
சன் டிவிக்கு டஃப் கொடுக்கும் விஜய் டிவி புதுப்புது ரியாலிட்டி ஷோக்களையும், குடும்பங்கள் கொண்டாடும் சீரியல்களை கொண்டு வந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மற்ற டிவிகளுடன் ஒப்பிடும் போது விஜய் டிவியில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொடர்கள் அதிகளவு ஒளிபரப்பாகி வருகிறது என்றே சொல்லலாம் . அந்த வகையில் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ், அய்யனார் துணை, சின்ன மருமகள், மகாநதி போன்ற தொடர்கள் டாப் டிஆர்பியில் ஓடிக் கொண்டிருக்கிறது.
விஜய் டிவியில் கடந்த 5 வருடங்களாக மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்த பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் தங்கமகள் சீரியல் இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு பதிலாக என்ன புது சீரியல் வர போகிறது, சீரியல் எப்படி இருக்கும், யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் குறித்த தகவல் கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருந்த நிலையில் ப்ரோமோவும் வந்திருந்தது.
பாக்கிய லட்சுமி சீரியலில் நடித்து புகழ் பெற்ற ரேஷ்மா பசுபுலேட்டி, நீ நான் காதல் புகழ் வர்ஷினி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் நாயகனாக நடிகர் அவினாஷ் நடிக்கும் ‘மகளே என் மருமகளே’ என்ற சீரியல் விரைவில் தொடங்க உள்ளதாக ப்ரோமோ வெளியாக ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாக்கியலட்சுமி தொடரில் எதிர்மறை பாத்திரத்தில் பார்த்த ரேஷ்மா பசுபுலேட்டியை, இந்தத் தொடரில் நேர்மறையான பாத்திரத்தில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் சீரியல், இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளதால், இந்தத் தொடருக்கு மாற்றாக ‘மகளே என் மருமகளே’ என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. மகளே என் மருமகளே என்ற புதிய தொடர் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்குஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகன் இறந்துவிட்ட நிலையில் தனது மருமகளை சொந்த மகள் போல் எண்ணி பார்த்துக்கொள்கிறார் மாமியார். மகன் இறந்து விட்டாலும், மகனின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்ற துடிக்கும் தாய் கதாபாத்திரத்தில் ரேஷ்மாவும், இளம் வயதில் கணவரை இழந்து மாமியார் வீட்டில் மகளாக வாழும் கதாபாத்திரத்தில் வர்ஷினி சுரேஷ்ம் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அந்த ப்ரோமோவில் மகன் இறந்துவிட்ட நிலையில் தனது மருமகளை சொந்த மகள் போல் எண்ணி அவளுக்கு நகைகள் போட்டு அழகு பார்க்கிறார் மாமியார். அப்போது அந்த வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரன் கதாநாயகியின் நெற்றியில் பொட்டு இல்லாமல் இருப்பதை பார்த்து கொஞ்சம் எல்லைமீறி கதாநாயகிக்கு பொட்டு வைத்துவிட, அதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாமியார் வேலைக்காரனை கன்னத்தில் பளார் என்று அடிப்பதை போல் ப்ரோமோ வெளியானது.
ப்ரோமோவே அதிரடியாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் விரைவில் வெளியாக உள்ள ‘மகளே என் மருமகளே’ சீரியலை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தெலுங்கில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமான ‘மகுவா ஓ மகுவா’ என்ற சீரியல், தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ‘மகளே என் மருமகளே’ என்ற பெயரில் தொடராக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.