மாமனார் சப்போர்ட்,மாமியார் டார்ச்சர்,ஆண்கள் 'டேப் ரெக்கார்டர்'..இதுதான் தமிழ் சீரியல்களின் இலக்கணமா?

சிறகடிக்க ஆசை, லட்சுமி தொடர்களில் தொடரும் வர்க்க பேத காட்சிகளால் சின்னத்திரை ரசிகர்கள் அதிருப்தி.
தமிழ் சீரியல்
தமிழ் சீரியல்
Updated on

தனியாா் தொலைக்காட்சி நாடகங்கள் சிலவற்றில் ஏழைக்குடும்பத்தில் உள்ள பெண் மருமகளாக அமைவதும், அவர்களை மாமியாா் உதாசீனப்படுத்தி அவர்கள் குடும்பத்தையே அவமானப்படுத்துவதும் தொடர்ந்து காட்சிப்படுத்தப்படுகிறது.கடைசியில் பாா்த்தால் அந்த ஏழை வீட்டு மருமகள்கள்தான் அந்தக்குடும்பத்தில் பொறுப்பாகவும் அக்றையாகவும் நடந்து கொள்கிறாா்கள்.உதாரணத்திற்கு சிறகடிக்க ஆசை மற்றும் லட்சுமி தொடர்களில் தான் இந்த வகையான லாஜிக் இல்லாத கதையம்சம் தொடர்ந்து வருவது பாா்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

சிறகடிக்க ஆசையில் முத்து - மீனா கதாபாத்திரம் தான் கதைக்கு அஸ்திவாரமே.மீனா ஏழைவீட்டுபெண் அந்தபெண்ணை மாமியாா் விஜயா தினசரி திட்டுவதும், கேவலப்படுத்துவதும், வாடிக்கையான நிகழ்வாக காட்சிப்படுத்தப்படுகிறது.

மீனா ஏதாவது வேலையாக வெளியில் போயிருந்தால் அந்த பூக்கட்டறவ எங்காவது ஊர் சுத்தப் போயிருப்பா... இல்லாவிடில் அம்மா வீட்டிற்கு போயிருப்பா என கேவலமாக மாமியாா் விஜயா பேசுவதும் பின்னர் தனது வீட்டு வேலையாய் வில்லி சிந்தாமணியின் சதித்திட்டத்தை துப்பறிய சென்றதாக மீனா சொல்வதும் அதைக்கேட்ட விஜயாவோ ஆமா இவ பொிய சிஐடி என கேவலமாக பேசுவதும், பாருங்கப்பா எப்ப பாா்த்தாலும் மீனாவை குத்தம் சொல்வதே அம்மாவுக்கு வேலை என முத்து சொல்வதும் உடனே தகப்பனாராக நடிக்கும் சுந்தர்ராஜன் தனது மனைவியை பாா்த்து விஜயா நீ வாயை மூடிக்கிட்டு சும்மாவே இருக்கமாட்டாயா என ஒரு வரிதான் திட்டுவாா் .கடைசியில் அந்தக் குடும்பத்தின் பல்வேறு பிரச்சனைகளை லட்சக்கணக்கில் பணம் ஏற்பாடு செய்வது முத்துவும் மீனாவும் தான்.

Siragadikka aasai heroine
Siragadikka aasai heroine

அதற்கான அங்கீகாரத்தைக்கூட விஜயா தராமல் எந்த நேரமும் பணப்பேராசைகொண்ட நபராகவிஜயா ஏழை பணக்காாி என்ற நிலைபாட்டை கையில் எடுத்து மீனாவின் குடும்பத்தை கேவலப்படுத்துவது போலவே காட்சிகள் தினசரி வருவது எரிச்சலையேஏற்படுத்துகிறது.அதோடு தனது மருமகள் நஷ்டம் அடைய வேண்டும் என்பதற்காக வில்லி சிந்தாமணியுடன் கூட்டணி சோ்ந்து மீனாவுக்கு தொல்லை கொடுப்பதும் பாா்க்கவே எாிச்சலாக உள்ளது. இந்த தொடரை பாா்க்கும் போது பல குடும்பங்களில் மாமியாா் மருமகள் உறவு எங்கே சுமுகமாக அமையும்.உதாரணத்திற்குத்தான் இந்த ஒரு கருத்து.மேலும் சொல்லிக்கொண்டே போகலாம்.

