சன் டிவியில் முடிவுக்கு வரும் முக்கிய தொடர்… ரசிகர்கள் ஷாக்!

Sundari and Iniya serials
Sundari and Iniya serials
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

சன் டிவியில் மக்கள் விரும்பிப் பார்க்கும் ஒரு தொடர் முடிவுக்கு வரவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமாவை போலவே சீரியல்களும் தற்போது பெரிய அளவு ரசிகர்களைக் கொண்டுள்ளது. புது புது திருப்பங்களுடன் புது புது கதையம்சங்களுடன் ஆரம்பமாகும் தொடர்களை மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். சீரியலுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. குறிப்பாக இல்லத்தரசிகள் காலை முதல் இரவு வரைத் தொடர்ந்து சீரியல்கள் பார்க்கிறார்கள். வேலைக்குப் போகும் ரசிகர்கள் கூட வரும்போதும் போகும்போதும் ஓடிடியில் பார்த்துவிடுகின்றனர்.

சீரியல்களின் வெற்றிக்கு ஒரு உதாரணம் எதிர்நீச்சல். எப்போதும் இல்லத்தரசிகளின் கவனத்தை மட்டுமே ஈர்க்கும் சீரியல்களில், எதிர்நீச்சல் இளைஞர்களின் கவனத்தையும் ஈர்த்தது. டிஆர்பி ரேட்டிங்கில் மத்த சீரியல்கள் நெருங்கக்கூட முடியாத அளவிற்கு ஹிட்டானது. ஆனால், அந்த சீரியலும் முடிவுக்கு வந்தது.

முன்பெல்லாம் சீரியல்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும். ஆனால், சீரியல்களின் மவுஸ் கருதி இப்போது 7 நாட்களும் ஓடுகின்றன.

அந்தவகையில் மற்றொரு பிரபல தொடர் சன் டிவியில் முடிவுக்கு வரவுள்ளது. ஆம்! ஆலியா மானசா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் முடிவுக்கு வரவுள்ளது. இந்த சீரியல் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து 2 ஆண்டுகள் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு வரை டிஆர்பியில் சக்கைப்போடு போட்டு வந்த இனியா சீரியல் கடந்த சில மாதங்களாகவே டாப் 10 பட்டியலில் இடம்பிடிக்காததால் அதனை தற்போது முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 
Sundari and Iniya serials

ஆனால், இன்னும் இதுதொடர்பான அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகவில்லை. எந்த புது தொடரின் ப்ரோமோவும் வெளியிடப்படவில்லை. ஆனால், இனியா சீரியலின் முடிவுக் குறித்த செய்திகள் மட்டும் வெளியாகியுள்ளன. இதனையடுத்து ரசிகர்கள் இந்த தொடரை ஏன் முடிக்கிறீர்கள் என வருத்தப்பட்டு பதிவிட்டு வருகிறார்கள். 

மேலும் சிலர் சீக்கிரம் முடிச்சுவிடுங்கப்பா அப்டியே இந்த சுந்தரி சீரியலையும் முடிச்சுவிடுங்கப்பா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com