தமிழ் சினிமா 2.0: ஓடிடி மற்றும் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் மாறியுள்ள திரையுலகம்!

உலகளாவிய ரசிகர்களைக் கவர்ந்து, பிரம்மாண்ட எல்லைகளைத் தொட்டு நிற்கும் தமிழ் திரையுலகின் புதிய டிஜிட்டல் புரட்சி.
புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் மாறியுள்ள தமிழ் சினிமா
புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் மாறியுள்ள தமிழ் சினிமா
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தமிழ் என்டர்டெயின்மென்ட் உலகில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ஓடிடி தளங்களின் வரவால் தற்பொழுது ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்கள், உலகளாவிய கதைக்களங்கள் மற்றும் ஓடிடி தளங்களின் எழுச்சி ஆகியவை தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. வழக்கமான குடும்ப கதைகளைத் தாண்டி யதார்த்தமான கதைக்களங்கள், புதிய தொழில்நுட்பங்கள், குறுகிய வடிவங்கள்(short format) மற்றும் துணிச்சலான கதைக்களங்கள் என புதிய பரிமாணங்களை எட்டியுள்ளன.

அதிநவீன தொழில்நுட்பம் நிறைந்த ஹாலிவுட் தரத்திலான விஷுவல் எஃபெக்ட்ஸ்(VFX) காட்சிகள், பழைய ஸ்டுடியோ செட்களுக்கு பதிலாக பிரம்மாண்டமான செட் அமைப்புகள், அவுட்டோர் படப்பிடிப்புகள், ட்ரோன் கேமராக்கள் மற்றும் சினிமாவுக்கு இணையான ஒளிப்பதிவு ஆகியவை சின்னத்திரையில் பயன்படுத்தப்படுகின்றன. தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சீரியல்கள் தமிழில் தற்போது சர்வ சாதாரணமாக உருவாகின்றன.

சீரியல்களின் காட்சிகள், ப்ரோமோக்கள் மற்றும் பிஹைண்ட்-தி- சீன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. நடிகர்களின் ரீல்ஸ் வீடியோக்கள் ரசிகர்களை ஈர்ப்பதால் சீரியல்களின் ரீச் பல மடங்கு அதிகரித்துள்ளது.

வழக்கமான கமர்சியல் தொடர்களைத் தாண்டி பெண்களின் சுயமரியாதை, தொழிலில் சாதிக்கும் பெண்கள், சமூகப் பிரச்சனைகள் மற்றும் உளவியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதைகள் இப்போது அதிகம் தயாரிக்கப்படுகின்றன. இவை தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகின்றன.

ஓடிடி மற்றும் டிஜிட்டல் தளங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தொலைக்காட்சிக்கு வருவதற்கு முன்பே ஓடிடி தளங்களில் முன்கூட்டியே எபிசோட்களை பார்க்கும் வசதிகள் வந்துவிட்டன. இதனால் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப சீரியல்களின் வேகமும் திரைக்கதையும் பன்மடங்கு மாறியுள்ளது. Netflix, amazon prime, ஆஹா தமிழ் மற்றும் ஜி5 போன்ற தளங்கள் நேரடித் திரைப்படங்கள் மற்றும் பிரத்யேக வெப் சீரிஸ்களை வழங்குகின்றது. பிராந்திய எல்லைகளைத் தாண்டி உலக நாடுகளில் உள்ள தமிழ் அல்லாத பிற மொழி ரசிகர்களையும் தற்பொழுது தமிழ் சினிமா மற்றும் சீரியல்கள் கவர்ந்து, உலகளாவிய பார்வையாளர்களைச் சென்றடைகின்றன. இதனால் தமிழ் சீரியல்கள் மற்றும் திரைப்படங்களின் எல்லைகளும், சந்தையும் பன்மடங்கு விரிவடைந்துள்ளன.

சூப்பர் ஹீரோக்கள் மற்றும் வழக்கமான கமர்சியல் ஃபார்முலாக்களைத் தாண்டி, சமூக விழிப்புணர்வு, மாற்று அரசியல் மற்றும் மக்களின் யதார்த்த வாழ்வியலைப் பேசும் சுயாதீனப் படங்கள்(Independent films) மற்றும் குறும்படங்கள் (Micro Dramas/Kutti Series)அதிகம் உருவாகின்றன. திரைக்கதை அமைப்பில் புதிய பரிமாணத்தை புகுத்தும் இளம் இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கைவண்ணத்தால் இவை சாத்தியமாகியுள்ளன. டிவி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், மொபைல் ஃபோன் பயனர்களைக் கவரும் வகையில் குறுந்தொடர்கள் அறிமுகமாகியுள்ளது மக்களிடையே புதிய பார்வையை ஏற்படுத்தியுள்ளன.

புதிய திறமையாளர்களுக்கு யூட்யூப்(YouTube) மற்றும் சமூக வலைதளங்கள் மிகப்பெரிய மேடையாக மாறியுள்ளன. சினிமா பாடல்களுக்கு இணையாக youtube மட்டும் spotify போன்ற தளங்களில் ஆல்பம் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இன்டிபென்டன்ட் கலைஞர்களுக்கான வாய்ப்புகள் பெருகியுள்ளன. குறும்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் வ்லாக்(Vlog ) மூலமாகப் புதிய திறமையாளர்கள் சீரியல்களுக்குள்ளும் சினிமாவுக்குள்ளும் எளிதாக நுழைகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
மயில் முதல் கருத்தம்மா வரை; பாஞ்சாலி முதல் ஜெனிபர் டீச்சர் வரை - பாரதிராஜா படைத்த பெண் பாத்திரங்கள்
புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் மாறியுள்ள தமிழ் சினிமா
logo
Kalki Online
kalkionline.com