
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி சீரியல் விரைவில் விடைபெறும் நிலையில், தற்போது மற்றொரு சீரியலும் முடிவுக்கு வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தற்போதுள்ள காலகட்டத்தில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும், முதியோர்களுக்கும் மிக பெரிய பொழுதுபோக்கு என்றால் டிவியில் வரும் சீரியல்கள் தான். ஒவ்வொரு சேனல்களும் போட்டிபோட்டுக்கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் பல வகையான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
சன் டிவிக்கு சரியான போட்டி என்றால் அது விஜய் டிவி தான். வாரந்தோறும் நடைபெறும் டிஆர்பி ரோட்டிங்கில் சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் கடுமையான போட்டி நிலவும்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுடன் ஒப்பிடும் போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது என்றே செல்லலாம். அதற்கு காரணம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் குடும்பத்துடன் பார்க்கும் வகையிலும், சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவரும் ரசிக்கும் கதைக்களத்தில் புதுப்புது யுத்திகளை கையாண்டு இருப்பார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாக்கியலட்சுமி’ சீரியல் குடும்பங்கள் கொண்டாடிய சீரியலாக வலம் வந்தது. கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் கிட்டத்தட்ட 1500 எபிசோடுகளையும் கடந்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி மக்களின் மனதை கொள்ளை கொண்டது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக விஜய் டிவியில் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மற்றொரு சீரியலும் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைச்செய்துள்ளது.
‘பாக்கியலட்சுமி’ சீரியலை தொடர்ந்து ‘தங்கமகள்’ சீரியலும் தற்போது முடிவுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தங்கமகள்’ சீரியலில் நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அஸ்வினி நடித்திருந்தார். குடும்ப பெண்களை கவரும் வகையில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.தங்கமகள் சீரியல்
தங்கமகள் சீரியல் தொடங்கி ஒன்றரை ஆண்டுகளே ஆனநிலையில் விரைவில் முடிவுக்கு வருவது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில் இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் பெரிய அளவில் டிஆர்பி கிடைக்காததே முடிவுக்கு வர முக்கிய காரணமாகக் சொல்லப்படுகிறது. இந்நிலையில் 'தங்கமகள்' சீரியலின் கிளைமாக்ஸ் அடுத்த இரண்டு வாரங்கள் ஒளிபரப்பாகும் எனவும் விஜய் டிவி அறிவித்துள்ளது.
பாக்கியலட்சுமியை தொடர்ந்து தங்கமகள் சீரியலுக்கு முடிவுக்கு வர உள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும் இந்த இரு சீரியல்களும் விடைபெறும் நிலையில் புதிதாக எந்த சீரியல் வர உள்ளது, அந்த சீரியல் எப்படி இருக்கும் என்ற ஆர்வமும் ரசிகர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.