிடைக்கட்டும், நீங்க கூட்டிட்டுப் போங்க" என்று பொறுமையாகப் பேசி கிரிஷை ரோகிணியின் அம்மாவுடன் அனுப்பி வைக்கிறான். கிரிஷிடமும், "நீ உன் பாட்டியோட இருந்தாதான் உன் அம்மாவாவது உன்னைப் பார்ப்பாங்க" என்று சொல்லி அனுப்பி வைக்கிறான்.

கிரிஷை அழைத்துச் சென்ற ரோகிணியின் அம்மா, வீட்டுக்கு வந்ததும் கண்ணீர் விட்டு அழுகிறார். "அந்த பிள்ளைகளை ரொம்ப திட்டிட்டேன். என்னை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசலை. பாவத்துக்கு மேல பாவம் பண்ணிட்டு இருக்கேன்" என்று புலம்புகிறார். அப்போது வித்யா, "அவங்ககிட்ட உண்மையைச் சொல்லுன்னு நான் பல தடவை உன்கிட்ட சொல்லிட்டேன்" என்று ரோகிணியிடம் கோபமாகச் சொல்கிறாள்.

ஆனால் ரோகிணியோ, "மனோஜ் எது நடந்தாலும் என்னை விட்டுப் போகமாட்டான் அப்படின்ற நிலைமை வரும்போது, உண்மையை கண்டிப்பா சொல்லுவேன். அதுவரை கொஞ்சம் அமைதியா இருங்க" என்று கூறி, அம்மாவைத் தன் வீட்டிலேயே தங்கிக்கொள்ளும்படி கூறுகிறாள்.

இதையும் படியுங்கள்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: அரசியின் அதிர்ச்சி முடிவு! சரவணன் - மயில் இடையே திடீர் மோதல்!
siragadikka aasai

வீட்டிற்கு வந்த முத்து, நடந்த விஷயங்களை ரவி மற்றும் ஸ்ருதியிடம் சொல்கிறான். அப்போது மனோஜ், "அவங்க சொன்னதுல என்ன தப்பு? இவன் ரவுடிதானே" என்று கேலி செய்ய, மீனா, "அவர் ரவுடின்னு நீங்க பார்த்தீங்களா? யார்கிட்ட எப்படிப் பேசணுமோ அப்படிப் பேசுவாரு" என்று பதிலடி கொடுக்கிறாள். மேலும், மனோஜ், ராணியை வீடியோ எடுத்த விவகாரத்தில் சிக்கிக்கொண்டதையும் சொல்கிறான். அதற்கு ரவி, "முத்து கொடுத்தது நல்ல ஐடியாதான், நீ சொதப்பிட்டு வந்து அவனைக் குறை சொல்றியா?" என்று மனோஜைக் கண்டிக்கிறான்.

இந்த பிரச்சனையில் இருந்து மனோஜ் எப்படி தப்பிக்கப் போகிறான் என்பதை அடுத்த எபிசோடில் காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com