
ஓடிக்கொண்டிருக்கும் எந்த வகை வண்டியும் நடுவில் நின்று விடக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும். அப்படி திடீரென்று நின்று விட்டால் ஓட்டுநர் மற்றும் அதில் பயணம் செல்பவர்கள் அதிர்ச்சி அடைவதும், விவாதங்கள், விமர்சனங்கள் நடை பெறுவதும் சகஜம். நின்ற வண்டி சரியாகி பயணம் தொடரும் வரையில் பயணம் தடை பெற்றதன் காரணங்கள் ஆராய படும், யோசனைகள் தானாகவே வரும்.
தடங்கல் எதிர்மறையாக கருத்தப்பட்டாலும் நேர்மறை சிந்தனை உடைய ஒரு சிலரால் அந்த சூழ்நிலையிலும் நேர்மறை பாயிண்ட்ஸ் காணமுடியும்.
வண்டி நிற்பது ஒரு உதாரணம்.
வாழ்க்கை என்ற வண்டி சக்கரம் சுழன்று செல்லும்பொழுது மனிதர்கள் பல்வேறு சூழ்நிலைகள் கடந்து செல்லவேண்டிய நியதியில் கட்டுப் பட்டுள்ளார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.
தனி மனிதர் திட்டமிடலாம், எல்லாம்எப்பொழுதும் நேர்மறையாக தடங்கல்கள் வராமல் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று நேர்மறையாக சிந்தித்து கொள்ளலாம், இஷ்ட கடவுளிடம் மனம் உருக பிரார்த்திக்கலாம், முழு திறமை, நம்பிக்கையோடு ஈடுபடலாம். தவறில்லை. தேவை. இவை எல்லாம் அவசியம் தேவை, தேவையான நேர்மறை முடிவு பெற.
ஆனால் ஒரு அடிப்படை கருத்தை யாராலும் மறுக்க முடியாது. எல்லோருக்கும், எப்பொழுதும் நினைக்கிற மாதிரி நேர்மறை முடிவுகள் கிடைக்காது. அதற்கு பல உள்ளடங்கிய உண்மையான காரணங்கள் இருக்கும். (hidden truth)
வெற்றி அடைய தோல்வி என்ற தடங்கல் இன்றியமையாதது. தடங்கல் தடை என்றாலும் தனி நபரை கேட்டுக்கொண்டு வருவது கிடையாது.
வெற்றிப் படிகளில் முன்னேறும் பொழுது எந்த வகையிலும் வரும் தடங்கல் முன்னேறுவதின் வேகத்தை கட்டாயம் குறைக்க பெரும் பாலும் வழி வகுக்கும். அந்த வகை தடங்கலுக்கு வருந்திக் கொண்டு இருப்பது மேலும் நேரம் விரயம் ஆகும். அதை தவிர்த்து தடங்கலுக்கான காரணத்தை கண்டு ஆராயந்து விடுபட்டு சரி செய்து விரைவாக முன்னேற்ற பாதையில் முன்னேற முயற்சிக்க வேண்டும்.
அத்தகைய தடங்கல் சில சமயங்களில் சம்பந்தப் பட்ட நபர் அறியாமலேயே சில நன்மைகள் கூட செய்யலாம்.
ஏற்பட்ட தடங்கல் புது பயன் தரும் யோசனைக்கு வழி காட்டலாம்.
தடங்கலை சந்தித்து அனுபவம் பெரும் நபருக்கு புது பாடம் கற்றுக் கொள்ளவும் சந்தர்ப்பம் கிட்டலாம்.
தடங்கலை கண்டு தயங்காமல், துவளாமல், ஏமாற்றம் அடையாமல் எதிர் கொண்டு அந்த தடங்கல் என்னும் தடை கல்லை அடுத்த நிலைக்கு ஏறி செல்ல உதவும் மாடிபடி கல்லாக நினைத்து மாற்றி அமைத்துக் கொண்டு முன்னேறி செல்பவர்களுக்கு எந்த வகை தடங்கலும் தடங்கல் செய்யாது.