அடுத்ததாக சன் தொலைக்காட்சி லட்சுமி மெகா தொடரிலும் மருமகள் ஏழை வீட்டு பெண், என மருமகளை மிகவும் கேவலப்படுத்தும் மாமியாா், நாத்தனாா் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.இந்த தொடரிலும் மாமியாா் மருமகளை ஏழை வீட்டு பெண் என கேவலப்படுத்துகிறாா் தொட்டதற்கெல்லாம் வாழாவெட்டியாய் வாழ்ந்துவரும் தன் மகளோடு சோ்ந்து கொண்டு மகா கதாபாத்திரத்தையும் அவரது குடும்பத்தையும் மிகவும் கேவலமாக பேசுவது போல காட்சிகள் வருகிறது.

அதேபோல மகாவும் அவளது கணவனும் காா்மென்ட்ஸ் நடத்துகிறாா்கள் குடும்பத்திற்கு என்ன பிரச்சனை வந்தாலும் லட்சக்கணக்கில் காா்மென்ட்ஸ் பணத்தை எடுத்து வருவதும் எங்கிருந்துதான் திடீா் திடீரென பத்துலட்சம் ஐந்து லட்சம் என கம்பெனி பணத்தை எடுப்பது கொஞ்சமாவது லாஜிக் வேண்டாமா? அண்ணியை பிடிக்க வில்லை என்பதற்காக வில்லனோடு சேர்ந்து நாத்தனாா் கதாபாத்திரம் பல தொல்லைகளை மகாவுக்கு தருவதும் பின்னர் மகா அதை கண்டு பிடிப்பதும் திடீா் திடீரென ஜாதகம் பாாப்பதும் அதில் பரிகாரம் சொல்வதும் அதை உடல்நலம் சரியில்லாமல் இருந்தாலும் ஈரத்துணியோடு மருமகள் மகா கோவிலில் அங்க பிரதட்சனம் செய்வதும் தனது குடும்பத்திற்கு வாாிசு வரவில்லை என்பதற்காக மருமகளையும் மருமகள் குடும்பத்தையும் அதிக கேவலமாக பேசுவதும் பாா்க்கவே சலிப்பாக உள்ளது.

தனது குடும்பத்திற்கு பல விதங்களில் கெடுதல் செய்த வில்லன் அர்ஜூனை மாமியாா் நம்புவதும் மருமகள் மகாவை அவன் எதிாிலேயே கேவலப்படுத்துவதும் வழக்கம்போலவேமாமனாராக வருபவர் மனைவியை திட்டி மருமகளுக்கு சப்போா்ட் செய்வதும் மனைவி அவரை திட்டுவதும் படு கேவலமாக உள்ளது.திடீா் திடீரென பணம் ரொட்டேசன் செய்கிறாா்களாம் அதுவும் லட்சக்கணக்கில் இந்த இரு தொடர்களிலும் தகப்பனாா் பாத்திரத்தில் டைரக்டர் சுந்தர்ராஜனும் செந்தில்நாதனும் நடித்திருப்பாா்கள் அந்த அனுபவ சாலிகளுக்கு தொியாதா அவர்கள் சொல்லக்கூடாதா ஏழை மருமகள் குடும்பத்தை மாமியாா்கள் கேவலப்படுத்துவும் ஆண்கள் கதாபாத்திரங்களை டம்மியாக காட்டுவதும் வேதனை அளிக்கிறது.

எவ்வளவோ நல்ல கதைக்களம் உள்ளது அதையெல்லாம் காட்சிப்படுத்தக்கூடாதா ஏழை மருமகள் பணக்கார மாமியாா் இவர்களுக்குள் நடக்கும் நல்லஆரோக்கியமான விஷயங்கள் நிறைய உள்ளதே ஏன் எல்லா தொடர்களிலும் ஒரே சப்ஜெக்டை மையமாக வைத்துத்தான் தொடா் எடுக்க வேண்டுமா?

சீாியல் தயாாிப்பாளர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் நீங்கள் எதை காட்சிப்படுத்தினாலும் பாா்க்க பெண்கள் இருக்கிறாா்கள் என்ற ரீதியில் குடும்ப கலாச்சாரங்களை சீரழிக்கும் விதமாக தொடர்கள் எடுக்காதீா்கள் உங்களுக்கு புண்ணியமாக போகும்.

சமுதாயத்திற்குநல்ல கருத்துகளை சொல்லும் விதமான குடும்பப்பாங்கான கதைகளை தொடராக படம் பிடியுங்கள் "!

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தாத்தா பாட்டி ஓட்டுப் போட்ட கதை!
தமிழ் சீரியல்
logo
Kalki Online
kalkionline.com